Thursday 31 January 2013

குமுதம் அட்டைப் படங்கள்...ஜனவரி 13







மீண்டும் மீண்டும். . .

ஆண்மீகத்தில் தீவிரம் காட்டுவோர் ஒன்றைச் சொல்வார்கள்.

" மீண்டும் மீண்டும் இறக்கிறோம்,
  மீண்டும் மீண்டும் பிறக்கிறோம்...."

அதாவது,

பிறக்கிறோம், இறக்கிறோம்....
மீண்டும் பிறக்கிறோம், மீண்டும் இறக்கிறோம்...
மீண்டும் மீண்டும் பிறக்கிறோம், மீண்டும் மீண்டும் இறக்கிறோம்...

இப்படி நமக்கு விளங்கா விதத்தில் மகாமாயையினால் நமக்கு தெரியா வண்ணம் நம்முடைய முன்பிறவியும், அடுத்த பிறவியும் மறைக்கப்பட்டிருக்கின்றன. அதனில் இருந்து விடுவதென்பதும் முடியாது, அதனை மீறி செயல்படுவதென்பதும் முடியாது.

உதாரணதிற்கு, கண்பார்வை இல்லாத ஒருவரிடம் ஒளியினை எப்படி விளக்கிச் சொல்ல முடியும்? அதை ருசிக்க முடியுமா, நுகர முடியுமா அல்லது தொடத்தான் முடியுமா? பார்க்க மட்டுமே முடிகின்ற அதை நிரூபிக்க எவ்வளவு சிரமம் ஏற்படுகிறது. நம்முள் ஆன்மா இருப்பதை நிருபிப்பதென்பதும் அப்படியே.

இதைப்போலவே நமது சாஸ்திரங்கள் சொல்லுகின்ற பலவற்றை நம்மால் நிரூபிக்க இயலாது. அதற்காக அவை இல்லையெனும் பொருளில் கொள்வது முறையும் அல்ல.

சில நேரங்களில் எவற்றையெல்லாம் நிரூபிக்க முடியாமல் போகிறதோ அவற்றை நம்புவதைத் தவிர வேறெந்த வழியும் நமக்கு கிட்டுவதில்லை, அதில் ஒரு வேலை உண்மை இருக்குமோ எனும் எண்ணத்தில்.

அதனை தெரிந்து கொள்வதில் நேரத்தை செலவிடுவதை விடுத்து, இப்போதே, இந்த உலகத்தையே ஆனந்தமானதாய் எண்ணி இருக்கப் பழகிக் கொள்வதே சிறப்பு.

" நான்" எனும் ஆனவம் அழியும் நேரம், "தான்" எனும் ஆன்மா நம்மில் பூரணத்துவம் பெறும் என்கிறார்கள் சான்றோர்.

கோலாலும்பூர் . . .

தலைநகரின் எந்தப் பகுதியில் இருந்து நமது நாட்டின் பெருமைக்குறிய இரட்டைக்கோபுரத்தைப் பார்த்தாலும் அதன் அழகு பன்மடங்கு கூடுகிறதே தவிர எவ்விதத்திலும் குறைந்தது போல் காணோம்.

Tuesday 29 January 2013

குழந்தைகள் விளையாடும் பொருளா கைபேசி?


கைபேசியில் ஏற்படும் கதிர்வீச்சினால் மூளையில் புற்றுநோய் கட்டிகள் உருவாகும் ஆபத்து இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

பெரியோரைக் காட்டிலும் குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் கதீர்வீச்சு தாக்குதல்  குழந்தைகளை சுலபமாக பலவீனப் படுத்தும்  அபாயம் அதிகம் உள்ளது.

பொதுவாக  ரிங் போகும் போது குழந்தைகள் ஆர்வத்தோடு கைபேசியை காதுக்கருகே வைத்து கேட்பார்கள். பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட  நிஜத்தில்  ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது என ஆய்வுகள் சொல்கின்றன.

இப்போதுள்ள கைபேசிகள் பல விதமான விளையாட்டுக்களுடன் வருகின்றன. குழந்தைகள் சிரமம் எடுத்து கூர்ந்து கவனித்துப் பார்ப்பதால் அவர்களின் கண்கள் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகம் எனவும் சொல்லப்படுகிறது.

மேல் சொன்னவற்றை தவிர, சில பொதுவான காரணங்களுக்காகவும் குழந்தைகளிடம் கைபேசி கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்கவேண்டும்.

முக்கியமாக, பிள்ளைகளின் கவனம்  எல்லாம் கேம்ஸிலும் , எஸ்.எம்.எஸ்ஸிலும் இருந்தால் பிறகு அவர்கள்  எவ்வாறு படிப்பார்கள்?
" அட கைபேசிதானே" என பெற்றவர்கள் அலட்சியமாக இருக்கும்போது மாணவர்கள் என்ன செய்வார்கள்? கல்வியில் இதனால் அவர்கள் கவனம் சிதறுகிறது.

உண்மையில் சில பள்ளிப் பிள்ளைகள் கைபேசியில் கண்ட கண்ட வீடியோக்களை பார்க்கிறார்கள்.  இவர்களா பின் காலத்தில் உறுப்படப் போகிறார்கள்? இப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு பெற்றோர்களே காரணமாக இருக்கலாமா?

கைபேசி முக்கியத் தகவல்களை  பரிமாறிக் கொள்ளும் சாதனமாக இருப்பதில் நன்மைகள் அதிகம் தான். ஆனால், அதற்கும் மேல் போய் பல தொல்லைகளுக்கு காரணமாகி பாதிப்பை எற்படுத்தும்போதுதான் அதன் பயன்பாட்டை தீர்மானிக்கவேண்டியதிருக்கிறது.

ஆக, குழந்தைகளின் மேல் கவனம் செலுத்தும் பெண்கள், அவர்களின்  எதிர்காலத்தை பாலடிக்கும் இந்த கைபேசியை தவிர்ப்பது அவசியம்.

இப்போது நடக்கும் பெரும்பாலான விபத்துக்களுக்கு வாகன ஓட்டிகள் கைபேசியினை கவனக்குறைவாக உபயோகிப்பதும் ஒரு முக்கிய காரணமே.

பெண்களுக்கு முறைகேடாக வரும் அழைப்புகளைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறோம்.

அது மட்டுமா, 'டெலி மார்க்கெட்டிங்' என தேவை இல்லா அழைப்புக்களுக்கு நாம் பதில் சொல்ல செலவிடும் நேரத்தை திரும்பப் பெற முடியுமா?

'ரிங் டோன்', 'ஜோக்ஸ்', 'கேம்ஸ்', 'பழகலாம் வாங்க' என பலவித விளம்பரங்களினால் 'பிரிபேய்ட்' கையிருப்பை குறைக்கும் வழிகளையும் கைபேசி நிறுவனங்கள் கற்று வைத்திருக்கின்றன.

எனவே, பல சந்தேகங்களை எழுப்பும் கைபேசி பயன்பாடு குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்பதை ஒவ்வொரு பெற்றொரும் தெரிந்திருப்பது சாலச் சிறந்தது.

'மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல்கூட சில நாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவை யாவும் நீயாகுமா
அம்மாவென்றழைக்கின்ற சேயாகுமா?
ஆராரோ ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆராரோ ஆரிராரோ'


என தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தும் அதே நேரம் குழந்தைகளை கண்டிக்கும் பொறுப்பும் ஒரு தாய்க்கு அதிகம் உண்டு என்பதை தெரிந்து கொள்ளுதல்  பிள்ளைகள் அறிவுத்திறனோடு வளர வழிவகுக்கும் செயலாகும்.

'எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே..
அது நல்லவராவதும் தீயவராவதும்

அன்னை வளர்ப்பினிலே...'

என எம் ஜி ஆர் பாடியது எவ்வளவு உண்மை என்பதை குழந்தைகள் வளர வளர தாய்க்குலத்துக்கு நன்கு தெரியும்...

விஸ்வரூபம் பார்த்தேன்...

விஸ்வரூபம் முதல் நாள் காட்சியைப் பார்த்தோரில் நானும் ஒருவன்.  ஆனால் அதில் குறிப்பிட்டுச் சொல்லும் விதத்தில் எம்மதத்தையும் தரம் தாழ்த்திப் பேசப்படவில்லை.

வழக்கமாக அங்கும் இங்கும் நடக்கும் கலகக்காரர்களின் கதையில் வெளிவந்திருக்கும் ஒரு சாதாரண  படம் இது.  அவ்வளவே...

இந்தப் படத்தைப் பற்றி யாராவது தடை செய்யக்கோறி விண்ணப்பிக்க வேண்டியிருந்தால், அது திருமணமான குடும்பப் பெண்கள் சமூகம் செய்வதற்கான உரிமை இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். காரணம், இப்படத்தில் ஒரு மனைவி, மற்றோருவருடனான கள்ளத்தொடர்பால் தன் கணவனிடம் உள்ள தீய பழக்கங்களை கண்டறிந்து அதைக் காரணம் காட்டி அவனிடம் இருந்து விலக  ஒரு துப்பறிவாளரை அமர்த்துகிறாள். இது கணவனே கண்கண்ட தெய்வம் என போற்றிவரும் நம் குல மாதர்களின் அடிப்படை கௌரவத்தையே ஆட்டி அசைப்பது போலாகும். அதிலும் இலைமறைக்காயாக இருக்கவேண்டியவற்றை ஒலிபெருக்கியில் சொல்வதைப்போன்று திரும்பத்திரும்ப சொல்கின்றனர். உள்ளாடையை வார்த்தையால் சொல்வதில் அவ்வளவு சுகமோ? கமல் இதிலும் திருந்தியதாக தெரியவில்லை.

மற்றபடி சீரியஸான ஆக்க்ஷன் காட்சிகளைத் தவிர்த்து இது ஒரு சராசரிப் படம். இதைவிட மோசமான கதையினை பின்னனியாகக் கொண்ட ஏராளாமான ஆங்கிலப் படங்கள் வெளிவந்து வெற்றியோட்டம் கண்டு வரும் இக்காலக்கட்டத்தில் தமிழில் வெளிவரும் சற்று வித்தியாசமான இதுபோன்ற படங்கள் எதிர்ப்பில் மாட்டிக் கொள்வது ஆச்சரியப் பட வைக்கிறது. 

வழக்கமாக ஆங்கிலப் படம் பார்ப்போருக்கு கமலின் இந்தப் படம் அப்படி ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்கும் என எனக்குத் தோன்றவில்லை. அதோடு இதில் எந்த பிரமாண்டமும் இல்லை. விமர்சனம் எழுதுவோர் பல படங்களையும், பல மொழிப்படங்களையும் பார்த்து எழுதுவது சிறப்பு. இப்படி தமிழ்ப் படங்களை மட்டும் பார்த்து குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டினால், ஒரு சிறு துரும்பை கண்ணருகே வைத்துப் பார்த்து அது மலையளவு பெரியது என சொல்வது போலாகும்.


புகைப்படங்களில் புத்ராஜெயா...



இது கிழக்கையும், மேற்கையும் இணைக்கும் பாலமல்ல...
இதில் எவ்வித வாகனமும் பயணம் போவதில்லை...
இது ஆபத்து அவசரத்துக்கு மாற்றுவழிப் பாதையும் அல்ல...
ஆயினும்,
தூரத்தே இருந்து பார்க்க அழகு சொட்டும் பாலம்...
மாலையில், மஞ்சள் வெய்யிலில் மனதைக் கவரும் பாலம்...
தமிழ்த்திரையில் மலை நாட்டின் முத்திரையாக இடம்பெறும் பாலம்...

Sunday 27 January 2013

ஜுக்ரா மலை . . .


பதிவிட ஒன்றுமில்லாத போது நம்மிடத்து பாரம்பரிய பெருமையான ஜுக்ரா மலையின் ஒரு படத்தை இங்கே இடம்பெறச்செய்வது பொருந்தும் என நினைக்கிறேன்.

Friday 25 January 2013

கை நிறைய காசு, பை நிறைய நோட்டு...

ஒரு காலத்தில் பத்து வெள்ளி சம்பாதிக்க கஷ்டப்பட்ட நாம் இப்போது ஆயிரமாயிரமாக சம்பாதிக்கின்றோம். மலேசியாவில்  இந்தச் சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைக்கிறது. நமது நாட்டை மேம்பாடடையச் செய்தவர்களில் நாமும் முன்னனியில் இருப்பவர்களே. அந்த தார்மீக அடிப்படையில் நமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்கள் ஏராளம் ஏராளம்.

கல்விகூட இரண்டாம் பட்சம்  என்கின்றனர் சிலர்.  கொஞ்சம் பொது அறிவு, கொஞ்சம் சுறுசுறுப்பு, முதலீட்டுக்கான கொஞ்சம் பணம், இயற்கைக்கு புறம்பாக செயல்படாத குணம், ஒரே ஒரு சந்தர்ப்பம்... இவையே கைநிறைய சம்பாதிப்பதற்கான கலவை.  அனுபவப்பட்டோர் சொல்லும் ரகசியம் இது.

சம்பளத்திற்காக வேலைக்குச் செல்வதில் எவ்வித தவறும் இல்லை. அதனில் இருந்து அடுத்த நிலைக்கு போவதற்கு சொல்லப்படுபவைதான் மேலுள்ளவை.

இந்த இரண்டு நிலைகளையும் மீறிய இன்னொரு குழுவினரும் உண்டு.
அதிர்ஷ்டம் அழைக்கட்டும் என அலாவுதீன் பூதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்.  லாட்டரி டிக்கட்டுகளில் நம்பிக்கை வைப்போரும் இதில் அடங்குவர். ஓரிருவர்  வெற்றி பெற்றாலும், ஏனைய அனைவரும் இருப்பதையும் இழந்துவிட்டு தவிப்பவர்களே. வெளியே சாதாரணமாக தோன்றும் இவர்கள் உள்ளுக்குள்ளே ஒருவித விரக்தியுடனேயே வாழ்கிறார்கள்.

"தூர நோக்கு" குணம் கொண்டோர், கிடைக்கும் அரிய சந்தர்ப்பத்தை வெற்றிகரமாக வடிவமைத்து நம்பிக்கையுடன் புதுத் தொழில்களிலும், முதலீடுகளிலும், இதர ஞாயமான பொருளீட்டும் அம்சங்களிலும் துணிகிறார்கள். இவர்களே ஆயிரங்களிலும் இலட்சங்களிலும் புரளும் தகுதி பெறுகிறார்கள்.

"உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு..."

என  எம்ஜிஆர் பாடியதில் உண்மை உண்டு. அது வெறும் உடல் உழைப்பு மட்டுமல்ல மூளையின் பங்களிப்பையும் சேர்த்து சொல்லப்பட்டதென நாம் தெரிந்துகொண்டால் சரி.

Wednesday 23 January 2013

சைபர் வியூ பார்க். . .

பொழுது போக்க அருமையான இடம் 'மல்ட்டி மீடியா யூனிவர்சிட்டியின்' பின் வாசலின் எதிர்புறம் அமைந்திருக்கும் இந்த 'சைபர் வியூ பார்க்'.  தாமரைப் பூக்கள் நீரில் மிதந்து, தென்றலுக்கு அசைந்து கொடுக்கும் அழகிய காட்சி பார்ப்போர் மனதைக் கவரும் ஒன்று.

'புத்ராஜெயா சென்ட்ரல்' பஸ் நிறுத்துமிடத்தில் இருந்து இங்கு வர  பஸ் வசதியும் உண்டு.

Monday 21 January 2013

பணமா முக்கியம்?

ஒருவர் என்னிடம் கேட்டார்,
 " சார்,  வாழ்க்கைக்கு பணம் தானே முக்கியம்.? "

  அவர் 'பணம்தான்" என அழுத்திச் சொன்னதில் எனக்கு உடன்பாடு இல்லை....

நான் மறுத்து, " இல்லை, திறமைதான் முக்கியம் " என்றேன்.

"எப்படி?"

"திறமை இருந்தால் பணத்தோடு பலவற்றையும் அடைந்துவிடலாம். பணம் மட்டும் இருந்தால் திறமை வந்திடுமா?"

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு. . .

பழசு என்றும் புதுசு என வாழும் பல ஆயிரம் தம்பதிகளின் வாழ்க்கை நிஜத்தில் அன்பை அடிப்படையாக கொண்டதேயாகும்.

"வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்...


வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்
கண்ணில் நீரைக் காணாமல்
கவலை ஏதும் கூறாமல்
என்னை எண்ணி வாழாமல்
உனக்கென நான் வாழ்வேன்..."

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு


1967ல் வெளிவந்த  நெஞ்சிருக்கும் வரையில் இருந்து ஒரு பாடல்.

என்ன அழகான வரிகள்....
ஒருவருக்கொருவர் 'சென்டிமென்ட்" பார்த்து வாழ்ந்து வந்த அன்று எல்லா குடும்பங்களிலும் அன்பு ஆட்சி புரிந்தது.

அன்றைய திருமணங்கள் ஐம்பது / அறுபது ஆண்டுகள் நிலைத்திருந்தன. தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போகும் வாழ்க்கை முறையை கடைபிடித்து அன்பை பங்கிட்டு வாழ்ந்தனர். ஏன்.. இன்னும் அப்படி வாழ்வோரும் நிறையவே இருக்கிறார்கள். ஆனால், இன்றைய திருமணங்களில் சில இரண்டொரு வருடங்களில், மாதங்களில் அல்லது நாட்களில் முற்றுப்பெறுவது ஆச்சரியப் படவைப்பதோடு வருந்தவும் வைக்கிறது.

நடைமுறைக்கொப்பாத அளவுக்கதிகமான எதிர்ப்பார்ப்புகளே இதற்கு அடிப்படை காரணம் என்பேன் நான். அதிக எதிர்ப்பார்ப்புகள் ஏக்கங்களாகி ஏமாற்றங்களைத் தருகின்றன. ஏமாற்றங்கள் சில நேரங்களில் அசாத்திய துணிச்சலைத் தருகின்றன. இதனால் திருமண பந்தங்கள் தோல்வியடைகின்றன.

இங்கே இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். திருமணங்கள் தான் பிரச்சினையில் சிக்குகின்றனவே தவிர காதல் அதிவேகத்தில் வளர்ந்துகொண்டு இருக்கிறது. அதுவும் ஒரு பெண் 5 பேரைக் காதலிப்பதும், ஒரு ஆண் 15 பேரை விரும்புவதும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. காதல் என சொல்லி முடியுமுன்னே அனைத்தும் முடிந்துவிடுகின்ற நிலையே இன்றைய "காதல்" எனும் வார்த்தையின் நிஜ அர்த்தமாக உள்ளது. எதையுமே பாதுகாக்க அவர்களுக்கு அவசியம் இல்லை. "எல்லாம்" பரிமாறப்படுகின்றது. இந்த வாழ்க்கைச் சூழலில் இருக்கும் பெண்களும் ஆண்களும் ஒருவனுக்கு ஒருத்தி எனும் திருமண விதியினை எப்படி மனதளவில் பின் பற்றுவார்கள் என எதிர்பார்க்க முடியும்...?

தான் பார்த்துப் பழகிய பல ஆண்களிலும் பெண்களிலும் தனக்கு ஜோடியாக வாய்த்தவரை விட மேலானவர்கள் இருப்பதை ஒப்பிடுவதும் இன்னொரு காரணம்.

காதலில் ஆடி அசந்து ஓய்ந்து போன பின் அப்பாவியாக ஒருவரை மணந்து வாழ்வை தொடர்வோரும் எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டுதான் வருகிறார்கள்.  ஐந்து வருட தீவிர காதலில் காதலனிடம் அனைத்தையும் இழந்த ஒரு பெண் ஒரே நாளில் தன் மனதை மாற்றிக்கொண்டு வேறொருவருக்கு கழுத்தை நீட்டிய ஒரு சில உண்மைச் சம்பவங்களும் எனக்குத் தெரியும். இங்கு மணமகனுக்கு பரிந்து பேசவும் முடியா நிலை. காரணம், சமூக வலைத்தளங்களில் தொங்கிக்கொண்டிருக்கும் ஆண்கள் பெண்களின் இயலாமையை பயன்படுத்தி தங்களின் பேராசைக்குத் தீனியாக அவர்களை உபயோகப் பொருளாக மாற்றிவிடுகிறார்கள். இதில் யார் பக்கம்தான் ஞாயமிருப்பதாக சொல்ல இடமிருக்கிறது?

இப்படி இருப்போர் அன்பை பிரதானப்படுத்தியா வாழ முடியும்...? தங்களுக்கு துணையாக ஒரு பாதுகாப்பிற்கே ஒருவரை எதிர் பார்க்கிறார்களே தவிர பவித்திரமான அன்பை பரிமாறிக்கொள்வோர் மிகக் குறைவே. அழகிய இளம் பெண்கள் வயதான ஆண்களை திருமணம் செய்யும் ரகசியமும் ஏறக்குறைய இதுவே.

செண்டிமென் என கணவனை எதிர்பார்த்து வாசலில் காத்திருந்ததெல்லாம் அந்தக் காலம். வீட்டில் இருக்கும் ஒரு சில மணி நேரங்களே அவர்கள் கணவன் மனைவி. அடுத்த நாள் காலை, வீட்டை விட்டு காலெடுத்து வைக்கும் அந்த  நிமிடம் அவர்கள் வேறு பலரின் நண்பர், வேறு சிலரின் உறவினர், வேறு ஒருவரின் உரிமை.


Sunday 20 January 2013

நயவஞ்சக நல்லவர்கள். . .

முன்பை விட இப்போது மக்களைத் தெரிந்து கொள்வதற்கு பெரும் சிரமமாக இருக்கிறது. அவர்களின் குணத்தைப் பற்றி சொல்லவில்லை, அவர்களின் வெளித் தோற்றத்தையே இங்கு குறிப்பிடுகிறேன்.

எனக்கு விவரம் தெரிந்த அறுபதாம் / எழுபதாம் ஆண்டுகளில், ஒருவர் அணிந்திருக்கும் உடையிலிருந்தே அவர் யார், என்ன தொழில் செய்கிறார் என  ஏறக்குறைய அவரின் குண நலன்கள் பற்றி விவரித்து விடலாம். நூற்றுக்கு ஐம்பது சதவிகிதமாவது சரியாகவே இருக்கும்.

ஆனால், இப்போது அப்படி சொல்லிவிட முடியாதளவிற்கு உலகமும், உலகத்தவரும் மாறிவிட்டோம்.

பெண்களில் குமரிகள் பாவாடை தாவனியிலும், குடும்ப மாதர்கள் சேலையிலும் வருவார்கள் அன்று. இன்றோ, சுடிதாரின் வருகையால் வயது வித்தியாசமின்றி அனைவரும் அதில் நுழைந்து கொள்கிறார்கள்.

ஆண்களும் இதற்கு விதிவிளக்கல்ல. சாதாரண வேலை செய்பவர்களிருந்து அலுவலக அதிகாரிகள் வரை எல்லோருமே ஒரே தரத்தில் அல்லவா உடை அணிகிறார்கள்... சீருடை இருந்தாலன்றி அவர்களில் வேறுபாட்டை காண்பது அரிதாகிறது. அதிகாரியும் தொழிலாளியும் ஒரே வித உடைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள் இப்போது. இதற்கு பொருளாதரத்தில் ஓரளவு நாம் அனைவரும் மேலே வந்துவிட்டோம் என்றே எண்ணத்தோன்றுகிறது.

வெளித் தோற்றத்திலேயே இப்படி ஒரு கஷ்டமான சூழல் இருக்கும் போது, நம்மிடம் நல்லவர்போல் நடிப்பவர்களை கண்டுகொள்வது அவ்வளவு சுலபமா என்ன???  இந்த திறன்  நம்மிடம் இல்லாததனால் தான் பலரிடம் நாம் ஏமாந்து போகிறோம்.

கண்ணுக்குத் தெரியும் எதிரிகளைப் பார்த்து பொதுவில் யாரும் அஞ்சுவதில்லை. நயவஞ்சக சிரிப்பால் நம்மிடம் நல்லவர் போல் நடித்து நமக்கே நாசம் செய்ய நினைப்போரை கண்டு அஞ்சத்தான் வேண்டி இருக்கிறது.

இதையே வள்ளுவர் சொல்கிறார்,

"முகத்தின் இனிய நகா அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்"

ஆனால், இந்த நயவஞ்சகக்காரர்கள், பலரின் சாபங்களுக்கு ஆளாகியும் கண்முன்னே மிக ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் தான் உலா வருகிறார்கள்.

பல நேரங்களில் அவர்களோடு சரிசமமாக நம்மால் பேச இயலாது போகிறது. அயோக்கியர்களுக்கு அஞ்சா நெஞ்சம் அமைவது இயற்கையே. அவர்களை எதிர்த்து மனச் சோர்வுக்கு இடம் கொடுப்பதை விட, ஹிந்து தர்ம சாஸ்திரப் படி விட்டுவிடுவதே நல்லது.

 நாம் மறுபிறவியில் நம்புவது இதனால் தான். முன் பிறவி இல்லாதிருந்தால் அனைவரும் ஒரே மாதிரியாக பணக்காரர்களாகவும் ஆரோக்கியமானவர்களாகவும் நல்லவர்களாகவும்  படைக்கப்பட்டிருப்போம். மாறுபாடுகளோடு நாம் பிறப்பதற்கு நமது கர்ம பலன் களே காரணம். ஏமாற்றுக்காரர்களும் நம்பிக்கைத் துரோகிகளும் இப்பிறவியில் இல்லாவிடினும் பின்னொரு பிறவியில் அனுபவித்தே தீரவேண்டும்.


" நீ எதைச் செய்தாலும் அதற்கு ஏற்புடையதாகவும் எதிர்மறையாகவும் உள்ள பாவ புண்ணியங்களில் சிக்கி உழல்வாய். "

Friday 18 January 2013

புகைப்பதை விடுங்கள். . .

ஸ்டைல் + . . .


. . . ஸ்டைல்


= பலவிதமான இருதய நோய்கள்

( தெரிந்தே உடலை வருத்துவது தற்கொலைக்குச் சமம் என்கின்றனர் பெரியோர். உணர்ந்தோர் வாழ்வை உதாரணமாகக் கொண்டு உதறுவோம் இப்பழக்கத்தை ) 

Thursday 17 January 2013

சந்துருவின் திருமணம் . . .

என் இனிய நண்பர் திரு சாமி அவர்களின் சகோதரியின்  புதல்வன் திருநிறைச்செல்வன் சந்துருவின் திருமணம் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இனிதே நடந்தேறியது ( 18.10.2013 ). அப்போது பிடிக்கப்பட்ட சில படங்கள் இவை...





   
   
 


 


   

 



 

குடும்பத் தலைவர் எம் ஜி ஆர். . .





Wednesday 16 January 2013

சிரிப்போம்....சிறப்படைவோம்....

உடல் பல நுட்பமான செயல்களைச் செய்யும் ஒரு தொழிற்சாலை. ஆனால், துயரங்கள்., தாங்கொனா வேதனைகள், கடும் விமர்சனங்கள் என தினமும் நெஞ்சைத் துளைக்கும் செயல்பாடுகளினால் உள்ளம் பாதிப்புக்குள்ளாகும் போது,  நம் உடலும் நோய்களில் வீழ்கிறது.

நோய்களில் பெரும் நோய், மன அழுத்தம். இதனால் பாதிக்கப்படுவரின் நோய்எதிர்ப்பு  ஆற்றல் குறையும், நோயினைத் தாக்கும் வல்லமை அற்று பல இன்னல்களுக்கு உடல் பலியாகும். வெளியில் தெரியும் உடல் நலக் கோளாறுகளைத் தவிர்த்து,  நம் கண்களுக்கு  புலப்படாத, மனதளவில் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரிக்கும்.

இதன் தொடர்ச்சியாக தீவிர சிகிச்சை அளிக்க வேண்டி வரும்.  சிகிச்சைக்கு பணம்? ஆக, பொருளாதரத்திலும்  சிக்கல் வந்துவிடும்.

இதற்கு மருந்து ...?   இருக்கிறது.

 நமக்குள் இருக்கும் நகைச்சுவைத் தன்மையை வளர்த்துக் கொண்டால், எல்லா   பிரச்சினைகளும் நமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கும். 

இதை நான் சொல்லவில்லை. மேல் நாட்டு அறிஞர்களும், வல்லுநர்களும் சொல்கிறார்கள்.

சிரிப்போம்....சிறப்படைவோம்....

Tuesday 15 January 2013

நேரடி விற்பனை பிரதிநிதிகளாக பெண்கள். . .

நேரடி விற்பனையில் ஆண்களின் ஆதிக்கமே அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டிருந்தாலும், பெண்களுக்கான வாய்ப்புகளுக்கு எவ்வித குறைவும் இருப்பதாகத் தெரியவில்லை.  சரி நிகர் சமமாக ஆண்களோடு போட்டியிடும் ஒரு துறையாக நேரடி விற்பனையும் ஆகி வருகிறது. இதில் சாதனை புரிய பெண்கள் தயாரா என்பதே கேள்வி இப்போது.

சிறந்த சேவையினை வழங்கும் போது வாடிக்கையாளர்கள் நேரடி விற்பனைப் பிரதிநிதிகளை அவர்கள் ஆணா பெண்ணா என பார்ப்பதில்லை. தங்களுக்கு கிடைக்கும் சேவையினைப் பொறுத்தே விற்பனையாளர்கள் மதிப்பிடப் படுகிறார்கள்.

நேரடிச் சந்தையில் போட்டிகள் அதிகம். தங்களின் பொருள் பற்றிய சந்தேகமின்றி விளக்கும் திறன் இதில் மிக முக்கியம். பெயரைச் சொன்னாலே தெரிந்து கொள்ளும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூட சுறுசுறுப்பில்லாவிடில் சோபிக்க முடியாமல் போய்விடும்.

கல்வியறிவு முக்கியமென்றாலும், பொருளறிவும், நிர்வாகவியல் நுணுக்கங்களும்  மற்றும்  ஓரளவுக்கு ஆங்கிலமும் தெரிந்திருப்பது அவசியம். பலபேருடன் நேர்காணலில் ஈடுபடவேண்டி இருப்பதால், சாந்தமான  அதே சமயம்  உறுதியான  பேச்சுத்திறமையும் இருப்பது ஒரு பலமாகும்.

தற்போதைய உலகம் கணினி யுகமாக மாறிவருகிறது. புத்தகங்களை பள்ளிக்கு எடுத்துப்பொகும் காலம் மாறி இப்போது பள்ளிப்பிள்ளைகள் ஐபேட், லேப் டாப், நோட்புக் என அறிவியல் முதிர்ச்சியனை தங்களின் இளம் வயதிலேயே தெரிந்துகொள்கிறார்கள். எனவே,   கம்ப்யூட்டர் தெரிந்திருப்பது இன்னும் நல்லது.

பொதுவாக பெண்கள் இதில் அபாரமான திறமைகளை வளர்த்துக் கொள்வதால் இந்த நேரடி விற்பனையில் பிரதிநிதிகளாக நல்ல முன்னேற்றம் காண்கிறார்கள். மாதச்சம்பளம் என வாங்கியது போய், இப்போது இத்துறையில் இருக்கும் பெண்கள் அடிப்படை சம்பளம், ஊக்கத்தொகை, வெளி நாட்டுப்  பயணங்கள் என பல வகைகளில்  கணிசமான தொகையினை பெறுவது மகிழ்ச்சி தருகிறது.

பெண்களுக்கு இயற்கையாகவே வீட்டு வேலைகள்  பல.  அவற்றை முடித்து தங்களது சொந்த நேரத்தில் இந்த நேரடி விற்பனையில் தங்களின் உதியத்தை பெருக்கிக் கொள்ளலாம். பல குடும்பங்களில் ஆண்கள் அலுவலகங்களிலும், பெண்கள் 'எம்வே', 'இன்ஸுரன்ஸ்', 'கொஸ்வே' மற்றும் 'புளொண்டல்' போன்ற  தனியார் நிறுவனங்களிலும் தொழில் செய்து பொருள் ஈட்டுவது நம் கண்முன்னே நடப்பதுதான். பாராட்டுக்குறிய விசயமாகும் இது.  ஒவ்வொரு குடும்ப முன்னேற்றத்திற்கும் அவர்களின் பொருளாதார பலமே காரணம்.

ஆயினும் தங்களின் சொந்த பாதுகாப்பினை அவர்களே உறுதிசெய்ய வேண்டிய சூழ்நிலையும், கட்டாயமும் அவர்களுக்கிருக்கிறது. பெண்கள் சம உரிமையைப் பேசியவண்ணம் இருந்தாலும், ஆண்களில் பலர் அதை காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை. ஆக, எல்லாவித பாதுகாப்பு அம்சங்களும் கடைபிடிக்கப் படுவதன் மூலமே இந்த நேரடி நிற்பனை பிரதி நிதிகளாக பெண்கள் வெற்றிபெற முடியும்.

அப்படி வெற்றிபெற்று கடமையில் இருக்கும் பெண்களுக்கு வாழ்த்துக்கள்.



மின்னஞ்சல் முகவரி. . .

இங்குள்ள பதிவுகளுக்கு மறுமொழியிட நீங்கள் அங்கத்தினராக இருக்க வேண்டியதில்லை.    rajpow2011@yahoo.com எனும் மின்னஞ்சலில் உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்தலாம். 

இங்கே இடம்பெறுபவைகளில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டவும் இந்த மின்னஞ்சலை பயன்படுத்தலாம்.

உங்களின் மாற்றுக்கருத்துக்களை வரவேற்கிறோம்...எழுதுங்கள்.

சிரிப்பு . . .

 பொங்கிவரும் சிரிப்பை வாயில் பல் தெரிய உண்மையாக மனம் விட்டு சிரிப்பதென்பது பல நோய்களை தீர்க்கும் அரிய மருந்தென்கின்றனர்.
சிலர் இயற்கையான தங்களின் சுபாவம் மூலம் இப்படி கள்ளமில்லா சிரிப்புக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றனர். பலர் இந்த வித்தையை சில பயிற்சிகள் மூலம் அடைகின்றனர். அலட்டிக்கொள்ளாமல், அன்போடு பழகும் அனைவருக்கும் இது சாத்தியமே.

சிரிப்பு உடலின் சுரப்பிகளை புத்துணர்வுடன் செயல்படச் செய்கிறது. தேவையான ஹோர்மோன்களும், என்ஸைம்களும் உடல் உறுப்புக்களை சீராக  தத்தம் பணிகளைச் செய்ய  உதவுகின்றன. இதனால் அரோக்கியமாக வாழ்கிறோம். நோயுற்றவர்களுக்கு அவர்களை பீடித்திருக்கும் நோயின் தாக்கம் குறைகிறது...மரணம் தள்ளிப்போகிறது. இது மருத்துவ உலகில் கண்டறியப்பட்ட உண்மை.

எனவே, மனதில் எவ்வித கள்ளமும் இல்லாமல் சிரிப்பவர்களோடு சேர்ந்து சிரிப்போம், வாழ்வை சிறப்பாக வாழ்வோம்!!!

சிரிப்புக்கு சில படங்கள்...

டாக்டர் அருளுடனான ஒரு நேர்காணலின்  போது...



( இன்னும் வரும்.... )



Sunday 13 January 2013

பொங்கல் கொண்டாடுவோம் வாங்க...










அட என்ன இது, சம்பந்தமே இல்லாம பொங்கல் திரு நாளுக்கு இப்படி சில படங்கள் அப்படின்னு நீங்க நினைக்கக்கூடும். நீங்க நினைக்கிறதுலே தப்பில்ல.  ஏன்னா, இப்ப ரொம்ப பேரு இப்படித்தான் சம்பந்தமில்லா விசயங்கள பேசிக்கிட்டு வராங்க.

" உங்ககிட்ட ஆடு இருக்கா, மாடு இருக்கா, விலைச்சல் நிலமிருக்கா, சொந்த வீடிருக்கா, ? இதெல்லாம் இல்லைன்னா அப்புறம் எதுக்கு பொங்கல் கொண்டாடுறீங்க?"ன்னு கேட்கறாங்க.

பொங்கல் பெருநாள் என்பது தமிழர்களின் பாரம்பரிய திருநாள். இயற்கைக்கும், இயற்கையையொட்டி உழுது பயிரிட்டு நாம் உண்ணும் உணவுக்கு காரணமான எங்கோ இருக்கும் விவசாயிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் வளர்ப்பு மிறுகங்களுக்கும் மானசீகமாக நன்றி சொல்லும் ஒரு சிறந்த நாள்.

 மாடு, மனை இருந்தால்தான் பொங்கல் கொண்டாட வேண்டுமென்பது பிதற்றலாகும்.