Wednesday 28 May 2014

அழகிய ஓவியங்களை ரசிப்பதுண்டு...

ஓவியம் வரைவது எனக்கு அவ்வளவாக பழக்கமில்லை. ஆனாலும், அழகிய ஓவியங்களை ரசிப்பதுண்டு...






வனங்களை பாதுகாப்போம்...

எதிர்கால சந்ததியினருக்கு சுகாதாரமான  சுற்றுச்சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே ஒவ்வொரு அரசாங்கத்தின் தலையாய கடமையாக இருக்கவேண்டும்.

காடுகளை பாதுகாப்பது, நிர்வகிப்பது மற்றும் அது தொடர்பான கல்வி மற்றும் விழிப்புணர்வை இளையோர் மத்தியில் ஊக்குவிக்க அரசங்கம் முனைப்பு காட்டவேண்டும்.

இளம் மரக்கன்றுகளை இளைஞர்கள் கைகளினால் நடவு செய்ய பழக்குவதுடன், அவர்களுக்கான தூர ஓட்டம், மிதிவண்டி ஓட்டம் போன்ற போட்டிகளையும் ஏற்பாடு பண்ணி பலரையும் வனங்களை பாதுகாக்கும் அமைப்புக்கு ஆதவாக சேர்த்துக்கொள்ளலாம்.

இதுபோன்ற நடவடிக்கைகளினால் நம் எதிர்கால சந்ததியினர் நிச்சயம் நன்மை பெறுவர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.







Wednesday 21 May 2014

நம்மாளு ஒருத்தர்...

முக நூலில் நகைச்சுவை விருந்து படைக்கும் திரு நான் இலியாஸ் அவர்களின் துணுக்குகள் இங்கே....

1.
நம்மாளு ஒருத்தர ஒரு காக்கா ரொம்ப தொல்லபண்ணிக்கிட்டு இருந்துச்சு.........

அவரு எங்க போனாலும் .... அவர துரத்தி துரத்தி கொட்டுனுச்சி........

செம கடுப்புல இருந்த நம்மாளு.. அத எப்படியோ கூண்டு வச்சு புடிச்சிட்டாரு.......

இப்ப அத கொல்லணும்னு முடிவு பண்ணிட்டாரு....... .

கைல ஆயுதம் எதுவும் கிடக்கில..... அதனால ஒரு ஐடியா பண்ணாரு....

அந்த காக்காவ கைல புடிச்சிக்கிட்டு ... பத்து மாடி பில்டிங்குல.... நேரா மொட்டமாடிக்கு போனாரு...

அங்கேருந்து """ போய்.. செத்து தொல ""ன்னு தூக்கி வீசுனாரே பாக்கலாம்..............

2.
நம்மாளு ஒருத்தர் லண்டன் போயிட்டு அப்பத்தான் ஊருக்கு ரிட்டன் ஆயிருந்தார்......

வந்ததும் வராததுமா நேரா ஒய்ஃப் கிட்ட போய் கேட்டாரு..........

"" ஆமா... என்ன பார்த்தா.. ஏதும் ஃபாரினர் மாதிரி தெரியுதா...?/.. ""

அதுக்கு ஒய்ஃப் """ அப்புடி ஒன்னும் தெரியலயே....""" ன்னாங்க......

""அப்புறம் ஏன் லண்டன்ல எல்லோரும் என்ன ஃபாரினர்ன்னு சொல்றாங்க...??..........

3.
நம்மாளு ஒருத்தர் கடை வச்சிருந்தார்....... அதுல கொஞ்சம் லாஸ்.... 

உடனே ஆண்டவன்கிட்டே வேண்டினார்.. 

"' கடவுளே.. நீதான் என்ன காப்பாத்தனும்... எனக்கு லாட்டரி அடிச்சாதான் உண்டு... எனக்கு முதல் பரிசு கிடைக்கணும்...."" ன்னு வேண்டினாறு........... 

அனால் அன்னைக்கு எந்த பரிசும் நம்மாளுக்கு கிடைக்கல.. ...

உடனே நம்மாளு ரெண்டு நாள் கழிச்சு திரும்ப வேண்டினாறு....... அப்பவும் அவருக்கு பரிசு கிடைக்கல...

உடனே கடுப்பான நம்மாளு.... அழுது புரண்டு ஆண்டவன்கிட்டே வேண்டினாறு..... "" இப்ப எனக்கு பரிசு கிடைக்கிலேனா... நான் குடும்பத்தோட தற்கொல பண்ணபோரேன்..."" ன்னு.....

அவரோட அழுகுரள கேட்ட....... ஆண்டவன்..... ஆவேசமா கத்துனான்.... "" டே.. மவனே... முதல போய்.. ஒரு லாட்டரி சீட்டு வாங்குடா........................ன்னு..""


4.
""அப்பா...... 6 + 6 எவ்வளவுப்பா...?/... ""

"" அறிவுகெட்ட முண்டம்... எருமமாடு... அஞ்சாவது படிக்கிறீயே மூதேவி....... இதுகூடவா தெரியல....?/. . போ போயி.. அங்க இருக்கிற கால்குலேட்டர எடுத்துட்டு வா....


இப்போதைக்கு இது போதும்.... சரியா... ?



Saturday 17 May 2014

படித்ததில் பிடித்தது : சாவித்ரி-10


சாவித்ரி-10. கோவா மாம்பழமே!

First Published : 11 July 2015 10:00 AM IST
மூ
வேந்தர்களில் வாரி வழங்குவதில் எம்.ஜி.ஆர். வள்ளல்! நடிகர் திலகம் கர்ணன்!  எம்.ஜே. எம். ஜேசுபாதம் போன்றோர் கணேசனின் நன்கொடைகளைப் பட்டியலிட்டு, ‘நடிப்பதிலும் கொடுப்பதிலும் சிகரம் தொட்ட சிவாஜி’ என்ற பெயரில் 2015ல் நூல் வெளியிட வேண்டி இருக்கிறது.  இரக்கத்தின் இமயமாகப்  ‘பொன்மனச் செம்மல்’ போற்றப்படுவது போல், ஏனோ  வி.சி. கணேசனை யாரும் கொண்டாடுவது கிடையாது.
மூன்றாமவர் ஜெமினி கணேசன்.
‘பண விஷயத்தில் அவருக்கு அஜாக்கிரதை ஜாஸ்தி. எங்காவது மறந்து விடுவார். அவருடைய பணத்தைப் பிறர் கவனித்துக் கொள்வதே வழக்கம். தன்னுடைய கையிலோ பையிலோ பணத்தை எடுத்துக் கொண்டு வர மாட்டார். அவரிடம் பணம் இல்லாததைக் கண்டு, ஜெமினி செலவு செய்யாதவர் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். அது சரி அல்ல.’
‘ஜெமினி கஞ்சனல்ல’ என்றத் தலைப்பில் நடிகையர் திலகம் பேட்டி கொடுக்கும் அளவுக்கு, பெயர் ராசியோ என்னவோ  நடிப்புச்செல்வம் ஜெமினி கணேசனும்,  ‘பராசக்தி’ கணேசனைப் போல் பாமர மக்களால் மட்டும் அல்ல கோலிவுட் குடும்பத்தினராலும் ‘தார்ப்பாயில் வடி கட்டிய கஞ்சன்’ என பகிரங்கமாக அழைக்கப்பட்டார்.
காதணி விழா போன்று சின்ன நிகழ்வுகளுக்குச் சென்றாலும், ‘தாத்தா சொத்து பேரனுக்குத்தானே’ என்று பாட்டனாரின் சட்டை பாக்கெட்டிலிருந்தே நூறு ரூபாயை எடுத்து மொய் எழுதி விட்டு வந்தவர் ஜெமினி கணேசன்!
கதாநாயகிகளில் யார் கருணையின் கங்கை ?  நிச்சயமாக  சாவித்ரிக்கு முதலிடம் கிடைக்கும். மற்றவர்களை விட அவருக்கு தயாள குணம் தாராளமாக உண்டு. 
1942ப் பிறகு  1960 நவம்பரில்  சென்னை கடும் புயலால் பாதிக்கப்பட்டது. பதினெட்டு ஆண்டுகளில் இல்லாத பலத்த சேதம். மழை வெள்ளத்தில் தவித்த ஏழை மக்களுக்கு அப்போது உதவிய ஒரே நடிகை சாவித்ரி மட்டுமே.(ஆனந்த விகடன் 27.11.1960)
இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டால் தானா? நாட்டுக்கு எதிரிகளால் ஆபத்து நிகழ்ந்த போதெல்லாம் முந்திக் கொண்டு, அள்ளி அள்ளி வழங்கியதில் சாவித்ரியை மிஞ்சியவர் யார்?
பாகிஸ்தான் யுத்த நிதிக்காக ஸ்ரீதரும் சிவாஜியும் தமிழகத்தின் ஆறு முக்கிய நகரங்களில் இணைந்து  நட்சத்திர இரவுகள் நடத்தினர். அதில் நவீன துஷ்யந்தன் - சகுந்தலை நாடகம் முக்கியமானது. ஜெமினியும் சாவித்ரியும் ஜோடியாக நடித்தார்கள். மேடையில் அவர்கள் இணைந்து அரிதாரம் பூசியது அதுவே முதலும் கடைசியும். கிட்டத்தட்ட 12 லட்சங்களுக்கும் மேல் வசூலானது. அதைப் பெற்றுக் கொள்வதற்காகவே சென்னை வந்தார் பாரதப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி.
 
அதுவும் போதாமல் சிவாஜி, சாவித்ரி, ஸ்ரீதர் உள்ளிட்டோர் தாங்கள் அணிந்திருந்த ஆபரணங்கள் அனைத்தையும்  சாஸ்திரியிடம் கொடுத்தார்கள். பிரதமருக்கு முன்பாக சாவித்ரி தன் காதுகளிலிருந்து கம்மலைக் கழற்றும் புகைப்படம் புகழ் பெற்றது.
1965 அக்டோபர் கடைசி வாரம். கண்ணதாசனின் அண்ணனும் பட அதிபருமான ஏ.எல்.ஸ்ரீநிவாஸன் தலைமையில், சிவாஜி கணேசன்- பத்மினி, ஜெமினி கணேசன்- சாவித்ரி,  சந்தியா-ஜெயலலிதா, சந்திரபாபு-தேவிகா, ராஜசுலோசனா  ஆகியோர், போரில் காயமுற்ற நமது படை வீரர்களுக்கு ஆறுதல் கூற டெல்லியில் குவிந்தார்கள்.  ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுடன் முதலில்  மரியாதை நிமித்தமான சந்திப்பு நடைபெற்றது.
பின்னர்  சிப்பாய்களுக்கு மத்தியில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் குறிப்பிடத்தக்கவை சிவாஜி- சாவித்ரியின்  சத்யவான் சாவித்ரி தெருக்கூத்து. பத்மினி, சந்திரபாபு, ராஜ சுலோசனா பங்கேற்ற பாங்ரா நடனம். ஜெயலலிதாவின் நாட்டியம் ஆகியன.
அக்டோபர் 27ல் ஜலந்தர் ராணுவ மருத்துவமனைக்குச் சென்றார்கள். விழுப்புரம் தமிழ் இளைஞர் ஒருவரின் செயல் கலைஞர்களைக் கலங்கச் செய்தது.
‘போரில் எனக்குக் கைகள் போய் விட்டன. நான் உங்களை என் தலையால் வணங்குகிறேன்!’ என்றார். நடிப்பின் இமயம் அவரை கட்டிக் கொண்டு நிஜமாகவே கதறி அழுதார்.
பட்டாளத்துச் சிங்கங்களிடம் சிவாஜி-ஜெமினி தமிழிலும், பத்மினி மலையாளத்திலும், சாவித்ரி-தேவிகா  தெலுங்கிலும், சந்தியா-ஜெயலலிதா  கன்னடத்திலும் நலம் விசாரித்தனர்.
பாகிஸ்தான் யுத்தத்தின் போது மாத்திரம் அல்ல. ஒவ்வொரு போரிலும் சாவித்ரியின் பங்களிப்பு  தொடர்ந்தது. பங்களாதேஷ் நிதிக்காக மான் குட்டி ஒன்றை ஹைதராபாத்தில் ஏலம் போட்டார்கள். அதில் வென்றவர் சாவித்ரி. எம்.ஜி.ஆரை விட  அதிகம் கேட்டு 32 ஆயிரம் ரூபாய்க்கு மான் குட்டியை ஏலம் எடுத்தார்.
-----------------------
ஜெமினி கணேசன் - ‘எத்தனை மெழுகுவர்த்தி?’
சந்திரபாபு -‘ 54.’
சாவித்ரி - (சற்றே உணர்ச்சி வசப்பட்டு லேசான திணறலுடன்)  எனக்கு வயது... எனக்கு வயது... 30 தான்.
சந்திரபாபு - முப்பது வேணாம். ஸ்வீட் சிக்ஸ்டீன் என்பார்களே... 16 போதும். பதினாறும் பெற்று பெருவாழ்வு  வாழணும்.
பலத்த கைத்தட்டல்கள் ஒலித்தன. சந்திரபாபு சொற்படியே 16  மெழுகுகள் ஒளிர்ந்து வெளிச்சம் தர, விஜயா ஸ்டுடியோவில்  1966ல்  சாவித்ரியின் பிறந்த நாள் கேக் வெட்டப்பட்டது.
 
ஜெமினிகணேசனின்  திரை வாழ்க்கையில் சாவித்ரிக்கும், வி.சி.கணேசனுக்கும் முன்பே சிநேகிதக் கொடி கட்டிப் பறந்தவர் சந்திரபாபு. விஷம் குடித்து உயிரை விடும் தருணத்திலும் தன் சகா, ஜெமினி கணேசனை  சினிமா சிகரத்தில் அமர்த்திப் பார்க்க ஆசைப்பட்டத் தன்னலமற்றத் தன்னிகரில்லாக் கலைஞன்.
எஸ்.எஸ்.வாசனுக்கு  பாபு எழுதிய கடிதத்தின் முக்கிய வரிகள் இவை:
‘பல தடவை நடிப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு உங்கள் ஸ்தாபனத்தில் முயற்சித்தேன். கிட்டவில்லை. வெளியிலும் கிடைக்கவில்லை. இன்று காலை மிகவும் பிரயாசைப்பட்டு உங்களைச் சந்தித்தேன்.ஆபிசில் வந்து பார் என்று தட்டிக் கழித்து விட்டீர்கள்.
உங்கள் ஸ்டுடியோவில் இந்த ஜென்மத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமென்று நம்பிக்கையில்லை. மனம் நொந்து நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்காது என்று முடிவு செய்து விட்டேன்.
என் நண்பன் கணேசன், அழகன்; திறமை மிக்கவன்; ஆர்வமுள்ளவன். அவனுக்காவது ஒரு நல்ல வாய்ப்பளியுங்கள். குட்பை!’
சாவித்ரியின் ஒப்பனை வாழ்க்கையில் சிவாஜி, சந்திரபாபு இருவரும் முக்கியமானவர்கள். சிவாஜி ‘பாசமலர்’அண்ணன் என்றால், பாபு  உற்சாகமூட்டும் உத்தமத் தோழன். அவர்கள் இருவருக்கும் ஜெமினி-சாவித்ரி ஜோடி, நேசம் நிரம்பி வழிய வழிய நிறையவே  ‘சியர்ஸ்...’ சொல்லி இருக்கிறார்கள்.
ஜெமினி-சாவித்ரி-சந்திரபாபு காம்பினேஷனில் உருவான காமெடி திரைப்படம் மாமன் மகள். அதில் சாவித்ரிக்காக ஏங்கி சந்திரபாபு பாடிய ‘கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட். அந்தப் பாடலுக்காகவே மாமன் மகளுக்கு ரிபீட்டட் ஆடியன்ஸ் குவிந்தனர்.
மூன்று திலகங்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் இது. ஒருவர் நடிகர் திலகம் சந்திரபாபு. மற்றவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மூன்றாமவர் நடிகையர் திலகம் சாவித்ரி. இம்மூவரும்  பங்கேற்ற படம் மாடி வீட்டு ஏழை.
சந்திரபாபு நடிகர் திலகமா...! என்கிற உங்களின் வியப்புக்குறி வினா  எனக்குப் புரிகிறது. அவர் கணேசனையும் மிஞ்சும் திறமைகள் படைத்தவர். விழுப்புரம் சின்னையா கணேசனுக்குத் தன் ஆற்றலை வெளிப்படுத்த அமைந்த சந்தர்ப்பம், தூத்துக்குடி பனிமயதாசன் என்கிற ஜே.பி.சந்திரபாபுவுக்குக் கிடைக்கவில்லை அவ்வளவே.
‘பேசும் படம்’ கணேசனை நடிகர் திலகமாக அறிவித்தது. ‘குமார ராஜா’ சினிமா விமர்சனத்தில் ‘குமுதம்’பாபுவை நடிகர் திலகமாகக் கொண்டாடியது.
‘தமிழ் நாட்டில் நடிகர் திலகங்கள் இருவர் உண்டு என்று நிருபிப்பவர் போல் நகைச்சுவையோடு கூட, நகை கலப்பே இல்லாத ஆழ்ந்த உணர்ச்சி மிக்க கட்டங்களையும், பிறவித் திறமையுடன் பாபு கையாளும் முறை மகிழ்ச்சியூட்டுகிறது.’
பயாஸ்கோப்பில் கணேசன் நாயகன் மாத்திரமே. பாபுவோ பாடகர்.  கதாசிரியர். தயாரிப்பாளர். இயக்குநர்  என அநேக முகங்கள் உடையவர். கணேசனுக்கே ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ படத்தில் பின்னணி பாடிய பெருமை பாபுவுக்கு  உண்டு. நடிப்பு அசுரன் சிவாஜி கணேசனை  தன் அனாயசமான நடிப்பால் கட்டிப் போட்டவர். சபாஷ் மீனாவே சாட்சி!
சந்தர்ப்பவசத்தால் சந்திரபாபு மாடிவீட்டுஏழையில் இணைய நேர்ந்தது. பாபுவின் ஆகாய ஆற்றலை உணர்ந்த அவரது சிநேகிதர்கள், ஒரு படம் இயக்கச் செய்யச் சொல்ல, பாபு புதைகுழியில் விழுந்தார்.
எம்.ஜி.ஆர். என்கிற சிங்கத்தைக் கட்டிப் போடும் ரிங் மாஸ்டராக ஆசைப்பட்ட பாபு, அசிங்கப்பட்டுப் போன கதை உங்கள் அனைவருக்கும் முன்னமே தெரிந்திருக்கலாம். அந்த அவஸ்தையைக் கூற வந்த பாபு, சாவித்ரியின் பெருமை பேசியுள்ளார். அதுவே இங்கு நமக்குத் தேவை.
‘எந்த நேரத்திலும் அன்போடு உதவுகிற சாவித்ரியிடம், என் வீட்டின் பேரில் 25,000 ரூபாய் கடன் கேட்டேன். அவரும் மறுப்பு சொல்லாமல் பணம் கொடுத்தார்.’ - சந்திரபாபு.
அந்தத் தொகை  மக்கள் திலகத்துக்கு அட்வான்ஸ் தர  உதவியது.
சந்திரபாபு சகல ஏற்பாடுகளையும் செய்து விட்டு பானுமதியின் பரணி ஸ்டுடியோவில் புரட்சி நடிகருக்காகக் காத்திருந்தார். ஏ.எல். ஸ்ரீநிவாசனின் காசில் போடப்பட்ட குடிசை செட், வாத்தியாரைக் காணாமல் களை இழந்தது.
காலை  பூஜையில்  இருந்திருக்க வேண்டிய வள்ளல், ஒப்பனையோடு தலை காட்டிய நேரம் முற்பகல் பதினோரு மணி. இரண்டு நாள் படப்பிடிப்போடு மாடி வீட்டு ஏழை நின்று போனது.
எம்.ஜி.ஆர். கால்ஷீட் கிடைக்காததால் சந்திரபாபுவுக்கு சகிக்க இயலாத நஷ்டம். அதுவரையில் சம்பாதித்த சொத்துகள் மொத்தமும் ஜப்திக்கு வந்தன. அப்படியும்  டைரக்டர் பைத்தியம் ஓயவில்லை. தமிழில் சாவித்ரிக்கும் நாயகி வாய்ப்புகள் வருவது சுத்தமாக நின்று போனது.
1966ல்  ஜெயலலிதா, கே.ஆர். விஜயா, ராஜஸ்ரீ, வாணிஸ்ரீ, பாரதி, காஞ்சனா, இரண்டு மூன்று நிர்மலாக்கள்  என ஏகப்பட்டப் புது மலர்கள். நடிப்போடு கவர்ச்சியிலும் முன்னணியில் நின்றனர். இளைஞர்களின் இதயங்களில் சாவித்ரி மெல்ல மெல்ல ‘நேற்றுப் பூ’வாகிவிட்டார்.
அந்த நிலையிலும் சந்திரபாபு நட்புக்கு மரியாதை அளித்து, தோழமைக்குத் தோரணம் கட்டினார். சாவித்ரியை ஹீரோயினாக்கித் துணிச்சலாகப் புதுமையான படம் ஒன்றை அறிவித்தார்.

        
காமராஜர் தலைமையில் பிரமாதமாக  பாபுவின் ‘தட்டுங்கள் திறக்கப்படும்’  துவக்க விழா நடந்தது.
ஓவர் கான்ஃபிடன்ஸோடு மீடியாவில் சந்திரபாபுவின் சத்திய முழக்கம் கேட்டது.
‘பாபு இதுவரை பேசிக்காட்டியதை இந்தப் படத்தில் ஓரளவு செய்திருக்கிறான். அடைக்கலம் என்கிற  ஓர் ஊமை வேலைக்காரன் வேடம் எனக்கு. படம் முழுவதும் ஒரே ஒரு ஆடையில் வருகிறேன். அந்த உடையின் விலை மூன்றே கால் ரூபாய்தான்.  மனோகரும் சாவித்ரியும் பேசும் கட்டம் ஒன்று வருகிறது. செட்டின் ஒரு கோடியில் பேசத் தொடங்கும் அவர்கள், மறு கோடி வரை பேசியபடி வருகிறார்கள்.
‘முக்கியக் கதா பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வகையிலும் சில புதிய உத்திகளைக் கையாண்டிருக்கிறேன்.  அந்த அறிமுகமே பாத்திரத்தின் தன்மையை விளக்கிவிடும். இந்தப் படத்தில் இருந்து எனக்கு நிறையப் பணம் வர வேண்டும் என்று நான் விரும்பவில்லை. நான் ஒரு கலைஞன். நான் டைரக்டராகி விட்டேன். மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை தான் என் முதலீடு. எனவே நான் அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை.’ -சந்திரபாபு. 
1966 ஜூன் 17ல் வெளிவந்தது ‘தட்டுங்கள் திறக்கப்படும்.’ இன்றைக்குப் பார்த்தாலும் முற்றிலும் மாறுபட்டப் புதுமையான திரைச்சித்திரமாக உங்களுக்குத் தோன்றும். ஜின் ஜின்னாக்கடி நடனங்களுக்குத் தனி மவுசு ஏற்பட்ட சூழல். சந்திரபாபு மழலைகளைக் கொஞ்சியவாறு பாடிய ‘கண்மணி பாப்பா’ கேட்பாரற்று  ஒலித்தது.
சந்திரபாபுவின் தயாரிப்பு டைரக்ஷன் முயற்சி முற்றிலும் தோல்வியில் முடிந்தது. சாவித்ரிக்கும் புதிய புகழ், திருப்புமுனை ஏதும் அமையாமல் போனது. பயாஸ்கோப் சமூகத்தால் கை விடப்பட்ட கலைஞன் சந்திரபாபு ஒரு வாய்ச் சோற்றுக்கும் வக்கற்று வீதியில் நின்றார். அதற்கானப் பழி சாவித்ரி மீதும் விழுந்தது.    
1967 தைத் திருநாளில் வெளியானது கந்தன் கருணை. நடிகையர் திலகத்துக்கு மீண்டும் உமையவள் வேடம். புதிய சிவன் - ஜெமினி.  சினிமாஸ்கோப் சைசில் ‘சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா’ என்று சிவசுப்ரமணியனின் புகழ் பாடிய சாவித்ரியைப் பார்த்து மக்கள் மனம் வெறுத்துப் போனார்கள். ஒருவரின்  தோற்றத்தை விமர்சிப்பது அநாகரிகம்.
ஓசி பாஸில்  பார்க்காமல் கவுண்டரில் முண்டியடித்து டிக்கெட் வாங்கி சினிமா பார்ப்பவர்கள் பாமர ரசிகர்கள். பிரம்மாண்ட சாவித்ரியைக் கண்டு மனம் கலங்கினார்கள். திருவருட்செல்வரில் ‘ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே’ பாடலிலும் மிகப் பருமனான சாவித்ரியே திரையில் தோன்றினார். அவருக்கு கணவராக முதலும் கடைசியுமாக முத்துராமன் காட்சி அளித்தார்.
பணம். காசு.  துட்டு. முக்கியமில்லை சாவித்ரிக்கு. எப்போதும் தனக்குப் பொருந்தாத வேடங்களைத் தவிர்த்து விடுவார். கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் பணமா பாசமா படத்தில் ஜெமினிகணேசன் - சரோஜாதேவி ஜோடி. கதையின் முதுகெலும்பான திமிர் பிடித்த மாமியார் வேடத்தில் எஸ். வரலட்சுமி ஒப்பந்தம் ஆனார். அந்த ரோலில் முதல் நாளே அவர் சொதப்ப ஆரம்பித்தார்.
கே.எஸ்.ஜி.க்குத் தன்னுடன் மூன்று முத்திரைச் சித்திரங்களில் பணியாற்றிய சாவித்ரியின் ஞாபகம் வந்தது.
‘நேற்றுப்பூ’ ஆகி விட்டாலும் நடிகையர் திலகம் திறமைகள் வற்றாத தீராநதி.
ஷூட்டிங்கை ரத்து செய்து விட்டு சாவித்ரியைத் தேடி ஓடினார். இரவு நெருங்கும் தருணம். எப்படியும் மறு நாள் படப்பிடிப்பு நடந்தாக வேண்டும். கால நேரம் பார்க்காமல்  பணமா பாசமாவில் அவரை நடிக்கச் சொல்லி கெஞ்சி கேட்டார் கே.எஸ்.ஜி.
‘வாத்தியாரே! உங்களின் கலை ஆர்வத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை மறந்து விட்டீர்களே! ஜெமினி கணேஷின் நிஜமான மனைவி நான். அவருக்கு மாமியாராக இந்த சாவித்ரி நடித்தால்  ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா! உங்களின் படம் ஓஹோவென்று ஓட வேண்டாமா...?’
எஸ். வரலட்சுமி  சிறந்த நடிகை. நல்ல பாடகி. கந்தன் கருணையில் அவர் பாடிய வெள்ளிமலை மன்னவா சூப்பர் ஹிட். நீங்கள் எதிர்பார்ப்பது போல் அவர் நடிக்கா விட்டால் நான் நடிக்கிறேன். ஹீரோவை மாற்றி விடுங்கள். ஜெமினி கணேஷ் உங்களின் நலம் விரும்பி. நிலைமையைப் புரிந்து கொள்வார். தனக்குப் பதிலாக வேறு ஒருவரை அவரே சிபாரிசு செய்வார்.’ 
சொன்னதோடு மட்டுமல்லாமல் எஸ். வரலட்சுமி வீட்டுக்குச் சென்று கே.எஸ். ஜி.யின் பரிதாபகரமான சூழலை விளக்கினார் சாவித்ரி. அகந்தை, ஆணவம், இறுமாப்பு, ஈகோ, கர்வம், தெனாவட்டு என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் ஏற்ப,  எப்படி நடிக்க வேண்டும் என்று தன்னை விட சினிமாவில் சீனியரான எஸ். வரலட்சுமிக்கு வகுப்பு எடுத்தார் நடிகையர் திலகம்.  சாவித்ரி வீடு திரும்பிய போது இரவு மணி 12.45.
 
அன்றைய பொழுது கே.எஸ். ஜி.க்கு மட்டுமல்ல. தமிழ் சினிமாவுக்கும் மிகப் பிரமாதமாக விடிந்தது. கே.எஸ்.ஜி. எதிர்பார்த்த கம்பீர மாமியாரை எஸ். வரலட்சுமி கண் முன்னே நிறுத்திக் காட்டினார். பணமா பாசமா செட்டுக்குள் நுழைந்த சாவித்ரி, கே.எஸ்.ஜி.யிடம்
‘என்ன வாத்தியாரே! வரலட்சுமி நடிப்பு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா’ என்றார்.
சாவித்ரி காலத்தால் செய்த உதவி 1968ல் வசூலில் மாளப் பெரிதாகி நின்றது. ஆசியாவிலேயே மிகப் பெரிய திரை அரங்கமான மதுரை தங்கத்தில் 25 வாரங்கள் ஓடிய ஒரே வெற்றிச் சித்திரம் பணமா பாசமா. அதில் இடம் பெற்ற எலந்தப் பயம் பாடல் அகில இந்தியப் புகழை அடைந்தது. எவர் க்ரீன் ஹிட் என்கிறார்களே... அதற்கு இலக்கணம்  எலந்தப் பயம்!
‘பணமா பாசமாவை எப்போது தியேட்டர்களிலிருந்து எடுக்கப் போகிறீர்கள்...?’ என்று பட விநியோகஸ்தர்களிடம், உருவாக்கியப்  படைப்பாளியே கேட்ட நிகழ்வு அதற்கு முன்போ பின்போ  கோலிவுட்டில் நடந்தது கிடையாது.
தனக்குக் கிடைத்திருக்க வேண்டிய அருமையான வாய்ப்பையும் மற்றவருக்கு விட்டுக் கொடுத்து, தான் நடிக்காத படத்திலும் நட்போடு தலையிட்டு, அதைத் திரை வரலாற்றில் நிலை நிறுத்திய பெருமை சாவித்ரி ஒருவரையே சேரும்!

Tuesday 13 May 2014

"டபுள்ஸ்" ஸ்பெஷல்... வழக்கறிஞர் மனோகரன் மலையாளம்

வழக்கரிஞர் மனோகரன் மலையாளம் அவர்களின் "டபுள்ஸ்" ஸ்பெஷல்...


'சீரியஸான' தொழிலாயிருந்தாலும், 
 நகைச்சுவை உணர்வும் அவசியம் ...




Monday 12 May 2014

அன்னையர் தின நிகழ்வில் வழக்கறிஞர் மனோ மலையாளம் ...



வழக்கறிஞர் மனோ மலையாளம் அவர்களின் இல்லத்து அன்னையர் தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிட்டியது நேற்று. 
மலேசிய தமிழர்களின் எழுச்சிமிகு ஹிண்ட்ராப் செயல்திட்டத்தின் பின்னனியில் இருந்த ஐவரில் ஒருவரே இந்த மனோகரன் மலையாளம், எனது பால்ய நண்பர்.
அங்கு எடுக்கப்பட்ட படங்களே இவை...


பெற்றெடுத்து பெயரிட்டது ஒரு தாயெனினும், என்மேல் பாசமழை பொழியும் "தெய்வத்தாய்" இவர்...











Thursday 1 May 2014

இஞ்சிச்சார் தேனீர்...


 நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் விரும்பி அருந்துவது இந்த இஞ்சிச்சார் தேனீர்...   மலேசியாவில் இது ஒரு புகழ்பெற்ற பானம். 'தே ஹாலியா " என மலேசிய மொழியில் இது மிகப் பிரபலம். இஞ்சியின் சாற்றில் ஒரு பகுதியை சேர்த்து தே நீரில் கலந்து தருவதனால் இந்தப் பெயர் இதற்கு.

உலகிலுள்ளோர் அனைவருக்கும் அடிப்படைத் தேவை ஒன்றே ஒன்றுதான்....உணவு. அந்த உணவும் சரியானதாகவும், முறைப்படியும் அமைந்துவிட்டால், என்றென்றும் ஆரோக்கியமாக வாழலாம். 

ஃபாஸ்ட் ஃபூட் எனத் தொடங்கி ரெடிமேட் ஃபூட் என புளியோதரை முதல் ரசப் பொடி, சாம்பார் பொடி, இட்லி, தோசை, உப்புமா என பலவற்றையும் பொடிகளாக செய்து தேவைப்படும் நேரத்துக்கு சமைத்துக்கொள்ள கிடைக்கிறது இப்போது. மேலோட்டமாக பார்க்க இது நமக்கு பெரும் உதவியாய் அமைவது போலத் தெரிந்தாலும், சற்று உற்று நோக்கினால், நீண்ட கால பயன்பாட்டில் நமக்கு இது போன்ற திடீர் உணவுகள் ஆபத்தாய் முடிவது புலப்படும்.

இதில் ஒரு வித ரசாயணம் சேர்வதால் உணவுப்பொருட்கள் என்னவோ குறிப்பிடும் காலம் வரை பதப்படுத்தப்பட்டு கெட்டுப்போகாமல் இருக்க உதவுகின்றது என்பது உண்மைதான். ஆனால், இந்த ரசாயணக் கலவையைத்தான் மருத்துவ சமூகம் விஷமெனச் சொல்கிறது. ஆக இது போன்ற உணவுகளை உட்கொள்ளும் போது அந்த நச்சுத்தன்மையினால் பாதிப்பு ஏற்படுவது இயற்கை...

ஒருவேளை, ஆபத்து இப்போது இல்லாதிருக்கலாம், இருப்பினும் தொடர்ந்து உட்கொள்ளுவதனால், நாம் ஆபத்தை நோக்கி பயணிக்கிறோம் என்பது சந்தேகமில்லாது தெரிகிறதே...

பழங்களையும், காய்கறிகளையும், முக்கியமாக கீரை வகைகளையும் அன்றாட உணவு வகைகளாக நாம் சேர்த்துக்கொள்வதனால் மட்டுமே நமது ஆரோக்கியத்தை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும். இவற்றோடு நிறைய தண்ணீர் குடித்து வரப் பழகினோமேயானால், நோய் நொடியின்றி பல காலம் வாழலாம்.