Thursday 6 December 2012

மலரும் நினைவுகள்...

திருமணம் என்பது, உற்றார் உறவினரை அழைப்பதும், அவர்கள் முன்னிலையில் பெண்ணைத் தாலி அனிவித்து மனைவி ஆக்கிக்கொள்வதும் மட்டுமல்ல. இது மணமுடிக்கும் இருவரின் பார்வையாக இருக்கலாம். திருமணம் என்பது அதற்கும் மேலே...

பொதுவாக, இணையும் துணையோடு அவரது வீட்டின் ஏனைய உறவுகளுடன் மகிழ்ச்சி பொங்க வாழப்போகும் முதல் கட்டமே திருமணம். அந்நியோன்யத்துடன் அவர்களை அரவணைத்துச்செல்லும் தம்பதிகள் புகழப்படுகிறார்கள், போற்றப்படுகிறார்கள்.

சொந்த பந்தங்களின் விருப்பு வெறுப்புக்களை காட்டும் மேடையாக சில நேரங்களில் இது  மாறிவிடுவதும்  உண்டு. இல்லற பந்தத்தில் முதலடி எடுத்து வைக்கும் தம்பதியர் முன், தன் வீர தீர சாகசங்களைப் பேசி சர்ச்சையில் களேபரப்படுத்துவோரும் இத்தருணத்தை தங்களுக்கு சாதகமக பயன்படுத்திக் கொள்வதும் ஆங்காங்கே நடப்பதுதான்.

இவையனைத்தையும் கடந்து, புரிந்துணர்வோடு அன்பும் அறிவும் சார்ந்த தம்பதியராக மணமக்கள் வாழ்ந்து காட்டுவதில் தான் ஒரு திருமணத்தின் ஆத்மார்த்தமான வெற்றி இருக்கிறது என்பார்கள்.

உண்மையில், திருமணத்தை ஏற்பாடு செய்வோர், திருமணத்திற்கு பல உதவிகளைச் செய்ய முன்வருவோர், விருந்துகளை எற்று நடத்துவோர் என பலரின் கோணங்களில் பார்க்கவேண்டிய அம்சங்கள் பல உள்ளன.  

வீட்டைக் கட்டிப்பார், திருமணம் செய்து பார் என்பது இதனால் தானோ? 

திருமண அழைப்பிதழ் பெறுவோர் பெயர் பட்டியல் தயாராகிறது.... ( 1987 )

1 comment:

  1. uncle unggal ninaivugalai thirumbi paarkiringala... nice uncle...

    ReplyDelete