Sunday 30 June 2013

மலர்க்கண்காட்சி - புத்ராஜெயாவைச் சுற்றி











மலர்க்கண்காட்சி - விவசாயிகளின் சந்தை


மலர்க்கண்காட்சி - அழகிய மலர்கள்





















மலர்க்கண்காட்சி - அரங்கத்தின் உள்ளே













மலர்க்கண்காட்சியில் உணவுச் சந்தை...


மலர்க்கண்காட்சிக்கு வருகை தரும் ஆயிரமாயிரம் மக்களைக் கவர இப்படி ஒரு கூடாரம் அமைத்து அதில் பல மாதிரியான, பல நாட்டினரின் உணவுகளும் பரிமாறப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது இம்முறை.

சுமார் 50 வணிகர்களின் ஆக்ரமிப்பில் இக்கூடாரம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பதை காண முடிகிறது.

வழக்கமாக வைக்கப்படும் உணவுச் சந்தை போலில்லாமல், இருக்கைகளுடன்,  அமர்ந்து அமைதியாக உணவருந்திச்செல்ல மேஜை நாற்காலிகளும் வரிசையாக இடப்பட்டிருக்கின்றன.

 நான் சென்ற நேரம் மதியம் ஆனதால், இன்று கூட்டமும் சற்று அதிக அளவிலேயே இருந்தது. 

மசாலா கலந்த கோழி, ஆடு, மீன் மற்றும் குருமா குழம்பு  வகைகள் நாவில் சுவையை திணித்தன.


சாப்பிடுவோமா வேண்டாமா எனும் பாதி மனதுடன் இவற்றை பார்ப்பவர்கள் நிச்சயம் ஏதாவதொன்றை தேர்ந்தெடுத்து விடுவார்கள் என்பது தெரிந்திருந்தது.  நம் மலேசியர்கள் நன்றாக சமைக்கத் தெரிந்தவர்கள்...அதில் சந்தேகம் இல்லை. இதில் பல தமிழர்களின் வீடுகளில் தினமும் சமைக்கப்படுபவை  என பார்த்ததுமே நமக்குப் புரிந்துவிடும். மசாலா வகைகள் என நாம் சொன்ன அனைத்துமே நமது 'ஒரிஜினல் ரெசிப்பியை' கொண்டு சற்று நவீன மயமாக்கப்பட்டவை.

இவை மட்டுமா, முறுக்கு, அதிரசம், கெட்டி உருண்டை, போன்ற பலவும் அவர்களின் கைபட்டு சற்றே பெயர் மாற்றம் கண்டு (முறுக்கு மறுக்கு ஆனதைப்போல ) கடைகளில் வியாபாரத்துக்கு வந்துவிட்டதை நாம் பார்த்திருப்போம்.. ஏனோ நம்மவர்கள் அப்படி எதையும் வியாபார ரீதியில் சிந்திக்க அதிக நாட்களாகிறது. உப்புமா, குழாய் புட்டு போன்றவையும் இந்தக் கதிக்கு உள்ளானவை என்றால் அது பொய்யாகுமா?

ஆயினும் அவர்கள் அவற்றை சுவைபட சமைத்து பரிமாறிடும் போது நமக்கு பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவுமே படுகிறது.

ஆக, வருகையாளர்கள் மலர்க்கண்காட்சியை கண்டு களித்த பின், மனதுக்கு திருப்தியான உணவையும் ருசித்து மகிழ இவ்வாண்டு ஏற்பாடுகள் பிரமாதப் படுத்தப்பட்டு இருந்தன.


மலர்க்கண்காட்சியில் பார்வையாளர்களின் கூட்டம்.


படித்ததில் பிடித்தது...


புத்ராஜெயா மலர்க்கண்காட்சி - மேலும் படங்கள்


Saturday 29 June 2013

Growers gardens ....floria 2013


வலி...

தலைவலி, இடுப்புவலி, முதுகுவலி, வயிற்று வலி, கைகால் குடைச்சல், முட்டுக்களில் வலி, மார்பு வலி, குனிஞ்சா நிமிர்ந்த வலித்தல் என பலவித வலிகள் நம்மை வாட்டி வதைக்கின்றன. அதுவும் வயதானோருக்கு சொல்லவே வேண்டாம். எந்த நேரம் எந்த வலி வருமோ என பயந்து கொண்டிருப்போரும் உண்டு.

நமக்கு ஏற்படும் உடல் வலிகளில் எந்த வலி மிகவும் அவஸ்தையானது எனச் சொல்ல முடியுமா?  வரும் வலிகள் அனைத்தும் தாங்கொனா துன்பத்தைத் தருவது போலத்தான் ஒவ்வொரு முறையும் உணருகிறோம். காது வலிக்கையில் அவ்வலி ஒரு பக்கம் தொடங்கி மறுபக்கம் குடைவது போல படுகிறது. கண் வலிக்கும் போது, பார்வையே இல்லாதது போல தோண்றுகின்றது.  பல் வலிக்கும் போது, கையாலேயே பல்லை பிடுங்கி விடலாமா எனவும் நினைக்க வைக்கிறது. இப்படியே மற்றவையும். இதில் எந்த வலி நல்ல வலி?

வலி நிவாரணத்துக்கு மருந்துகள் பெரிதும் உதவுகின்றன. பெனடோல், பொன்ஸ்டன், டிஃப்னல் என்பவை தற்காலிகமாக வலியினை நிறுத்தக்கூடிய மருந்துகளாகும்.

ஒரு சில பயிற்சிகள் மூலமும், சில நேரங்களில் தியானத்தின் மூலமும்கூட நமக்கு ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்தவோ, இல்லாமல் செய்யவோ முடியும் என பலரும் முயற்சி செய்துவருகின்றனர். ஒரு சிலர் இவ்வகையான யுக்திகளில் வெற்றி பெற்றதாக கூறிக்கொள்கின்றனர்.

பரீட்சார்த்த முறையில் இப்படி வலியினைப் போக்கும் செயல்கள் இருந்தாலும், இவற்றை அறிவியல் பூர்வமாக பார்க்கையில் வலி நிவாரணமாக மருத்துவர்கள் அறிவிக்க தயாராயில்லை. இது தனிப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் இருக்கும் வலியினை தாங்கும் சக்தி.  சிலரால் மட்டுமே முடியும் ஒன்று நமக்கு நிரந்தர தீர்வாகாது.

உண்மையில் வலி என்பது நோயல்ல, அது நோயின் அறிகுறி மட்டுமே. வலி ஏற்பட அடிப்படைக்காரணம் என்ன என்று தெரிந்து அதை குணப்படுத்துவதே சிறந்த மருத்துவமாகும்.

ஒரு சிலரைப் போலில்லாமல், எனக்கு ஏற்படும் வலியினைத் தாங்கிக் கொள்ளும் சக்தி குறைவு. உடனடியாக தகுந்த மாத்திரைகளை தேடி விழுங்கி விடுவேன். வலி என்றால் அப்படி ஒரு பயம் எனக்கு ஒரு காலத்தில். ஆனால், அருகில் இருக்கும் மற்றவர் வலியால் துடிக்கும் போது, எனக்கு ஏற்படும் வலி வர வர பெரிதாக தோன்றுவதில்லை. ( வயதாவதினால் ஏற்படும் மாற்றமோ..??? )

சில வலிகள் ஆபத்தானவை, அதில் மார்பு வலியும் ஒன்று. இரத்த ஓட்டம் இதயத்தில் தடைபடும்போது இந்த வலி தோன்றும். அந்த தடை அகற்றப்பட்டு விட்டால் வழ்க்கை மீண்டும் சுமூகமாக வழக்க நிலைக்கு வந்து விடும். இல்லையேல் ஆபத்துதான்.

இது போன்ற நேரங்களில் என்ன செய்யவேண்டும் எனும் விழிப்புணர்வும், எச்சரிக்கையும் மிக மிக அவசியம்.


Floral Boats ..magic of the night 2013