Wednesday 5 June 2013

படித்ததில் பிடித்தது...பங்குச் சந்தை

  "பணம் பண்ண நீங்க ரெடியா? ஷேர் பண்ணலாமா ?" 

பங்குச் சந்தை என்பது ஒன்றுதான் என்றாலும், அதையே பலரும் பல்வேறு விதங்களில் பார்க்கிறார்கள். கண் தெரியாதவர்கள் சிலர் யானையைத் தொட்டுப்பார்த்தது போல, பங்குச் சந்தைக்கு வரும் பலரும் அவர்கள் உணர்ந்தது போல பங்குச் சந்தையை அணுகுகிறார்கள்.

பங்குச் சந்தையை அணுகக்கூடிய பல்வேறு முறைகளை பட்டியலே போடலாம்.

1)   பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கலாம். ஒரு நாள் கூட காத்திருக்க வேண்டாம். அன்றே, உடனேயே கூட விற்கலாம். வாங்கி விற்பது மட்டும் இல்லை.  "ஒரு பங்கின் விலை, அதிகம் உயர்ந்துவிட்டது. இனி இறக்கம் தான்" என்று நினைத்தால், அல்லது தகவல் கிடைத்தால் ( டிப்ஸ் ) அந்தப் பங்கினை விற்கலாம். விலை இறங்கியதும், வாங்கி நேர் செய்துகொண்டுவிடலாம். லாபம் பார்க்கலாம். ஒரே நாளில் செய்து முடிக்கப்பட்டுவிடுவதால், இதனை 'இண்ட்ரோ டே' என்கிறார்கள். இதில் ரிஸ்க் மிக அதிகம்.

2)   தகவல் கிடைக்கும் பங்குகளை வாங்கலாம். ஓரிரு நாட்களில் லாபம் கிடைத்ததும் விற்றுவிடலாம்.  அடுத்து வேறு ஒரு பங்கினை வாங்குவது, வாங்கி  மாதக்கணக்கில், வருடக்கணக்கில் வைத்துவைப்பதெல்லாம் இல்லை. இதனை 'டிரேடிங்' என்கிறார்கள். இதிலும் ரிஸ்க் அதிகம் தான்.

3)   விலை உயரும் என்று கணித்த பங்குகளை வாங்கலாம். காத்திருக்கலாம். கணிசமான  ( 20 முதல் 35% ) லாபம் கிடைக்கும் போது விற்றுவிடலாம். இது 'ஷார்ட் டர்ம்' அணுகுமுறை.

4)   வளர்ச்சி வாய்ப்பு அதிகமிருக்கும் நல்ல பங்குகளைத் தேர்ந்து வாங்குவது.  நல்ல பங்குகளை தேர்ந்து வாங்குவது. வாங்கிவிட்டு வேறு வேலைகள் பார்ப்பது. விலை இறங்கும்போதெல்லாம் தொடர்ந்து அந்தப் பங்குகளை வாங்குவது ( அக்குமுலேட்டிங் ). நல்ல கணிசமான விலை ஏற்றம் வந்த பிறகே விற்பது. இரண்டு மூன்று, ஐந்து வருடங்கள் வரை கூட  வைத்திருக்கலாம். இது நீண்டகால ( லாங் டர்ம் ) அணுகுமுறை.

5)   பங்குச் சந்தை பல்வேறு காரணங்களுக்காக அதிகம் இறங்கும் போது, களத்தில் இறங்கி நல்ல அடிப்படைகள் ( பண்டமென்டல் ) மற்றும் நம்பத்தகு நிர்வாகம் ( குட் மேனேஜ்மென்ட் ) உள்ள பங்குகளை அதிக அளவில் சொத்துக்கள் வாங்குவது போல வாங்கிவிடுவது. அதன் பின் அவற்றை விற்பது இல்லை.  தனக்கு பணத் தேவை ஏற்படும் போது மட்டுமே, அந்தக் காரணத்திற்காக மட்டுமே பங்குகளை விற்பது. இதுவும் நீண்டகால அடிப்படைதான்.

இவை தவிர இன்னும் சில முறைகளும் இருக்கின்றன.

6)   பங்குகளில் முதலீடு  செய்யும் பரஸ்பர நிதிகளில் ( மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ) நாம் முதலீடு செய்வது. பரஸ்பர நிதிகளை நடத்துபவர்கள் விவரம் தெரிந்தவர்கள். நிதானமானவர்கள். அப்படிப்பட்டவர்கள் எடுக்கும் முடிவுகளால் கிடைக்கும் அனுகூலங்களைப் பெறலாம்.

7)   வங்கிகள் முதலீட்டு நிறுவனங்கள் நடத்தும் பங்குச் சந்தை தொடர் முதலீடுகளில் ( சிஸ்ட்டமெட்டிக் இன்வெஸ்மென்ட் பிளான் ) முதலீடு செய்வது. இதன் மூலம், அடிக்கடி நடக்கும் பெரிய விலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ள முடியும். இவையும் விவரம் தெரிந்தவர்களால் நடத்தப்படுவன.

8)   சில அனுமதி பெற்ற வங்கிகளும், அனுமதி பெற்ற பங்குத் தரகு நிறுவனங்களும் நடத்தும் பிரைவேட் கிளையன் குரூப் அல்லது பொர்ட் ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்விசஸ் - பிஎம்மெஸ்களில் சேர்ந்து, நம் பணத்தினை பங்குச் சந்தையில் அவர்கள் யோசனைப்படி முதலீடுகள்  செய்யவிட்டு லாபம் பார்ப்பது.

இவையெல்லாம் போகவும் இன்னும் ஒரு வழி இருக்கிறது.

9)   பங்குகளை முதலீட்டிற்காக வாங்காமல், 'அது உயரலாம், இது இறங்கலாம்' என்கிற ஊகங்களின் அடிப்படையில் வாங்கி வைப்பது அல்லது விற்று வைப்பது ( ஃபுயூச்சர்ஸ் & ஓப்ஷன்ஸ் இதுதான் எஃப் & ஓ. 

" இவற்றில் எந்த அணுகுமுறை சரியாக வரும்?"

பணம் இழக்காமல் பணம் பண்ண நிச்சய வழிகள் என்றால், அவை 1, 2 மற்றும் 9-ம்  முறைகள் தவிர மற்றவை தான்.  நன்கு விவரம், தகவல்கள் தெரிந்தவர்கள், சரியான முடிவுகள் எடுக்கும் திறன் பெற்றவர்கள், ரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள் அவற்றையும்  முயற்சிக்கலாம்"

"முடிவாக?"

" மற்றவற்றில் முதலீடு செய்வது போல, பங்குச் சந்தையிலும் ஓரளவு பணத்தினை முதலீடு செய்து, கணிசமான லாபம் பார்க்கலாம். வாழ்த்துக்கள்!"

( 2007-ல் குமுதத்தில் வெளியிடப்பட்டதொடரின் இறுதிப் பகுதி இது. எழுத்து : திரு. சோம.வள்ளியப்பன். )

நன்றி : குமுதம்

No comments:

Post a Comment