Saturday 15 December 2012

என்றென்றும் லிவெர்பூல். . .


 நான் ஒரு 'லிவெர்பூல்' ஆதரவாளன்.

திறந்த புத்தகமாக வாழ்க்கை மாறிவிடும் போது கூடவே வருபவை நன்மை தீமை என இரண்டும். சிலர் ஆதரிப்பதும் சிலர் எதிர்ப்பதும் இயற்கை. அதற்காக நம் நிலையை நாம் மற்றிக்கொண்டால் அது ஞாயமாகுமா...?

1984ல் இருந்து இன்றுவரை நான் விரும்பி பார்க்கும் பிரிமியர் லீக் பந்து விலையாட்டுக் குழு, லிவெர்பூல் மட்டுமே. அது வெற்றி பெரும்போது மகிழ்வதும் தோல்வியுறும் போது சோர்ந்து போவதும் வழக்கமாகிவிட்ட ஒன்று.

அன்மைக்காலங்களில் அவர்கள் திருப்தியளிக்கும் விதம் விலையாடவில்லை என்று பலதரப்பட்டவர்களிடம் இருந்து குறைகள் வந்துகொண்டிருந்தாலும், லிவெர்பூலின் ஆதரவாளர்கள் யாரும் இக்குழுவை விட்டு வெளியேறியதாக தெரியவில்லை. வெற்றியிலும் தோல்வியிலும் எங்களின் இனிய கால்பந்துவிலையாட்டுக் குழு, லிவெர்பூல்.

No comments:

Post a Comment