Thursday 1 May 2014

இஞ்சிச்சார் தேனீர்...


 நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் விரும்பி அருந்துவது இந்த இஞ்சிச்சார் தேனீர்...   மலேசியாவில் இது ஒரு புகழ்பெற்ற பானம். 'தே ஹாலியா " என மலேசிய மொழியில் இது மிகப் பிரபலம். இஞ்சியின் சாற்றில் ஒரு பகுதியை சேர்த்து தே நீரில் கலந்து தருவதனால் இந்தப் பெயர் இதற்கு.

உலகிலுள்ளோர் அனைவருக்கும் அடிப்படைத் தேவை ஒன்றே ஒன்றுதான்....உணவு. அந்த உணவும் சரியானதாகவும், முறைப்படியும் அமைந்துவிட்டால், என்றென்றும் ஆரோக்கியமாக வாழலாம். 

ஃபாஸ்ட் ஃபூட் எனத் தொடங்கி ரெடிமேட் ஃபூட் என புளியோதரை முதல் ரசப் பொடி, சாம்பார் பொடி, இட்லி, தோசை, உப்புமா என பலவற்றையும் பொடிகளாக செய்து தேவைப்படும் நேரத்துக்கு சமைத்துக்கொள்ள கிடைக்கிறது இப்போது. மேலோட்டமாக பார்க்க இது நமக்கு பெரும் உதவியாய் அமைவது போலத் தெரிந்தாலும், சற்று உற்று நோக்கினால், நீண்ட கால பயன்பாட்டில் நமக்கு இது போன்ற திடீர் உணவுகள் ஆபத்தாய் முடிவது புலப்படும்.

இதில் ஒரு வித ரசாயணம் சேர்வதால் உணவுப்பொருட்கள் என்னவோ குறிப்பிடும் காலம் வரை பதப்படுத்தப்பட்டு கெட்டுப்போகாமல் இருக்க உதவுகின்றது என்பது உண்மைதான். ஆனால், இந்த ரசாயணக் கலவையைத்தான் மருத்துவ சமூகம் விஷமெனச் சொல்கிறது. ஆக இது போன்ற உணவுகளை உட்கொள்ளும் போது அந்த நச்சுத்தன்மையினால் பாதிப்பு ஏற்படுவது இயற்கை...

ஒருவேளை, ஆபத்து இப்போது இல்லாதிருக்கலாம், இருப்பினும் தொடர்ந்து உட்கொள்ளுவதனால், நாம் ஆபத்தை நோக்கி பயணிக்கிறோம் என்பது சந்தேகமில்லாது தெரிகிறதே...

பழங்களையும், காய்கறிகளையும், முக்கியமாக கீரை வகைகளையும் அன்றாட உணவு வகைகளாக நாம் சேர்த்துக்கொள்வதனால் மட்டுமே நமது ஆரோக்கியத்தை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும். இவற்றோடு நிறைய தண்ணீர் குடித்து வரப் பழகினோமேயானால், நோய் நொடியின்றி பல காலம் வாழலாம்.

No comments:

Post a Comment