Saturday 22 June 2013

புத்ராஜெயா மலர்க் கண்காட்சி - 2013 @ 2

எல்லா பூக்களும் தனித்துவம் வாய்ந்தவை என்கிறது ஆன்மீகம். மலர்கள் எங்கு மலர்ந்தாலும் அவை இறைவனின் சேவைக்கு போகும் போது சிறப்படைகிறது என்பார்கள். அதே நேரம் மனமில்லா மலர்கள் பூஜைக்குகந்ததல்ல.

மலர் தூவி இறைவனை வழிபடுவது நாம் காலங் காலமாய் கடைபிடித்து வரும் ஒரு போற்றத்தக்க செயல்.

இதனால் நம் மனதில் எழும் மாசு நீங்கி புனிதத் தன்மை பெருகிடும் என்கிறார்கள் சித்தர். மனமுள்ள மலர்களை இறைவனுக்கு சமர்ப்பிக்கும் போது அது இறைவனின் அன்பை நமக்குப் பெற்றுத்தரும் என்றொரு நம்பிக்கை.

தற்சமயம் புத்ராஜெயாவில் நடைபெற்று வரும் மலர்க் கண்காட்ச்சியில் பல்வேறு விதமான மலர்கள், மலர்களால் உருவாக்கப்பட்ட வடிவங்கள், வீட்டினை அலங்கரிக்க சிறு சிறு மாதிரி தோட்டங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.

இவ்வருடம் ஆர்கிட் மலர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால், அவற்றின் சிறப்பினை பல வழிகளில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளுக்கு இது கண்ணுக்கு விருந்தளிப்பதாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த நிலையில், இந்தோனிசியாவில் எரியும் காட்டின் புகை இங்கேயும் பரவி நாம் சுவாசிக்கும் காற்றினை மாசு பட வைத்து விட்டதால், மலர்க்கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்த அளவில் மக்கள் கூட்டம் வராமல் போய்விடுமோ எனும் அச்சத்தில் இருப்பதாக தெரிகிறது.

இந்த தகவல் எழுதும் நேரம், காற்றிலுள்ள மாசின் அளவு 152 ( காலையில் 155 ). 200 மேல் போகும் போது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என மருத்துவ உலகம் குறிப்பிடுகின்றது.

இனி கடந்த சனியன்று எடுத்த சில படங்களை இங்கே பார்க்கலாம்.





















No comments:

Post a Comment