Thursday 11 August 2011

எம்ஜிஆர் பற்றி கண்ணதாசன்.... 4


 1980 – ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்! வெற்றியெனும் படிகளில் ஏறியே பயணப்பட்டு, பழக்கமாகிப் போன எம்.ஜி.ஆர். இத்தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தார்.

 இந்திரா காங்கிரஸ்தி.மு.. என்ற கூட்டணித் திமிங்கலம், எம்.ஜி.ஆர். என்ற கடலில் இருந்த வெற்றி எனும் சுறாமீன்களையெல்லாம் விழுங்கிவிட்டது.

 எம்.ஜி.ஆர். இயக்கம் சிவகாசி, கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய இரு பாராளும்ன்ற இடங்களை மட்டுமே பெற்றது.

 ‘இரு விரல்களைக் காட்டியவர்க்கு இரண்டு இடங்களே கிடைத்தனஎன்று வலுவான எதிர்முகாமினர், இரட்டை இலைச்சின்னத்தையும் இடித்துரைத்துப் பேசலாயினர்.

 இத்தோடு விட்டார்களா? கூட்டணி பலத்தை நம்பி எம்.ஜி.ஆர். அரசு மீதும் இல்லாத பொல்லாத ஊழல் குற்றச் சாட்டுகளைக் கூறி, அரசையும் கலைத்து விட்டார்கள்.

 மாபெரும் வீரர் எம்.ஜி.ஆருக்கு இது பெரும் மானப்பிரச்சனையாய் மாறிவிட்டது.

 அரசைக் கலைத்தவுடன், இனி, எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான் என்ற அதிரடிப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன.

 எம்.ஜி.ஆர். ஆமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நாஞ்சில் கி. மனோகரன், மொடக்குறிச்சி சுப்புலட்சுமி போன்ற பலரும் மாற்று முகாம்களை நோக்கிப் புறப்பட்டனர்.

 1980 – ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ‘தி.மு.காங்கிரஸ்கூட்டணி இரு கட்சிகளும் சரி பாதி இடங்களில் போட்டியிட்டன. கூட்டணி வென்றால் கலைஞர் கருணாநிதியே தமிழக முதல்வர் என்று அறிவிக்கப்பட்டது.

 தமிழகப் பத்திரிக்கை உலகமோ, ‘சாய்ந்தால் சாய்கின்ற பக்கம்’, என்ற போக்கில்தி.மு.இந்திரா காங்கிரஸ் கூட்டணி 210 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில், விட்டலாச்சார்யா படங்களில் வரும் மாயமந்திர ஜாலங்களைப் போன்றவற்றைச் செய்திகளாக்கி மக்கள் மத்தியில் திணித்தன.

 ஆர்ப்பரிக்கும் ஆரவாரக் கூட்டணிக்கு நடுவில், மத்திய மந்திரிசபையின் படையெடுப்பிற்கு மத்தியில், கலைஞரின் உடன்பிறப்புகளின் உற்சாகப் போர்ப்பரணிக்கு இடையில், எம்.ஜி.ஆர் என்ற தனி மனிதர், தாய் சத்தியா கருவினிலே வளர்த்து ஈந்த தைரியத்தைத் தாரக மந்திரமாய்க் கொண்டு, தனது அனைத்திந்திய அண்ணா தி.மு.கழக மறவர்களின் மாபெரும் துணையோடு, என்றும் தளராத பாசத்தை அள்ளித்தரும் தாய்மார்களின் தணியாத பக்கபலத்தோடு தமிழக மக்களைத் துணிச்சலோடு தேர்தல் களத்தில் சந்தித்தார்.

 நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்? எனது தலைமையிலான அரசு கலைக்கப்பட்டது நியாயமா? மக்களே! நீங்களே எனக்கு நீதி வழங்குங்கள்!’ என்றே, எம்.ஜி.ஆர். சென்ற இடங்களில் எல்லாம் பேசினார்.

 மறுமுனையில், பத்திரிக்கை கணிப்புகள், பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதங்களை எடுத்துக் கூறியே, ஏகோபித்த நம்பிக்கையுடன் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

 தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே மறுமுனையில் வெற்றிவிழாச் சுவரொட்டிகள், நன்றி அறிவிப்புச் சுவரொட்டிகள் தயாராயின என்றும்; வள்ளுவர் கோட்டத்தில் கலைஞர் பதவியேற்பு விழாவிற்காக ஆயத்தங்கள் செய்யப்பட்டு விட்டன என்றும் பேச்சுகள் எழுந்தன.

 ஆனால் தேர்தல் முடிவுகளோ?… தலைகீழாய் மாறிப்போயின.

 மானப்பிரச்சனையாய், தன்மானத்தோடு தேர்தலைச் சந்தித்த மாவீரன் எம்.ஜி.ஆர். இயக்கமே மாபெரும் வெற்றியைப் பெற்றது.

 எம்.ஜி.ஆர். மதுரை மேற்குத் தொகுதியில் இருந்து, இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 1977 – ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 126 இடங்களைக் கைப்பற்றிய புரட்சித்தைவரின் ...தி.மு. கழகம் 1980 – ஆம் ஆண்டுத் தேர்தலில் 139 இடங்களைக் கைப்பற்றியது.

 எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் மனிதநேயச் செல்வருக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கைக் கண்டு, எதிர் அணியினர் அதிர்ந்தனர். பத்திரிக்கை உலகமோ பிரமித்தது. அன்னை இந்திராவோ அவசரப்பட்டுச் செய்த தன் செயலுக்காகப் பின்னர் வருந்தினார்.

 இப்போது புரிகிறதா? கண்ணதாசன் என்ற காலக்கவிஞரின் கவிதை வாக்குகள் வாகைசூடிய விதங்களின் விநோதங்கள்…..!

 கண்ணதாசனே கூறுவாரே!

கவிஞர் யானோர் காலக் கணிதம்
 கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
 ……………………………..
 வளமார் கவிகள் வாக்குமூலங்கள்
 இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!”

 என்றெல்லாம்…………..

 அவர் சொன்னவை சரிதானே!

 நாம் உள்ளத்து உணர்வுகளை, துள்ளி எழுப்பி, உடன் அழைத்து, அமரவைத்து உணரச்செய்யும்,

அச்சம் என்பது மடமையடா!
 அஞ்சாமை திராவிடர் உடமையடா!”

என்ற பாடலைப்போல், ஏராளமான பாடல்களை எம்.ஜி.ஆர். படங்களுக்காகக் கண்ணதாசன் படைத்து ஈந்துள்ளார்.

 அவற்றுக்கெல்லாம் இப்பாடலுக்குக் கூறிய விளக்கங்கள் போல் விரிவுரைகள் காண்போமாயின், ‘கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர்!’ எனும் இந்நூலை, ஆயிரக்கணக்கான பக்கங்களுக்குமேல் தொடர வேண்டிய நிலை ஏற்படும்.

 எனவே, இனிவரும் காலத்தை வென்ற பாடல்களுக்கான கருத்துகளைச் சுருங்கக் காண்போம்.

 இடையிடையே நம் இனிய கவிஞர், எம்.ஜி.ஆரைப் பற்றிக் கூறிய அரிய செய்திகளையும் அறிந்து செல்வோமாக. அத்துடன், அதிசய மனிதர் எம்.ஜி.ஆர். கண்ணதாசனைப் பற்றியும், அவரது பாடல்கள் குறித்தும் குறிப்பிட்ட சில செய்திகளையும் கண்டு செல்வோமாக.

 1980 – ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைப் பற்றிக் குறிப்பிட்ட கண்ணதாசன், ‘இந்தியாவை அன்னை இந்திரா ஆளவேண்டும்! தமிழகத்தை எம்.ஜி.ஆரே ஆளவேண்டும்! என்று தமிழக மக்கள் விரும்பினார்கள். விருப்பங்களின் விளைவே பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள்!’ என்று குறிப்பிட்டார்.
கண்ணதாசன் பாடல்களின் சிறப்பு! எம்.ஜி.ஆர். பாராட்டு!

 கண்ணதாசன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் சர்வகட்சித் தலைவர்கள் (தி.மு.கழகம் நீங்கலாக) கலந்துகொண்ட இரங்கல் கூட்டம் 24.10.1981 அன்று நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை அமைச்சராக அன்று பதவி வகித்த ராஜதுரை உரையாற்றம்போது,

 “கண்ணதாசன் எழுதிய பாடலைத் தவிர வேறு யார் எழுதிய பாடலையும் இரண்டாவது முறை கேட்கமுடியாது என்று முதல்வர் எம்.ஜி.ஆர். ஒருமுறை பாராட்டிக் கூறினார். முதல்வருக்கும், கண்ணதாசனுக்கும் இடையே ஒரு இடைவெளி இருந்த நேரத்தில் இதனைக் குறிப்பிட்டார்!” என்று கூறினார்.

 இரங்கல் கூட்டத்தில் உரையாற்றிய தமிழகத்தின் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். ‘அச்சம் என்பது மடமையடா!’ பாடலை டேப்பில் இருந்து ஒலிக்கச் செய்தார்.

 பின்னர் பேசும்போது,

 “இந்தப் பாட்டின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தால் இதை எல்லா மக்களின் மனதிலும் பிதயவைக்க முடியாது. சினிமா மூலந்தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு, சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது.

 சாதாரண மக்களும் இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் பாடல்களைப் படைத்தவர் கண்ணதாசன்.

 கண்ணதாசன் பாடி, நடித்த பாடல்காட்சிகளை டெலிவிஷனில் அடிக்கடி ஒலி-ஒளிபரப்ப வேண்டும்!” என்று குறிப்பிட்டார்.

 இலங்கை அமைச்சர் பேச்சின் மூலமும், எம்.ஜி.ஆரின் பேச்சின் மூலமும் கண்ணதாசன் பாடல்களின் தனிச்சிற்ப்புகள் புலப்படுகின்றன. அத்துடன், அப்பாடல்கள் எம்.ஜி.ஆர். என்ற மனிதநேய நெஞ்சத்தைத் தொட்டு, உயர்ந்த இடத்தைப் பிடித்த நுட்பமும் புலனாகிறது அல்லவா?
தாய் சொல்லைத் தட்டாதே!

 தேவர் பிலிம்ஸ் திரைப்படங்கள் என்றாலே, எம்.ஜி.ஆருக்கு ஏற்றதுபோல், தாய்மையைப் போற்றும் தலைப்புள்ள படங்களாகவே பெரும்பாலும் இருக்கும்.

 அவற்றுள் ஒன்றுதான், ‘தாய்சொல்லைத் தட்டாதே!’ என்ற படம். 1961 – ஆம் ஆண்டு கண்ணதாசன் வசனம் தீட்டி, சமூகப்படங்களில் எம்.ஜி.ஆர் நடித்து, வெற்றிக்கொடி நாட்டியதிருடாதே!’ எனும் மூன்று திரையரங்குகளில் திரையிடப்பட்டு, மகத்தான வெற்றியை சென்னை மாநகரில் ஈட்டியது.

 இப்படத்தில் கண்ணதாசன் எழுதிய எல்லாப் பாடல்களும் கருத்துச்சுவையும், இனிமையும் நிரம்பிய பாடல்களே கே.வி. மகாதேவன் இசையில்,

காட்டுக்குள்ளே திருவிழா!
 கன்னிப் பொண்ணு மணவிழா!
 சிரிக்கும் மலர்கள் தூவி,
 சிங்காரிக்கும் பொன்விழா!”

என்று, காதல் வெற்றியில் மிதக்கும் கன்னிப்பெண், பாடிக் குதூகலிக்கும் பாடலைக் கவியரசர் இப்படத்திற்காக ஈந்தார்.

 இப்பாடல் 1962 – ஆம் ஆண்டு தேனி சட்டமன்றத் தொகுதியில், அன்றைய தி.மு.கழக வேட்பாளராகப் போட்டியிட்ட இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ஆருக்குப் பிரச்சாரப் பாடலாக மாற்றி ஒலிக்கப்பட்டு பெருமிதம் அடைந்த பாடலாகும்.

தேனியிலே திருவிழா!
 தேர்தலெனும் பெருவிழா!
 ஜெயிக்கும் எஸ்.எஸ்
 ராஜேந்திரனுக்கு வெற்றிவழா!”

என்றமைக்கப்பட்டு, வளமான வரவேற்பைப் பெற்றதாகும்.

 இப்படத்தில்,

 கேட்போர்க்குப் பாடலாய், பல்லாண்டு வாழும் பாடலொன்றும் உள்ளதை கேட்க வேண்டாமா? கேட்போம்….!

போயும் போயும் மனிதனுக்கிந்த
 புத்தியைக் கொடுத்தானே! – இறைவன்
 புத்தியைக் கொடுத்தானே! – அதில்
 பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
 பூமியைக் கெடுத்தானே! – மனிதன் பூமியைக் கெடுத்தானே!”

கேட்டோம்! பாடலின் ஆரம்பமே பாடந்தானே!

 மனிதனுக்குப் புத்தியைக் கொடுத்தவன் இறைவன் ஆனால்….!

 புத்திகுள் பொய், புரட்டு, திருட்டு ஆகியவற்றைக் கலந்து பூமியைக் கெடுத்தவன் மனிதன்!

 இங்கே குற்றவாளி யார்? மனிதன் தானே!

 மனிதனின் செயல்களுக்குள் மறைந்திருக்கும், மர்மங்களையும் நாம் அறிய வேண்டாமா? கவிஞரே சொல்லட்டும்….! அறிவோம்!

கண்களிரண்டில் அருளிருக்கும்! – சொல்லும்
 கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்!
 உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்! – அது
 உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்!”

 அறிந்தோமா?

கண்ளோ அருள் பொழியும் அருவி!
 உள்ளமோ பொய்நிறைந்த கடல்!
 கருத்தினிலோ ஆயிரம் பொருள்கள்! – அவையே
 கருவுக்குள் பிறந்தோரைக் கொல்லும் ஆயுதங்கள்!’

 மனிதச் செயல்களுக்குள் மறைந்திருக்கும் மர்மங்கள் இவ்வளவுதானா?

 படத்தில் நடிக்கும் மக்கள் திலகம், மக்களுக்குச் சொல்லும் பாடமாகக் கவியரசர் அள்ளித்தரும் கருத்துகளை இன்னும் கேட்பீர்களாக!

பாயும் புலியின் கொடுமையை இறைவன்
 பார்வையில் வைத்தானே! – புலியின்
 பார்வையில் வைத்தானே! – இந்தப்
 பாழும் மனிதனின் குணங்களை மட்டும்
 போர்வையில் மறைத்தானே! – இதயப்
 போர்வையில் மறைத்தானே!…
 கைகளைத் தோளில் போடுகிறான்! – அதைக்
 கருணை என்றவன் கூறுகிறான்!
 பைகளில் எதையோ தேடுகிறான்! – கையில்
 பட்டதை எடுத்தே ஓடுகிறான்!”

கேட்டீர்களா?

 ‘பாயும் புலியின் கொடுமை பார்வையில் பாழும் மனிதனின் குணங்கள் இதயப் போர்வையில்! அப்படியானால்….!?

 பாயும் புலியின் கொடுமையிலிருந்து தப்பலாம்? பாழும் மனிதனின் மறைக்கப்பட்ட குணக்கேடுகளில் இருந்து தப்பமுடியுமா?

 தப்ப முடியாது தவிக்கும் மனிதனுக்குத் தொடர்ந்து வரும் சோதனைகளைப் பாருங்களேன்!

 பழகிவிட்டது போன்ற பாவனையில், வருகிறான் ஒருவன்; வந்தவன் தனது கைகளை அருகில் உள்ளவன் தோள்களில், கருணை என்ற போர்வையில் போடுகிறான்! உரிமையோடு பைகளில் எவற்றையோ தேடுகிறான்! கைகளில் அகப்பட்டதை எடுத்தே ஓடி விடுகிறான்…..!

 கருணைக்கும், உரிமைக்கும் இடம் தந்தவன் ஏமார்ந்து நிற்கிறான்!’

 இப்படி, மனித சமுதாயத்தில் உலாவும், இந்தப் போலிகளை அடையாளம் காட்ட, புரட்சிநடிகர் புகட்டிய புரட்சிக் கருத்துகளுக்கு ஏற்றவாறு, எவ்வளவு அருமையாகப் பாடலைப் புனைந்து தந்துள்ளார் கவியரசர். இத்தகு பாடல்கள் அமையும் வண்ணம், தான் நடிக்கும் படங்களில் கருத்தைச் செலுத்தி வென்ற எம்.ஜி.ஆரை எப்போதும் கண்ணதாசன் பார்த்த பார்வைகளும் பரவசம் ஊட்டுவனவே எனலாம்.

 பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடித்து 1962 – ஆம் ஆண்டில் வெளியான படங்கள் ஆறு. இவற்றில் சமூகப் படங்கள், ‘தாயைக் காத்த தனயன்’, ‘குடும்பத் தலைவன்’, ‘பாசம்’, ‘மாடப்புறாஉள்ளிட்ட நான்கு படங்கள்.

 ‘ராணி சம்யுக்தாவரலாற்றுப் படம். ‘விக்கிரமாதித்தன்கற்பனை கலந்த ராஜாராணிப் படம்.

 இவற்றுள் 1962 – ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளில் வெளியான படமே ராணி சம்யுக்தா. சரஸ்வதி பிக்சர்ஸ் தயாரித்து, டி. யோகானந்த் இயக்கிய இப்படத்தின், திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசனே.

 முதல் சுற்றில் முழு வெற்றியை எட்டாத இப்படம். பின்னர் கவிஞரின் தெவிட்டாத இன்பத்தைத் தேனாய்ப் பொழிந்த கருத்து நிறைந்த பாடல்களுக்காகவும்; கனிரசமான வசனங்களுக்காகவும் தமிழகமெங்கும் வெற்றிக்கொடியை ஏந்திப் பவனி வந்தது.

 ராணி சம்யுக்தாவாக நாட்டியப் பேரொளி பத்மினியும், பிருதிவிராஜனாகப் புரட்சி நடிகரும், ஜெயச்சந்திரனாக சகஸ்வர நாமமும், கோரி முகமதுவாக எம்.என். நம்பியாரும் நன்றாகவே நடித்திருந்தனர்.
கொள்கைப் பாடல்

 இப்படத்தில் புரட்சி நடிகரின் அன்றைய இயக்கமான தி.மு.கழகத்தின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தை, நாட்டு மக்களின் உள்ளத்தில் பதிய வைக்கும் எண்ணத்தில் கவியரசர் ஒரு பாடலை எழுதினார்.

 அதனை இப்போது காண்போமா?

இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
 உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”

 இதுவோர் தாய் பாடும் தத்துவத் தாலாட்டு. கணவனோ போர்க்களத்தில் பகைவர்களைப் பாய்ந்து, பாய்ந்து வெட்டிச் சாய்த்து வெற்றி காணச் சென்றுள்ளான். அவனது தலைவியோ, பெற்ற மகனைத் தொட்டிலில் இட்டு, அந்த மகன் துயர் நீங்கிச் சுகமாக நித்திரை கொள்ளத் தாலாட்டுகிறாள்.

 அந்தத் தலைவியாம் தாய் பாடும் தாலாட்டில், தென்றலென இன்ப சுகம் மிதந்து வரும்படிக் கவிஞர் எழுதிய நயமான வரிகளைக் கண்டீர்களா?

 ஓர் இயக்கத்தின் சின்னத்திற்கு இதைவிட எப்படி ஏற்றம் பெற்றுத்தர முடியும்?

 இந்த இனிய கீதம் இன்னும் தொடரும் விதத்தை நம் இதயங்கள் அறிய வேண்டாமா? தொடரும் கீதத்தை அறிந்திட வாருக்கள்!

புதிய காலம் பிறந்ததென்று போர்முகத்தில் ஏறிநின்று
 பகைவர் வீழப் போர்புரியும் நாட்டிலேநீயும்
 பழம்பெருமை விளக்க வந்தாய் வீட்டிலேகண்ணே!
 இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
 உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”

 அறிந்தீர்களா! அற்புதமான கீதத்தை….!

 பழமைமிகு வரலாற்றுக்கதை கொண்ட திரைப்படத்தில், நாட்டு நடப்பினை நடமாட வைத்து, தமது இயக்கம் வளரும் தன்மையையும் இலைமறைக்காயாகக் காட்டி, தமது இயக்கச் சின்னத்தையும் நாட்டு மக்களின் இதயங்களில் இடம்பெறச் செய்த அற்புதத்தை அறிந்தீர்கள்!

 இப்படி, திரைப்பட உலகில், கொண்ட கொள்கைகளை எடுத்துக்கூறி வளர்க்க எல்லோராலும் இயலுமா? அது எம்.ஜி.ஆர். போன்ற ஏற்றமிகு நடிகராலும், கண்ணதாசன் போன்ற கருத்தாழம் கொண்ட கவிஞராலும் மட்டுமே முடியும்.
நெஞ்சிருக்கும் வரைக்கும்!

 ‘ராணி சம்யுக்தாபடத்தின் பாடல்கள் அனைத்துமே நம் நெஞ்சங்களை நெகிழவைத்து, சுவைகூட்டும் பாடல்களே!

 பாரதி கண்ட புதுமைப்பெண்கள் புதிய வரவாய், புறப்பட்டு வரும் நாட்டிலே, பெண்கள் படும் இன்னல்களை நம் கவிஞர் கண்ணதாசன் பட்டியலிட்டுக் காட்டும் பாங்கினையும், பி. சுசீலா தம் குரலில் வேதனையோடு வெளிப்படுத்துவதையும் கேட்போமே!

சித்திரத்தில் பெண்ணெழுதி
 சீர்படுத்தும் மாநிலமே!
 ஜீவனுள்ள பெண்ணினத்தை
 வாழவிட மாட்டாயோ?”

 பாடலின் தொடக்கத்திலேயே வெடித்துக் கிளம்பும் புரட்சியின் வேகம் புரிகிறதா?

 இவைபோன்ற பாடல்களைப் புரட்சி நடிகர் தலைவரைப் பற்றி இப்படத்தின் நாயகி கூறுவதாகக் கவிஞர் எழுதிய காவிய கீதம் ஒன்றையும் கேட்போமே!

நெஞ்சிருக்கும் வரைக்கம் நினைவிருக்கும்அந்த
 நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்எந்தன்
 நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்அந்த
 நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்!”

 எம்.ஜி.ஆர். புகழை, என்றைக்கும் எடுத்துச் சொல்லும் காவிய கீதந்தானே இது.

 இப்போதும் மக்கள் நெஞ்சங்கள் சொல்லும் உண்மை இதுதானே!

 இன்னும் அவர்தோற்றம் எப்படியாம்?

கொஞ்சும் இளமை குடியிருக்கும்பார்வை
 குறுகுறுக்கும்! மேனி பரபரக்கும்!”

 - என்றும் பதினாறு எம்.ஜி.ஆரைக் கவிஞர் வேறு எப்படிச் சொல்லுவார்?

வாளினிலே ஒருகை மலர்ந்திருக்கும்!”

என்றும்,

தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்!”

என்றும், வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆரைக் கவியரசர் போற்றிப் புகழ்ந்திடுவார். புகழ்வதென்ன? உண்மை நிலையைத்தானே உலகறியக் கவிவேந்தன் கவிதை, சொல்லிச் சென்றது.
தாயைக் காத்த தனயன்!

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
 நற்றவ வானினும் நனிசிறந்தனவே!”

என்று பாடிய பாரதியாரின் பாடலுக்கு, இலக்கணமாய் வாழ்ந்து காட்டியவரே புரட்சித்தலைவர்.

 தாய்ப்பாசத்தில் தன்னிகரற்று விளங்கியதுபோலவே, பிறந்த தாய்த்திரு நாட்டின்மீதும் அளவில்லாப் பற்றுகொண்டு வாழ்ந்தவரே எம்.ஜி.ஆர். என்பதனை எல்லோரும் அறிவர்.

 அவரது தாய்ப்பாசத்தை நன்கறிந்த தேவர் திருமகனார், அவருக்கேற்றவாறே தனது படங்களில் பெயரினைச் சூட்டி மகிழ்வார் என்பதும் நாமறிந்த ஒன்றே.

 ‘தாயைக்காத்த தனயன்படம், 1962 – ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளில் திரையிட்ப் பெற்று, பெரும் வெற்றியை ஈட்டியது.

 இப்படத்தின் இனிய பாடல்கள் அனைத்தையும் கவியரசரே எழுதினார்,

கட்டித் தங்கம் வெட்டி எடுத்து,
 காதல் என்னும் சாறு பிழிந்து,
 தட்டி தட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா! – அவள்
 தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!”

என்று, என்றும் புதுமையாய்ப் பூத்துக் குலுங்கி, நிலைத்து நிற்கும் காதல் ஓவியப்பாடலை யார்தான் மறக்கமுடியும்?

 புரட்சி நடிகரும், ‘அபிநய சரஸ்வதிசரோஜாதேவியும் இணைந்து நடித்த அப்பாடல் காட்சியை இன்றும் இரசிக்காதவர் யாரேனும் உண்டா?

பேரைச் சொல்லலாமா?
 கணவன் பேரைச் சொல்லலாமா?”

என்று வினாக்களை எழுப்பி,

பெருமைக்கு உரியவன் தலைவன்ஒரு
 பெண்ணுக்கு இறைவன் கணவன்!”

எனத் தமிழ்ப் பண்பாட்டைப் பதியம் போட்டுச் செல்லும் பாடலை இனி யார் தருவார்?

காவேரிக் கரையிருக்கு
 கரை மேலே பூவிருக்கு
 பூப்போலப் பெண்ணிருக்கு
 புரிந்து கொண்டால் உறவிருக்கு!”

இப்படி மலர்ந்து;

காதலன் என்ற வார்த்தை
 கணவன் என்று மாறிவரும்!
 மங்கை என்று சொன்னவரும்
 மனைவி என்று சொல்ல வரும்!”

என்றே, பிறந்த மண்ணின் மகிமையைக் கண்ணயத்தோடு, காதல் பாடலில் தந்தால் சுவைக்காத உள்ளங்களும் சுவைக்குமே!

இன்னும் நம் இதயங்களை இனிமையாக்கும் பாடல்களோடு,

நடக்கும் என்பார் நடக்காது!
 நடக்கா தென்பார் நடந்துவிடும்!
 கிடைக்கும் என்பார் கிடைக்காது!
 கிடைக்கா தென்பார் கிடைத்துவிடும்!”

என்ற, நாட்டு நடப்பை நன்றாகக் கணித்துக் கூறும் தத்துவப்பாடலையும் தந்து, புரட்சித் தலைவரின் படத்தில் வெற்றிக்குப் பக்கபலமாய்க் கவியரசர் நின்றதுண்டு.

 சரி, எம்.ஜி.ஆர் படங்களுக்குக் கண்ணதாசன் எழுதிய முத்தான பாடல்களை மட்டும் பார்ப்போம் என்றீர்? இப்போது ஒரு படம் என்றால் அதில் வரும் பாடல்களை, ஏறத்தாழ எல்லாவற்றையும் குறிப்பிட்டு விடுகிறீர்களே! இது என்ன விந்தை? என்று நீங்கள் கேட்கலாம்!

 நான் என்ன செய்வது? புரட்சித்தலைவர் படத்திற்கென்று பாடல்கள் எழுதத் தொடங்கினால், கவியரசர் அனைத்துப் பாடல்களையும் நன்முத்துக்களாகவே படைத்து விடுகிறார்! நான் எதை விடுப்பது? எதைக் குறிப்பிடுவது?

 காதல் பாடல்களில் கூடக் கவிஞர், எம்.ஜி.ஆர் என்ற ஏந்தலின் தனித்துவத்திற்குத் தனி முத்திரை இட்டுக் காட்டுகிறாரே? சொல்லாமல் செல்ல முடியவில்லையே!

 இதற்கெல்லாம் காரணங்கள் எவை? கவிஞரே சொல்கிறார்…. கேளுங்கள்!
டைரக்-ஷனில் நல்ல ஒரு டெக்னீஷியன் எம்.ஜி.ஆர்!

 நாகை தருமன் வெளியிட்டபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்’, என்ற புத்தகத்திற்காக, 1978 – ஆம் ஆண்டில் கவியரசர் கண்ணதாசன் தந்த பேட்டியினைக் கேளுங்கள்:

 “சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒற்றைவாடைத் தியேட்டரினுடைய ஒரு பகுதியில், ஒரு சிறிய வீட்டில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், பெரியவர் சக்ரபாணி, அவர்களுடைய தாயார் ஆகியோர் குடியிருந்தார்கள். அங்கே நானும், நண்பர் கருணாநிதியும் சென்று புரட்சித்தலைவரைச் சந்தித்தோம்.

 ஜூபிடரில் நான் இருந்திருக்கிறேன். ஆனாலும் அங்கெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்புகள் கிட்டவில்லை; இங்கேதான் முதன் முதலாகச் சந்தித்தேன்.

 இதற்கு முன்னாலே ஏறக்குறைய ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்புஅசோக்குமார்படம் பார்த்தபோது, ‘இவர் ஏன் கதாநாயகனாக நடிக்கக்கூடாது?’ என்று, என் மனதிற்குள்ளே ஒரு ஆதங்கம் எழுந்தது.

 கையிலே ஒரு கத்தியை வைத்துக்கொண்டு, ஒரு போர்க்காட்சியிலே அவர் நிற்கின்ற அழகு மிக அற்புதமாக இருக்கும்.

 அதெல்லாம் ஒற்றைவாடைத் தியேட்டர் அருகிலே புரட்சித்தலைவரைப் பார்த்தபோது என் நினைவிற்கு வந்தது.

 திராவிட முன்னேற்றக் கழகத்தவராக அவர் மாறியபின்பு, நானும், அவரும் அடிக்கடி நெருங்கிப் பழக ஆரம்பித்தோம்.

 கருணாநிதி அவரை வைத்து ஒரு படம் எடுத்தார். இந்தப் படத்திலே எனக்குப் பங்கில்லை; நான் எதுவும் எழுதவில்லை; என்றாலும் அந்தப் படம் எடுக்கப்பட்ட சமயத்தில் அவரோடு பழகியது சற்று அதிகமாக இருந்தது.

 (இந்தப் படம் எம்.ஜி.ஆர். வி.என். ஜானகி இணைந்து நடித்து, ஜூபிடர், மேகலா கூட்டுறவோடு, பலரையும் பங்குதாரர்களாக்கி, கருணாநிதி வசனம் எழுதி, சி.எஸ். ஜெயராமன் இசையமைத்து, . காசிலிங்கம் இயக்கத்தில் 1953 – ஆம் ஆண்டு வெளிவந்து, வெற்றி காண இயலாது போனநாம்எனும் படமாகும்.)

 பிறகு அவருக்கு நிறையப் படங்கள் வந்தபோது, அந்தப் படங்களுக்கு நான் எழுதவேண்டுமென்று அவர் ஆசைப்பட்டார். பலரிடம் கூட அதுபற்றிக் கூறினார்.


 (அவர்தான் எம்.ஜி.ஆர்)




No comments:

Post a Comment