Friday 7 December 2012

ஆஸ்ட்ரோ . . .


'ஆஸ்ட்ரோ' தனியார் தொலைகாட்சிக்கு நாம் செலவிடும் மாதாந்திர தொகை ஞாயமானதா....? 

கட்டனம் கட்டப்பட்ட எல்லா அலைவரிசைகளையும் நாம் பார்க்கிறோமா அல்லது 'பாக்கேஜ்' சலுகை என பார்க்காதவற்றுக்கும் சேர்த்தே நாம் பணம் கட்டுகிறோமா....?

அனைவருக்கும் தேவையான அனைத்தும் ஒருங்கே கிடைக்கும் தொலைகாட்சி நிலையம் என அவர்கள் விளம்பரப் படுத்திக்கொண்டாலும், அவற்றில் நமக்கு தேவை எவ்வளவு, அவை எந்தெந்த அலைவரிசைகளில் கிடைக்கின்றன என்பதை நாம் அலசி ஆரய்ந்து பார்த்தோமானால், வீணே செலவிடும் பணத்தை  தவிர்க்கலாம். 

எனக்குத் தெரிந்த சிலரின் வீடுகளில் ஆஸ்ட்ரோ என்பது ஒரு கௌரவ தொலைகாட்சியாகவே இருக்கிறது.  நம்ப சிரமாக இருந்தாலும், இதுவும் உண்மையே.  செய்திகள் பார்ப்பதில் மட்டுமே ஆர்வம் கொள்ளும் அவர்கள் கட்டனமாக கட்டுவது எல்லா அலைவரிசைகளுக்கும். 

சிலரின் கைகளில் பணம் எப்படியெல்லாம் விரையமாகிறது பாருங்கள்....

பொதுவாக தொலைகாட்சியின் ஆதிக்கம் என்பது பல கெடுதல்களை ஏற்படுத்தும் ஒன்றாகவே கணிக்கப் படுகிறது. அவற்றுக்கும் சேர்த்தே நாம் பணத்தை இழக்கிறோம் மாதாந்திர தவணையில்.

No comments:

Post a Comment