Saturday 29 September 2012

மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!

 படித்ததில் பிடித்தது.: கண்ணதாசனின் கருத்து


 தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம்.

 “வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு.”

 இவ்வாறு, கவியரசரே, ‘எனது சுயசரிதம்’ என்ற நூலில் எழுதியிருப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.

மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!

 மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படம் ‘மதுரைவீரன்’. இதற்கான திரைக்கதை வசனத்தைத் தீட்டியவர் கவியரசர் கண்ணதாசனே. இப்படத்தில் சில அற்புதமான பாடல்களையும் கவியரசரே எழுதினார்.

 ‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சிதம்பரம் லேனா செட்டியார் தயாரித்த இப்படத்தை, டி. போகானந்த் இயக்கினார்.

 1956 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.

 தமிழகத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.

 அம்மட்டோ! அக்காலத்தில், ‘டூரிங் டாக்கீஸ்’ என்று அழைக்கப்பட்ட, தென்னங்கீற்று வேய்ந்த திரையரங்குகள் பலவற்றிலும் ‘மதுரை வீரன்’ படம் ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தியது.

 இன்னும் என்ன என்ன சாதனைகளை ‘மதுரைவீரன்’ என்ற திரைக்காவியம் நிகழ்த்தியது என்கிறீர்களா?

 சொன்னால் பட்டியல் நீளும்! சுருங்கக் காண்போமாக!

 பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மாநகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் மதுரைவீரன்! ஆம் காஞ்சிபுரம், முருகன் திரையரங்கில் தொடர்ந்து, மூன்று காட்சிகளாக 157 நாட்கள் ஓடி சாதனை படைத்த ஒரே படம் ‘மதுரைவீரன்’ தான்.

 செங்கல்பட்டு நகரில் 84 நாட்கள் ஓடிய முதல் படம் ‘மதுரைவீரன்’ தான். திருமலை திரையரங்கில்தான் இச்சாதனை நிகழ்ந்தது.

 1956 – இல், குறைந்த ‘ மக்கள் தொகை கொண்ட ஆம்பூர் நகரில், அதிக நாட்கள் (85) நாட்கள்) ஓடிய படமும் மதுரைவீரனே.

 பூவிருந்தவல்லி ‘விக்னேஸ்’ திரையரங்கில் அதிக நாட்கள் (85 நாட்கள்) ஓடி வெற்றி முத்திரையைப் பதித்த படமும் மதுரைவீரனே.

 கும்பகோணம் நகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய ஒரே படமும ‘மதுரைவீரன்’தான். டைமண்ட் டாக்கீஸில் 119 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்தது.

 இவ்வளவுதானா என்கீர்களா? ஒரு படத்தைப் பற்றி இப்படியொரு பெருமிதமா என்பீர்கள்? இன்றைய நிலையில், பரபரப்பான தொலைக்காட்சிகளின் விளம்பரங்களுக்கிடையில், ஏதேனும் ஒரு திரையரங்கில் பகல் காட்சியாகப் படத்தை ஓட்டி நூறுநாள் விளம்பரப் போஸ்டர்களை ஒட்டும் போக்கை நாம் பார்க்கிறோம்.

 ஆனால், பத்திரிகை விளம்பரங்களே பற்றாக்குறையாக இருந்த 1956 – ஆம் ஆண்டு காலகட்டத்தில், சின்னஞ்சிறிய நகரங்களான பழனி, பொள்ளாச்சி, ஊட்டி, புதுக்கோட்டை, நாமக்கல், ஆத்தூர், பவானி, மன்னார்குடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, காஞ்சிபுரம், கும்பகோணம், திருவாரூர், கம்பம், போடி, பரமக்குடி, மாயவரம், கடலூர், கரூர், நாகர்கோவில், விருதுநகர், விழுப்புரம் போன்ற பல இடங்களிலும் நூறு நாட்கள் ஓடி ஒப்பற்ற உலக சாதனையை நிகழ்த்திய ‘மதுரைவீரன்’ படத்தைப் போற்றிப் புகழாமல் இருக்க முடியுமா? சொல்லுங்கள்.

 இத்துடன், மாவட்டத் தலைநகர்களிலும் மகத்தான சாதனைகளை நிகழ்த்திய மதுரைவீரன் திரைப்படம், சென்னை, மாநகரில் முதன்முதலாக, திரையிடப்பட்ட சித்ரா, பிரபாத், சரஸ்வதி, காமதேனு ஆகிய நான்கு திரையரங்குகளிலும் தொடர்ந்து நூறுநாட்கள் ஓடிச் சாதனைச் சரித்திரமே படைத்தது.

 மதுரை மாநகர் சென்ரல் திரையரங்கில் ‘மதுரைவீரன்’ இருநூறு நாட்கள் ஓடி இமாலயச் சாதனை படைத்தது. இதற்கான வெற்றிவிழா, வெள்ளிவிழா மதுரை மாநகரில், மகத்தான முறையில் நடைபெற்றது. புரட்சி நடிகர் கலந்துகொண்ட இவ்விழாவில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.

 திரையரங்கு சார்பிலும், மதுரை மாவட்டத்தின் சார்பிலும் மக்கள் திலகத்திற்கு வெள்ளிக்கேடயமும், வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டன.

 இத்தகைய சிறப்புகள் பெறுவதற்கான காரணங்கள் யாவை? மதுரைவீரன் திரைக்காவியத்தைப் பற்றி ஆய்ந்தால் தெரிந்துவிடுமே! ஆய்வோமே!

 வாரணவாசிப் பாளையம் – அரசன் துளசி அய்யா – பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லை – தவிப்பு – ஆண்டவன் அருளால், ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தை ஆனான்.

 ஆனால், நிமித்திகர் ஒருவர் அரசனைப் பார்த்து, ‘மாலை சுற்றிப் பிறந்த குழந்தை மன்னர் பரம்பரைக்கும், அரண்மனைக்கும் ஆபத்தை விளைவிக்கும்’ என்று கூறக் குழந்தை, காட்டில் கொண்டுவிடப்படுகிறது.

 காட்டில் விடப்பட்ட குழந்தையை, நாகமும், யானையும் காப்பாற்றி வருகின்றன. அந்நிலையில் அங்கு வந்த சக்கிலியர் இனத்தைச் சேர்ந்த சின்னானும், அவன் மனைவியும் அக்குழந்தையை எடுத்துச் சென்று ‘வீரன்’ என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். வளர்ந்து பெரியவனான ‘வீரன்’ தன் பெயருக்கு ஏற்றாற்போல பெரிய வீரனாகிறான்.

 (இந்தப் பெரிய வீரனாக, மதுரை வீரனாக மக்கள் திலகம் எம்ஜி.ஆரும்; சின்னானாக்க் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும், அவரது மனைவி செல்வியாக டி.ஏ. மதுரமும் நடித்தார்கள்)

 இதன் பின்னர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொட்டியம் பாளையம் இளவரசி பொம்மியை வீரன் காப்பாற்ற முறைமாமன் நரசப்பன் தானே காப்பாற்றியதாகக் கூறுகிறான். பாளையக்கார பொம்மண்ணன் மகிழ்கிறான். ஆனாலும் பொம்மியின் மனம் வீரனிடம் பறிபோகிறது.

 இப்பட்க் கதை செல்லும்.

 பொம்மியாக நடிப்பின் இலக்கணமாம் பி. பானுமதியும், நாரசப்பனாக நடிப்பின் நாயகன் டி.எஆ. பாலையாவும் நடித்தார்கள்.

 மதுரை மன்னனாகோ.ஏ.கே தேவரும்; அரண்மனை நாட்டியக்காரியாக நாட்டியப் பேரொளி பத்மினியும் நடித்திருந்தனர்.

 சிக்கலான கதையை, மக்கள் ஜீரணித்து, ஏற்றுக்கொண்டு, ஏகோபித்த வெற்றியைத் தேடித்தந்ததற்குக் காரணமே கவியரசரின் திரைக்கதை அமைப்பும்; கருத்தைக் கவரும் வசனங்களுமே எனலாம்.

 தாழ்த்தப்பட்ட ஓர் இனத்தின் பெருமையை, அருமையாக உயர்த்திக் காட்டி, தமிழ்த்திரையுலகில் அரும்பெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டிய வரலாற்றுக் காவியமே மதுரைவீரன் எனலாம்.

 இப்படத்தில், புரட்சிநடிகரின் இயற்கையான நடிப்பிற்கு உலக அளவில் பெரும் பாராட்டுகள் கிட்டின என்பதனையும் நாம் மறந்துவிட இயலாது.

 அந்த அளவிற்குக் கண்ணதானின் திரைக்கதை – வசனம் பெரும்துணையாய், மதுரைவீரன் படத்திற்கு அமைந்திருந்தன.

படத்தில் இடம்பெற்ற காலத்தின் கொடையான இனிய தமிழ் வசனங்களில் இருந்து, சில வரிகளை வாசித்துப் பார்ப்போமா!

 வாருங்கள்!

 (பொம்மியோடு தப்பிவிட்ட மதுரைவீரன், பாளைய அதிபதி பொம்மண்ணனின் வேண்டுகோளின்படி, திருச்சி மன்னன் விஜயரங்க சொக்கன் வீரர்களால் கைது செய்யப்பட்டு பொம்மியோடு விசாரணை மன்றத்தில் நிறுத்தப்படுகிறான்)

நரசப்பன்; பேரரசின் பிரதிநிதிகளே! பெருமக்களே! குற்றம் சாட்டப்பட்டு நிற்பவன் குலத்திலே சக்கிலியன்; நம் போன்றாரிடம் பேசுவதென்றால் கூட எட்டி நின்று பேச மட்டுமே அருகதையுடையவன். இவன் காதலித்தான், அது முதல் தவறு.

மன்னன் சொக்கன்: என்ன? காதலித்ததே தவறா?

நரசப்பன்: உம்..ம். மன்னன் மகளைக் காதலித்தான். அது முதல் தவறு. அரண்மனைக் கன்னிமாடத்துக்குள் புகுந்தான். அது இரண்டாவது தவறு. கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கூசாமல் தூக்கிச் சென்றான். அது மூன்றாவது தவறு. எதிர்த்து வந்தோரை அடித்தான். ஏனென்று கேட்டோரைக் கொன்றான். கீழ்மகன் இவ்வளவு அநியாயங்களைச் செய்வதா? பொறுக்க முடியுமா, அரசே! ஆகவே இந்தத் தீயவனுக்குத் தக்க தண்டனே விதித்துத் தீர்ப்பளிக்குமாறு மன்னரைக் கேட்டுக் கொள்கிறேன்.

மன்னன் சொக்கன்: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் உன் பதில்?

வீரன்: ஒரே பதில்! கண்டேன். கண்டாள். காதலித்தோம்! கட்டுண்டோம்! பொறுத்திருந்தோம்! காலம் வந்தது; தூக்கிச் சென்றேன்.

சொக்கன்: தூக்கிச் சென்றது குற்றம் என்கிறார் நரசப்பன்.

வீரன்: இல்லை!

சொக்கன்: எப்படி?

வீரன்: கேட்டால் கொடுக்கமாட்டாரே! அதனால் தூக்கிச் சென்றேன்.

சொக்கன்: நீதான் கீழ்மகனாயிற்றே. கேட்டால் எப்படிக் கொடுப்பார் என்பது நரசப்பன் வாதம்!

வீரன்: கீழ்மகனா? ‘இட்டார் பெரியோர்! இடாதார் இழிகுஙத்தோர்!’ என்ற இரண்டே ஜாதிகள்தான் உண்டு என்பது பள்ளிப்பாடம். இவர் நிழலுக்காவது பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி இருந்தால்தானே மன்னா! எங்கள் இருவர் உடலிலிருந்தும் ரத்தத்தை எடுத்துச் சோதியுங்கள். அதிலே கீழ்மகன், மேல்மகனென்று பேதம் தெரிகிறதா என்று பாருங்கள்!

நரசப்பன்: ஐயய்யோ வேண்டாம் மன்னா! அந்தப் பரீட்சை! அவன் கீழ்ச்சாதிக்காரன் என்பது பிறப்போடு வந்த வழி…

வீரன்: இல்லை! உன் போன்ற பித்தர்கள் செய்த சதி!

{பருகினீர்களா? வளமான தமிழ் வசனங்களை… அறிவுக்கு விருந்தாகும், மருந்தாகும் இந்த வசனங்களை மறக்க முடியுமா?}

இப்படியே நீளும் வாதங்களின் முடிவில்….

நரசப்பன்: தீச்செயல் பல செய்த இவனுக்கு மரண தண்டனை விதிக்கலாம்! ஆனாலும், போகட்டும் ஆயுள்தண்டனை விதியுங்கள்!

சொக்கன்: ஆம். ஆயுள் தண்டனை! அதிலிருந்து தப்ப முடியாது. இன்றுமுதல் பொம்மியின் மனச்சிறையில் ஆயுள் முழுவதும் கிடந்து சாவாயாக! அதோடு நமது தளபதியும் ஆவாயாக.

நரசப்பன்: அரசே!

சொக்கன்: போவாயாக.

(இந்த வசனங்கள் வரும்போது, திரையரங்குகளில் எழுந்த சிரிப்பொலியும், கரவொலியும் அடேயப்பா! எத்துனை ஆரவாரமானது.)

பொம்மண்ணன்: மன்னா!

சொக்கன்: பொம்மண்ணா! கறந்த பால் மடி புகாது. இயற்கையாகக் கலந்துவிட்ட அவர்களை, இனிப் பிரித்தாலும் உமது மகள் கன்னித்தன்மை பெறமுடியாது.

பொம்மண்ணன்: ஆனாலும் அவன் கீழ்ச்சாதி.

சொக்கன்: சாதி என்பது மனிதன் வகுத்த அநீதி! அதை மாற்றிக் கொள்வதுதான் நீதி! காலம் மாறி வருகிறது! எல்லோரும் ஓரு குலமு என்பதை அறிவுலகம் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறது. அதற்கு நாம் அச்சாரம் போடுகிறோம் இன்று! அந்தப் பெருமையில் நீரும் பங்கு கொள்ளும்.

{கேட்டீர்களா? சாதி எனும் தீயை அணைக்கத் தேன்தமிழில், நம் தீஞ்சுவைக் கவிஞர் தீட்டித் தந்த தெளிவான வசனங்களை…!}

 இப்படியே நம் இதயங்களை ஈர்க்கும் வசனங்கையே பார்த்துச் சென்றால், மதுரைவீரன் வசனங்கள் மட்டுமே நூலை நிரப்பிவிடும். பின்னர், ‘கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர் என்ற கருத்துகளைக் காண இயலாமல் போய்விடும்.

 ஆதலால் மதுரைவீரனுக்கு மாறுகால், மாறுகை வாங்குமறு தீர்ப்பளித்த திருமலை மன்னனை நோக்கி பொம்மியும், வெள்ளையம்மாளும் பேசுமாறு, கவியரசர் புவி புகழத் தீட்டிய வசனங்களின் ஓரிரு பகுதிகளை மட்டும் பார்த்துவிட்டு ஏனைய கருத்துகளைக் காண்போமே!

பொம்மி: நீதான் மதுரை மன்னனா? வா! ஏன் வந்தாய்? எதற்காக வந்தாய்? கொலை புரியும் காட்சியைக் கண்டுகளிக்க வந்தாயா? அக்கிரமத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்ட ஆனந்தத்திலே ஓடி வந்தாயா? தாவி வந்த குழந்தையின் கன்னத்தைக் கடித்தாயே! மனம் திறந்து உண்மையைக் கூறியும் கடும் தண்டனை விதித்தாயே! சாவு எப்படி இருக்கிறது என்று கார்க்க வேண்டுமா? பார்! பார்! பாவி பார்! கண்கெட்ட உன் ஆட்சியின் பெருமையைக் காப்பாற்ற ஓடுவந்த கால்களைப் பார். சுற்றி வரும் எதிரிகளை தூகாக்குவேன் என்று கத்தி எடுத்த கைகளைப் பார்! ரத்த வெள்ளத்தில் மிதக்கும் அந்த சுத்த வீரனைப் பார்! மாலையிட்ட மணவாளன் அங்கே! ஆலையிட்ட கரும்பாக அவதிப்படும் நான் இங்கே! நீதி எங்கே? நியாயம் எங்கே? நாடு ஆளும் மன்னவனா நீ? நடுநிசியில் கொலை புரியும் கள்ளனுக்கும், உனக்கும் என்ன பேதம்? போ! போய்விடு.

திருமலை மன்னன்: ஐயோ! தவறு நடந்துவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள்! எல்லாம் அவன் செயல்!

வெள்ளையம்மாள்: அழு! நன்றாக அழு! தொண்டை அடைத்துப் போகும் அளவுக்கு அழு! ஆற்றாது அலறும் இந்த அபலைப் பெண்கள் தனியாகவே அழுவது? நீயும் கூட, சேர்ந்து அழு! அநியாயத்தின் உருவமே! சாகப்போகும் போதாவது உன் கண்கள் திறந்தன. அந்தக் கண்களிலே ஒளியிருக்கிறதா? இருந்தால் பார்! தேம்பி அழும் இந்தப் பச்சைப் பசுங்கிளியைப் பார்! நான்கு புறமும் வேடர் சூழ நடுவில் சிக்கிய மான்போல தவிக்கும் இந்த இல்லறச் செல்வியைப் பார்! மாலை இழந்து, மஞ்சள் அழிந்து, கூந்தல் அவிழ்ந்து, குங்குமம் கலைந்து, பச்சைப் பருவத்திலே பட்டுப்போன மரத்தைப் பார்! பார் மன்னா! நன்றாகப் பார்!

 அன்பு தவழும் கணவன் முகத்தை ஆசையோடு பார்க்கவேண்டிய கண்கள். அதிலே ஆறாக ஓடும் கண்ணீர்! அத்தான்! அத்தான்!’ என்று பாசத்தோடு அழைக்கவேண்டிய உதடுகள்! அதிலை சோகத்தின் துடிதுடிப்பு! நீதியற்ற மன்னவனே! உன் ஒரு வார்த்தையிலே உயிரற்ற நடைப்பிணமாகி விட்ட இந்த உத்தமியைப் பார்! ஏன் அசையாமல் நிற்கிறாய்?

 ‘வீடு தட்டி வந்த கள்வன் யார்?’ என்று கேட்க, ‘தட்டியவன் நானே!’ என்று, வெட்டி வீழ்த்திக் கொண்டான் கையை, பொற்கைப் பாண்டியன். குற்றமற்ற கோவலனைக் கொலை செய்தோம் என்பதை உணர்ந்ததும், சிங்காதனத்திலிருந்து வீழ்ந்து உயிர்விட்டான் பாண்டியன் நெடுஞ்செழியன். கன்றைக் கொன்றான் சோழமன்னன். கற்பு நிறைந்த மணிமேகலையைக் கெடுக்க முயன்றான் மகன் என்று தெரிந்ததும், ‘ஊரார் கொன்று விட்டார்களே! அவனை நானல்லவா கொன்றிருக்க வேண்டும்!’ என்று நீதி முரசு எழுப்பினான் பூம்புகார்ச் சோழன். ஏன்? ஆண்டி முதல் அரசர் வரை ஒரே நீதி வழங்கியதே மூவேந்தர் பரம்பரை! அந்தச் சிங்காசனத்திலே நீ! அந்தச் சிங்கனத்திலே நீ!

திருமலை மன்னன்: இல்லை! பிறழாத நீதி பிறழ்ந்தது! வளையாத செங்கோல் வளைந்தது! என்னைக் கெடுத்துவிட்டார்கள் சண்டாளர்கள்! என்னை மன்னித்து விடுங்கள்!

வெள்ளையம்மாள்: மன்னிப்பு! வானகமே! வையகமே! வளர்ந்து வரும் தாயகமே! ஆராய்ச்சி மணி கட்டிப் போர்க்களத்திலே சிரிக்கின்ற பொன் மதுரை மண்டலமே! மறையப்போகிறது ஒரு மாபெரும் ஜீவன்! மன்னிப்புக் கேட்கிறார் திருமலை மன்னர்! மாபாதகம் தீர்க்க மண்டியிடுகிறார் திருமலை மன்னர்! மன்னியுங்கள்! மன்னா போ! அவர் காலிலே விழு! புரண்டு அழு! கண்ணீரால் உன் களங்கத்தைக் கழுவு! போ! போ! போ!

 பார்த்தீர்களா! படித்தீர்களா?

 நம் இதயங்களை, இலக்கியச் சொல்லோவியங்களால், மூவேந்தர் ஆண்டிருந்த காலத்து நீதிமுறைகளைச் சொல்லிச் சொல்லிச் சொக்க வைக்கும் கண்ணதாசனின் கருத்துக் கருவூலங்களை…..!

 இரண்டு மாதரசிகள் மூலம் மதுரை மன்னனுக்கு நீதியைப் புகட்டி, மதுரைவீரனின் மங்காத புகழை, மக்கள் மனங்களில் நிலையிறுத்திக் காட்டும் கண்ணதாசனின் உணர்ச்சிப்பிழம்பான, உணர்வுப்பூர்வமான வசன ஓட்டங்கள்… ஆடாத நெஞ்சங்களையும் ஆண்டி வைக்கும் ஆற்றல் பெற்றன அல்லவா?

 இந்த வசனங்கள்தான், இன்றும் தென்பாண்டி நாட்டிலை, மதுரைவீரனைத் தெய்வதமாக நிரந்தரமாக வணங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மையிலும் உயர்ந்த உண்மையாகும்.

 மதுரைவீரனாக நடித்த மக்கள் திலகம், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் புகழை மென்மேலும் உயரச் செய்த்தோடு, தாழ்த்தப்பட்ட மக்களின் நெஞ்சங்களில் எம்.ஜி.ஆர். எனும் பெயரைத் தாரக மந்திரமாக்கி உச்சரிக்க வழிவகுத்துத் தந்ததும் கண்ணதாசனின் கருத்தோட்டத்தில் எழுந்த எழுச்சிமிக்க வசனங்ளே என்பதும் உண்மையே.

காலமும், நேரமும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று...


நேரம் எவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதனை இப்படி என்னையே நான் படம் எடுத்து பார்ப்பதன் மூலம் தான் தெளிவாக  தெரிந்து கொள்கிறேன் .... எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்...? நான்  மட்டுமா...?  நாம் அனைவருமே ...! 

காலம் கண்ணானது, நேரம் பொன்னானது ... காலத்தின் மதிப்பை பொன்னுக்கு உவமையாக உயர்த்திச் சொல்லி இருக்கிறார்கள். அந்த கால, நேரத்தை பார்த்து நாம் ஆற்றுகின்ற சரியாக ஒவ்வொரு செயலும் நம் இரு கண்களைப் போன்ற முக்கியத்துவம் வாய்ந்ததென நாம் உணர வேண்டும்.

வயதாகும் போது நன்மைகளும் தீமைகளும் சரி சமமாகவே ஏற்படுகின்றன. இயற்கையின் செயல்களில் புதியவை வருவதும் பழையவை போவதும் நிற்காமல் நடந்து கொண்டிருக்கின்ற ஒரு செயல். இது நம் கையில் இல்லை. இருக்கும் காலத்தில் என்ன நன்மைகளைச் செய்தோம் என்பதே நாம் நமக்குள் கேட்டுக்கொள்ள  வேண்டிய கேள்வி.

இறங்கத் தெரியாத, ஏறுகின்ற சக்தியை மட்டுமே கொண்டதுதான் நம் வயது. 'அட வயதுதானே, போனால் போகிறது..' என அலட்சியமாக விட்டுவிடலாகாது. ஒவ்வொரு வயதிலும் நாம் என்ன செய்தோம் என எண்ணிப்பார்க்கும் காலம் ஒன்று வரும். அப்போது நாம் போய்விட்ட பலவற்றை நினைத்து நினைத்து வேதனை அடைவோம். மற்றவரைப் பார்த்து நாம் முன்னேறப் பழகிக்கொள்ள வேண்டும். அவர்கள் இப்போது படும் துயரை நாம் அவர்களின் வயதின் போது படக்கூடாது.

நம் வாழ்வில் போனால் வராதது கடந்துவிட்ட காலம். எனவே,  அதன் அருமையை உணர்ந்து சரியான நேரத்தில் சரியானதைச் செய்வதே சிறப்பு. 'இளமையிற் கல்' என்றார்கள். படித்து முடித்த பின் ஞாயமான வழிகளில் பொருள் ஈட்டுவதில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் வேலைகளின் மூலமோ, சேவைகளின் மூலமோ அல்லது தொழில் வழியோ முதுமைக்குத் தேவையான பொருளாதர பலத்தை  இளமையிலே தேடி வைத்துக் கொள்ளவேண்டும். 

Thursday 27 September 2012

டத்தோ செல்வமணி அங்கிள் அவர்கள்


சுமார் 24 வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படம் இது. டத்தோ செல்வமணி ( அன்கிள் )  (  நடுவில் நீள டி சட்டையில் இருப்பவர் ) அவர்கள் குடும்பத்தினரோடு எனது மாமனார் குடும்பமும் நல்ல நட்பை பாராட்டிய காலம் அது.

எளிமையான ஒரு ஆசிரியராக வாழ்வைத் தொடங்கி, ஜாதி இனம் மதம் என வேறுபாடு பார்க்காமல் எலலோருக்கும் கற்பித்து, தகுந்த நேரங்களில் எதிர்பார்க்காத உதவிகளையும் செய்து பல்லின மக்களின் மரியாதைக்கும் மதிப்புக்கும் உரியவராக வீர நடை போடுகிறார் எங்களின் பாசத்துக்குரிய அங்கிள் டத்தோ செல்வமணி அவர்கள்.

ஒவ்வொரு ஆசிரியர் தினத்தின் போதும் டத்தோ அவர்களைப்பற்றி அவரின் முன்னாள் மாணவர்கள் நாளிதழ்களில் அறிக்கை விடுவதும் வாழ்த்துக்கள் சொல்வதும் அவரின் பெருமைகளை மனமுவர்ந்து வெளிப்படையாக பேசுவதும் இன்னும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இணையமைச்சர்கள், அரசாங்க பதவியில் இருப்போர், ஏராளமான ஆசிரியர்கள் இப்படி இவரின் முன்னாள் மாணவர்கள் பட்டியல் மிக நீளமானது. இவரைப் பற்றி சில புத்தகங்களும் வெளிவந்திருப்பதை அறிகிறேன்.

இப்புகைப்படத்தினை பார்க்கும் பொழுதெல்லாம் அவரின் சுய நலம் கருதாது அற்றிய தொண்டே என் கண்களுக்கு தெரிகிறது.

படித்ததில் பிடித்தது....ஆகஸ்ட் அதிர்ச்சி

- சஸ்பென்ஸ்  எழுத்தாளர்  ராஜேஷ்குமார்.

ஒரு இரண்டு வருஷ காலம் தொடர்ந்து வாரம் ஒரு சிறுகதை எழுதி குமுதத்துக்கு மட்முமே அனுப்பி வைத்தேன். ஆனால், எல்லாம் கிணற்றில் போட்ட கல்தான்.
'அனுப்பும் கதையைப் படிக்கிறார்களா இல்லையா?' - குமுதம் ஆசிரியரைப் பார்த்துப் பேசிட வேண்டியதுதான். ஒருநான்சென்னை புறப்பட்டேன்.

அது ஆகஸ்ட் மாதம். புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் இருக்கும் குமுதம் ஆஃபீஸுக்கு எந்த பஸ்ஸில் போவது? ஒரு சர்பத் வண்டிக்காரரிடம் விசாரித்துக் கொண்டு, பஸ் ஏறி மேகலா தியேட்டர் அருகில் இறங்கி, ஒரு பெட்டிக் கடையில் விசாரித்து குமுதம் ஆஃபீஸ் தொட்டேன்.

"யாரைப் பார்க்கணும்?"

"என் பெயர் ராஜேஷ்குமார். கோயமுத்தூரிலிருந்து வர்றேன். ரா.கி.. ஸாரைப் பார்க்கணும்."

"உள்ளே போங்க... காட்போர்டு பலகையால் தடுத்த ரூம் ஒண்ணு வரும். ரா.கி.. அங்கேதான் இருப்பார்."

நான் உள்ளே நுழைந்தேன். மிகச் சிறிய அறை. ஒரு மேஜை மட்டுமே போடக்கூடிய அளவுக்கு இடப் பரப்பளவு. மேஜைக்குப் பின்னால் ஐம்பது வயது நிரம்பிய ரா.கி.. தூய  கதராடையில் பார்வைக்குக் கிடைத்தார். ஏதோ எழுதிக் கொண்டு இருந்தார்.

"வணக்கம்... ஸார்."

"வணக்கம்... உட்காருங்க" எதிரிலிருந்த நாற்காலியைக் காட்டினார்.
உட்கார்ந்தேன்.
  
நிமிராமல் எழுதிக்கொண்டே கேட்டார்.
"என்ன  விஷயம்? சொல்லுங்க...?!"


"என் பேர் ராஜேஷ்குமார்..."
"கோயமுத்தூரிலிருந்து வர்றீங்கன்னும் தெரியும். வந்த விஷயத்தைச் சொல்லுங்க."

"குமுதத்துக்குக் கதை அனுப்பியிருந்தேன்."

"அப்படியா சந்தோஷம்..."

"ரொம்ப நாளாச்சு. அதான் பார்த்துட்டுப் போலாம்ன்னு..."

"வந்தீங்ளாக்கும்!"

"ஆமா ஸார்..."

"இதோ பாருங்க ராஜேஷ்குமார்! நீங்க அனுப்பியிருந்த கதைகள் நல்லாயிருந்ததுன்னா நிச்சயமா குமுதத்துல வெளிவரும்."

"எல்லாமே நல்ல கதைகள்தான் ஸார்."
ரா.கி.. சிரித்தார்

சிறிது நேரம் எங்களுக்கு மத்தியில் ஒரு வேண்டாத மெளனம். "அப்புறம்?" என்றார்

நான் எழுந்தேன்.
"வர்றேன் ஸார்..."  என் குரலில் தெரிந்த சோகம், அவர் மனத்தை நெருடியிருக்கவேண்டும். எழுதுவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்தார்.

"குமுதத்துக்கு நாலு கதை அனுப்பி இருப்பீங்களா?"
  
"இல்ல ஸார்... நூத்திப்பதிமூணு."

  
அதிர்ந்து போனவராகத் தம் கையிலிருந்த பேனாவை மேஜையின் மேல் போட்டு விட்டு நிமிர்ந்தார்.
  
"என்ன சொன்னீங்க... 113 கதையா?"
  
"ஆமா ஸார்...!"

 அவர் பார்வையில் ஒரு பிரமிப்பு. எழுந்து வந்து என் தோளின் மேல் கையை வைத்தார். குரலில் நிறைய இதம்.

 "ராஜேஷ்குமார், நான் பார்த்த ஆரம்பக்கால எழுத்தாளர்களில் நீங்ககொஞ்சம் வித்தியாசம். நிறைய எழுதி அனுப்பறதுல எந்தப் பிரயோஜனமும் கிடையாது. தரமா எழுதணும். ஒரு சின்னக் கருவை எடுத்துக்கிட்டாலும் அதுல ஒரு மாரல் இருக்கணும். கதையோட கடைசி வரியில் எதிர்பாராத ஒரு 'டெய்ல் ட்விஸ்ட்' இருக்கணும். இந்த ஃபார்முலாவைக் கடைப்பிடிச்சுப் பாருங்க. கதை பிரசுரமாகும். நிச்சயமா ஜெயிப்பீங்க" சொல்லிவிட்டு என் கைகளைப் பற்றிக் குலுக்கினார்.
  
நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தேன். அதற்குப் பிறகு ரா.கி.. சொன்ன ஃபார்முலாபடி சிறுகதைகள் எழுதி, அடுத்த எட்டு வருடங்களுக்குள் 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முடித்து எழுத்துலகில் எனக்கென்று ஒரு நாற்காலி போட்டுக் கொண்டேன்.
  
1986-ம் வருடம் ஆகஸ்ட் 1-ம் தேதியன்று  ரா.கி..விடமிருந்து எனக்கு ஃபோன்.
  
"ராஜேஷ்குமார், அடுத்த வாரக் குமுதத்தில் உங்களுடைய தொடர்களையொன்று ஆரம்பமாக வேண்டும் என்று ஆசிரியர் விரும்புகிறார். அறிவுப்பு வைக்க வேண்டும். உடனடியாக ஒரு தலைப்பைச் சொல்லுங்கள். உங்களுக்கு ஒரு நிமிஷம்தான் அவகாசம். லைன்ல வெயிட் பண்றேன்."
  
என் இதயத் துடிப்பு உச்சத்துக்குப் போயிற்று. இன்ப அதிர்ச்சி என்னை அடித்துப் போட்டிருந்தது. அவகாசம் முடிந்ததும் மறுமுனையிலிருந்து ரா.கி..வின் குரல்.
  
"டைம் ஈஸ் ஓவர். தலைப்பைச் சொல்லுங்க. எஸ்.டி..டி. பில் ஏறிட்டே போகுது."

"ஸார்... இன்னிக்கு ஆகஸ்ட் 1. ஆரம்பத்திலேயே எனக்கு இன்ப அதிர்ச்சி. இந்த ரெண்டையும் சேர்த்துப் பார்த்ததுல  ஒரு தலைப்பு ஃப்ளாஷ் ஆச்சு... அது 'ஆகஸ்ட் அதிர்ச்சி...!" என்றேன்.
  
மறுமுனையில் அவர் சிரித்தார்.
  
"நீங்க சொன்ன தலைப்பைக் கேட்டு நான் அதிர்ச்சியாயிட்டேன் ராஜேஷ்குமார்! ஓர் எழுத்தாளன் இப்படித்தான் இருக்கணும்." - வழ்த்தினார்.
  
1986-ல் ரா.கி..வும், புனிதனும் என் வீட்டுக்கு வந்து உணவு உண்டதும், நான் இதில் உட்காரலாமா?" என்று ஒரு சிறு குழந்தை போல் கேட்டு அதில் உட்கார்ந்து சந்தோஷப்பட்டதும் என் வாழ்வின் வைர நிமிடங்கள்.
  
ரா.கி.. இன்று நம்மிடம் இல்லை.
  
1975 ஆகஸ்டில் நான் அவரை முதல் முதலாய்ச் சந்தித்தேன். இந்த 2012 ஆகஸ்டில் நான் அவரை இழந்தேன். இந்த ஆகஸ்ட் அதிர்ச்சியிலிருந்து நான் மீண்டு வர பல வருடங்களாகும்.

 

இனி என்னுடைய அறையில் நான் உட்காரும் நாற்காலியைப் பார்க்கும்போதெல்லாம் கண்களில் நீர் முட்டும். ரா.கி.. என்ற தமிழ் எழுத்துக்கள் உள்ளவரை  ரா.கி..வும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.
  
மரணத்துக்குப் பின்பும் வாழ்பவர்கள் எழுத்தாளர்கள் மட்டுமே!
  
- நன்றி: கல்கி



கையில் கிடைத்தவை ... 5

தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து விட்டது. மேலை நாட்டினருக்கும் நமக்கும் சுமார் பத்து வருட வேறுபாடுகள் இருந்த காலம் ஒன்றும் இருந்தது. அவர்கள் அறிமுகப்படுத்திய புதுமைகள் எதுவும் நம்மை வந்தடைய அவ்வளவு நாட்கள் ஆயின அன்று.

இன்று அப்படியல்ல. தொழிதுறையிலும் வேறு எல்லா நவீனங்களிலும் அங்கு தொடங்கும் அதே நேரம் நமக்குத் தெரிந்து விடுகிறது இப்போது.

தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் நாமும் இப்போது சரிசமமாக எல்லா நாடுகளையும் போல் வளம் வருகிறோம்.



இளம் பிள்ளைகள் மிக விரைவிலேயே சொல்லித் தருபவைகளை கற்றுக்கொள்கிறார்கள். பள்ளிப்பாடங்களிலும் சரி ஏனைய கைவேலைப்பாடுகளிலும் சரி, குழந்தைகள் படு சுட்டியாக  தங்கள் திறனை காட்டத் தவறுவதில்லை. நாம் சரியானவைகளை அவர்களுக்கு கற்றுக்கொள்ள தருகிறோமா என்பதே இப்போதைய கேள்வி...

உலகமயமாதல் குழந்தைகளின் வளர்ச்சிக்கு வெகுவாக உதவும் அதே நேரம், எதிர்கலாச்சாரம், பண்பாட்டு சிதைவுகள், நமக்கு ஒவ்வாத இறக்குமதி பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி அன்போடு அரவணைத்துச் சென்றால் குழந்தைகள் நமது பெருமையை அடுத்த தலைமுறைக்கு கம்பீரத்தோடு எடுத்துச்செல்வார்கள் என்பது உண்மை.

அதற்கு பெற்றோரின் பங்களிப்பு மிகவும் அவசியம்.  குழந்தைகளின் முன்னால் குடும்ப கௌரவம் பாதிக்காதவாறு நடந்து கொள்வதும், அவர்கள் அமைதியான சூழ் நிலையில் கல்வி கற்க வீட்டில் போதுமான வசதிகளை செய்து கொடுப்பதும் அடங்கும்.

பிள்ளைகளிடம் 'படி .... படி..." எனக் கட்டளை இட்டுவிட்டு, தாங்கள் தொலைக்காட்சித் தொடர்களை பார்த்துக்கொண்டிருப்பது அறிவுக்கு உகந்ததல்ல.

கையில் கிடைத்தவை ... 4 MGR



கையில் கிடைத்தவை ... 3


திருமதி சாமியும், குழந்தைகளும்

மனைவி அமைவதெல்லாம். . .

"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்..."
இது ஒரு திரைப்பட பாடல். இதில் உண்மை இருக்கிறதா?  எங்களைக் கேட்டால் முழுக்க முழுக்க உண்மையே என்போம்.

திருமணம் என வந்துவிட்டால், பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் பார்த்து செய்து வைப்பார்கள். அல்லது காதல் அது இது என எப்படியாவது தனது துணையை பார்த்து தெர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.

எங்களுக்குள்  அப்படி எதுவுமே இல்லை.

ஒரே ஒரு தொலைபேசி உரையாடல், அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே, நாங்கள் இருவரும் இணைய காரணமாகிவிட்டது. இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அந்த தொலைபேசி  உரையாடலில் நாங்கள் இருவருமே இல்லை.

அதன் பின்னர் வந்ததே அன்பும், பாசமும், காதலும். சுட்டுவிடும் சூரியனைப்போல கோபக்காரனான என்னை, சாந்தமான குளிர் நிலவாய் மாற்றியது என் மனைவியே. இதை 25 வருட திருமண வாழ்வுக்கு பின் சொல்வதில் எனக்குப் பெருமையே.

எங்களைப் போல் பல தம்பதிகள் இருக்கிறார்கள். விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மையோடு, புரிந்துணர்வும் இருக்கும் எல்லா தம்பதிகளும் மகிழ்ச்சியாகவே வாழ்கிறார்கள்.


கையில் கிடைத்தவை ...

ஒரு காலத்தில் எனக்குப் பிடித்த தொலைகாட்சித் தொடர்களாக இருந்தது இ்து.
"மிஷன் இம்பொசிபள். . ." எம்ஜிஆர் படங்களோடு இந்த "மிஷன் இம்பொசிபள்" நிகழ்ச்சியைப் பர்த்தே இரட்டை வேட  புகைப்படங்களை எடுக்க கற்றுக்கொண்டேன். அதுவும் பல நுணுக்கங்கள் இன்னும் அறிமுகப்படுத்தபபட்டிருக்காத அந்தக் காலத்தில். 


தொட்டில் பழக்கமென்பது சிலபேருக்கு ரொம்ப காலம் தொடர்ந்து வரும் ஒன்றாகும். எனக்குத்தெரிந்த, நான் சிறு வயதில் அவ்வப்போது தூக்கி வளர்த்த ஒரு பெண்ணொருவர் ( ஒரு குழந்தைக்குத் தாய் அவர் இப்போது)  அழும்போது  "மியாவ் மியாவ் பூனைக்குட்டி" என்று பாடிய வண்ணமே அழுவார். அவர் தங்கையும் அதைச் சொல்லி சிரிப்பதுண்டு சில நேரங்களில்

பூனைக்குட்டிகளை இப்போது பார்க்கும் போது அவரின் நினைவே வருகிறது. இன்னும் அதே பாடலைத்தான் பாடிக்கொண்டிருக்கிறாரா  அல்லது பாடலை மாற்றி விட்டாரா என்று தெரியவில்லை.


 நாம் வளர்க்கும் நாய்களுக்கு நாம் பேசும் மொழி தெரியும். அவை ஆங்கில  நாய்களாக இருந்தாலும் வளர்ப்போரின் மொழியினை மிக விரைவில் கற்றுக்கொள்ளும். மேலிருக்கும் இந்த நாய், எனதருமை நண்பர்கள்'ஃபிலிப்ஸ் என்னி'   தம்பதியரின் செல்ல நாய். பேசுவோரின் எல்லா உணர்ச்சிபூர்வமான வார்தைகளையும் விளங்கிக்கொண்டு அதற்கேற்றபடியான முகபாவங்களைக் காட்டும் இது.  



கடந்தாண்டு புத்ராஜெயாவில் நடைபெற்ற 'ஃபுளோரியா 2011 மலர்க்கண்காட்சியில்   எனக்குப் பிடித்தது இது. அடுக்கடுக்காக இருந்த இந்த பூ, கண்ணைக்கவரும் வண்ணம் பார்ப்போரை பரவசப்படுத்தியது.

Sunday 23 September 2012

சம்பாதிப்பதும் சேமிப்பதும்...

கை நிறைய சம்பாதித்தாலும் அளவோடு செலவுகள் செய்து நிம்மதியாக வாழ்வது வாழ்வில் வெற்றிபெற்றோரின் ரகசியமாக இருந்து வருகிறது. இதை ரகசியம் என்று சொல்வதை விட அவர்களின் கட்டுப்பாடான வாழ்க்கை முறை என்றுதான் சொல்லவேண்டும். சாதாரணமானவர்களும் சிறப்பு பெருவது இந்த சின்ன வித்தியாசத்தால் தான்.

ஆயிரம் வெள்ளியை   உடனே  செலவு செய்ய அனைவருக்கும் தெரியும். ஆனால், அதில் ஒரு நூறு வெள்ளியை சேமிக்கச்சொன்னால் பல மணி நேரம் சிந்தித்துக்கொண்டிருப்பார்கள். சேமிப்பு என்பது மிகவும் சிக்கலான ஒன்று. இதற்கு தனித்திறன் வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் நாட்டு மக்களுக்காக அரசாங்கம் போடும் பட்ஜெட் போலவே, ஒவ்வொரு வீட்டிலேயும் குடும்ப பட்ஜெட் போடப்பட வேண்டும். இது மாதாந்திர பட்ஜெட்டாக இருந்தால் பண விரயத்தைக் கண்டுபிடிப்பது இன்னும் சுலபமாகும் குடும்பத் தலைவருக்கு.

ஒரு சராசரி குடும்பத்தின் மாதச் செலவுகள் எப்படி இருக்கும்?

1    மளிகை
2    மீன், இறைச்சி,கோழி மற்றும்  காய்கறி
3    வீட்டு தொலைபேசி   மற்றும்  கைபேசி
4    கரண்ட் பில்
5    தண்ணீர் பில்
6    வாகணங்களுக்கான பெட்ரோல்
7    ஆஸ்ட்ரோ
8    இன்டெர்னெட்
9    மாதந்திர காப்புறுதி பிரிமியம்
10   கார்    மற்றும்  பைக் போன்றவற்றுக்கான மாதாந்திர கட்டணம்
11   வீட்டுக்கான   மாதாந்திர  கட்டணம்

என இன்னும் எத்தனை எத்தனையோ...?

இதுபோன்ற செலவுகளுக்கு ஈடுகொடுத்து பணம் சம்பாதிக்கவேண்டிய நிர்பந்தம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உண்டு. சில குடும்பங்களில் மனைவியும் வேலைக்குச் சென்று பொருள் ஈட்டுகிறார். இதனால் கணவரின் சுமை கொஞ்சம் குறைகிறது.

இப்படி கஷ்ட்டப்பட்டு சம்பாதிப்பதை மிகச் சாதாரணமாக செலவுகள் செய்து இழந்துவிடலாமா? எவ்வளவு சிரமங்களுக்கிடையே உழைத்து சம்பளமாக நாம் பெற்ற பணம் இது. சிரத்தையுடன் அல்லவா செலவு செய்ய வேண்டும். முப்பது நாட்கள் காத்திருந்து பெற்று வந்த பணத்தை மூன்றே நாட்களில் அனாவசியச் செலவுகளில் செலவிடுவது சிறந்த ஒன்றா என்ன?

சம்பாதித்த பணத்தை சேர்த்து வைக்க நிச்சயம் ஒரு புத்திசாளியால் மட்டுமே முடியுமென்று அன்று பெரியோர் சொல்லி வைத்தனர்.

பலர் பணம் சம்பாதிப்பதெப்படி என தெரிந்து வைத்துள்ளனர்.  கடுமையான உழைப்பாளிகளான இவர்கள் சோம்பலின்றி பணம் சம்பாதிக்கிறார்கள். ஒருவேலைக்கு இரு வேலைகளாக செய்து அங்கும் இங்கும் ஓடிச் சென்று பொருள் ஈட்டுகிறார்கள். ஆனால், அந்தப் பணத்தின் மதிப்பினை சரிவர உணராமல் இருக்கிறார்கள்.

அவர்கள் மட்டுமல்ல, அவர்களின் பிள்ளைகளும் பணத்தின் அருமை பெருமைகளையும், முக்கியத்துவத்தையும் தெரிந்துகொள்வது அவசியமாகும். அவற்றோடு பணத்தை சேமிக்கும் விதங்களையும் பெரியோர் பிள்ளைகளுக்கு சொல்லித்தருவது எதிர்காலத்தில் பிள்ளைகள் தங்கள் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்திக்கொள்ளும் ரகசியத்தை    சொல்லித்தருவது  போலாகும்.

சில மாதங்களுக்கு முன் ஒருநாள், காப்புறுதியின் அவசியம் பற்றி குழுமியிருந்த சில இளைஞர்களிடையே பேசிக்கொன்டிருந்தேன். இடையே, பணத்தை செலவழிக்கும் வழிகள் பற்றி வினவினேன். எல்லோரும் கைகளை உயர்த்தி பல காரணங்களைத் தந்தனர். ஆனால், பணத்தை வளரச்செய்யும் வழிகள் பற்றி கேட்டபோது 'பிஸினஸ், ஷேர் மார்க்கெட்' என சிலவற்றை மட்டுமே சொல்ல முடிந்தது.  அதிலும் இவை பாதுகாப்பான முதலீடுகள் செய்யும் விதங்கள் அல்ல.

இளைஞர்கள் என்பதால் இன்னும் காலம் கடந்து விடவில்லைதான். ஆனால், உழைத்துக் கொண்டுவரும் பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்யாது அப்பணத்தினை சரியான முறையில் வளர்க்கும் ஆற்றலையும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.

பல குடும்பங்களில் படிப்பைப் பற்றி தினமும் பேசுகிறார்கள். பணத்தினைப் பற்றிய நல்ல விசயங்களையும் அவ்வப்போது குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் சொல்லி வர வேண்டும்.

பணத்தின் மதிப்பு எப்படி உயருகிறது என சொல்லித்தரும்போது, அதை மதிக்கும் குணமும் பிள்ளைகளுக்குள் வளர்வதை பெற்றோர் உறுதி செய்யவேண்டும்.

Monday 17 September 2012

MGR movie stills...










கே. கே. பாலனும் கே. கே. பி. ஷெலன்ட்ரியும். . .


சிலருக்கு புகைப்படம் எடுத்துக்கொள்ள பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. என்னதான்  அழகாக இருந்தாலும், கேமரா முன் வர வெட்கப்படுவோர் இருக்கவே செய்கிறார்கள்.

இங்கே நான் புகைப்படம் எடுப்பதை தடுப்பவர்...ஷெலன்ட்ரி பாலன். ( அப்போ தூக்கி வளர்த்த குழந்தைங்க இப்போ தூக்க முடியாத அளவுக்கு வளர்ந்துட்டாங்க..)



எப்போதும் சிரித்தபடி இருக்க ஒரு சிலராலேயே முடியும்.

எனது அருமை நண்பர் திரு பாலன், என்றென்றும் புன்னகையுடனே இருக்கும் சிலரில் ஒருவர். அவருடனான "சிந்தனைகளும் சாதனைகளும்" எனும்  நேர்காணலின்  போது எடுத்த புகைப்படம் இது.

லேடி ஒஃப் ஷெல்லோ. . .


 நம்மைப் போன்று  பலவழிகளில் வேறுபாடுகள் கொண்டவர்களே மேலை நாட்டினரும்...

தீண்டத் தகாதவள் என முத்திரை இடப்பட்டு தன் உயிரை தானே போக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தின் கடைசியில் ஒரு பெண். 1833ல் இயற்றப்பட்ட, மிகவும் புகழ்பெற்ற ஒரு இத்தாலிய கவிதையின் சித்திரம்.

Monday 3 September 2012

பட்டாம்பூச்சி / PAPPILON



"படிக்க சுவாரஸ்யமான புத்தகம் ஒன்றை சொல்லுங்களேன்"  என என்னிடம் வருவோருக்கு நான் பரிந்துரை செய்யும் பத்து நாவல்களில் ஒன்று இது.

Saturday 1 September 2012

திருமணமானவர்களுக்கு ( மட்டுமல்ல... )

- திருமண கவுன்சிலர் ஐயா அ. ராமதாஸ்

வழக்கமான, படிக்கவே கூசுகின்ற அடுத்தவருடனான கள்ளத்தொடர்பில் முறியும் திருமணங்களைத் தவிர்த்து, ஞாயமான, "தவிர்க்கப்பட்டிருக்கலாமோ?" எனும் எண்ணத்தில், சிதறும் திருமணங்களுக்கான காரணங்களை இங்கு பார்ப்போம். இவை சாதாரணமாக தோன்றினாலும் விவாகரத்துக்கு அடிப்படை காரணங்களாக அமைவதாகும்...

#     புதிதாய் வரும் மனைவிக்காகவோ, கணவருக்காகவோ பல ஆண்டுகள் பழகி வரும் நம் நல்ல நண்பர்களையும் ஒரு எல்லைக்குள் கொண்டுவந்துவிடுகிறோம். இது நமது நண்பர்களை அன்னியர் ஆக்கிவிட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது.
இதுவரை வாழ்ந்தது நம் வாழ்வின் ஒரு பகுதிமட்டுமே. இனி வாழப்போவதுதான் அதன் முக்கியப்பகுதியே. எனவே, நண்பவர்களை நண்பர்களாகவே நிறுத்திவிடவேண்டும். இது நல்ல நண்பர்கள் விளங்கிக்கொள்ள வேண்டிய ஒன்று. வார்த்தைகளில் சொல்லாமல் நமது புத்திசாளித்தன சொல்களால் மென்மையாக காட்டிக்கொள்ளலாம். இதை ஏற்க மறுப்பவர்கள் நம் நல்ல நண்பர்களாக நிச்சயம் இருக்க முடியாது.

#     நமது நண்பர்களால் நல்லதும் நடக்கும், சில நேரங்களில் எதிர்பாராவிதமாக சிரமங்களும் தோன்றும். சிரமங்கள் எனும்போது பொதுவாகவே, கடனாக வாங்கும் பணம் காரணமாகவும், இரவல் வாங்கும் பொருட்களினாலும் பிரச்சினைகள் தோன்றும். நண்பர்கள் என்பதால் உதவுவது நம் கடமைதான் என்றாலும், கணவனும் மனைவியும் கலந்து பேசிய பின்னரே அந்த உதவியைச் செய்யவேண்டும். ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் தன்னிச்சையாக உதவி எனும் பெயரில் செய்யும் எதுவும் குடும்ப உறவுக்கு நல்லதொன்றாக அமையாது.

#     புதிதாக மணம் புரிந்துகொள்ளும் தம்பதிகளுக்கு ஒன்றைச் சொல்வேன்.
குடும்பதிற்கான செலவுகளை எவ்வளவு செய்தாலும் தவறில்லை. செய்யும் எல்லா செலவுகளையும் ஒரு புத்தகத்தில் எழுதி வைத்து மாத இறுதியில் இருவருமாக சேர்ந்து சரிபார்ப்பது நல்லது. ஆச்சரியப் படும் விதமாக அடுத்தடுத்த மாத செலவுகள் குறைந்து விடும். கையில் பணம் மீதப்படும்போது குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் தானே  கூடிவிடும்.

#     திருமணத்தின் போது இருவரும் எவ்வளவு படித்திருக்கிறார்கள் என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. படித்தவர்களாகவும்  இருக்கலாம்,  படிக்காதவர்களாகவும் இருக்கலாம். வாழ்வில் இணைவதற்கு படிப்பு ஒரு தடைக்கல்  அல்ல. ஆனால் திருமணத்திற்குப் பின் இருவரும்  படிக்கத் தொடங்குவது  அவசியம். பள்ளிப் படிப்பை இங்கு நான் சொல்லவில்லை. ஏதாவதொரு நல்ல புத்தகத்தை தினமும் கொஞ்சமாவது படிப்பது பின் காலத்தில்  குடும்ப முன்னேற்றத்துக்கு  பெரும் பங்காற்றும். தினமும்  படிப்பவர்கள் சிந்தனையில் பக்குவப் படுகிறார்கள். பக்குவப்படும் சிந்தனை நம்மை வளமான பல வழிகளில் செயல்படச் செய்கிறது.

#     எப்படித்தான் காலம் வேகமாக உருண்டோடினாலும் வீட்டுச் சமையல் இன்னும் பெண்கள் கைகளிலேயே இருக்கிறது. எனவே திருமணமாகும் பெண்களுக்கு சமையல் தெரிந்திருப்பது கணவன் மனைவிக்கிடையே உள்ள உறவை வலு சேர்க்கும் ஒன்றாகும். வீட்டில் இருக்கும் மற்றவர் சமைப்பதும், சமையலுக்கென உதவியாளரை வைத்துக்கொள்வதும் தவறில்லை. ஆனால், எப்போது ஒரு பெண் தன் கணவன் திருப்தி படும்படியாக சமைத்துப் பறிமாறுகிறாளோ அப்போதுதான் அவள் ஒரு மனைவி எனும் அந்தஸ்துக்கு தகுதி பெறுகிறாள். இது எழுதப்படாத உண்மை.

#     என்னதான் வீட்டில் பூஜை அறையில் தியானம் செய்தாலும், குறைந்தது வாரத்திற்கு ஒருமுறை அருகில் இருக்கும் கோயிலுக்கு வாழ்க்கைத் துணையுடன் சென்று வருவது இறையருளைப் பெரும் சீரிய அம்சமாகும்.  பலருக்கு சினிமா, பீச், பார்ட்டி, கடைத்தெரு என போவதற்கு நிறைய நேரம் இருக்கும். ஆனால், கோயிலுக்குப் போக கூச்சப்படுவர். இது தவறு. தம்பதி சமையதராக கோயிலுக்குச் செல்வது பல பாக்கியங்களை அடையும் ஒரு குறுக்கு வழியாகும்.

#     இதுமட்டுமல்ல, இதுவரை எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தனியே சென்று வந்த ஆண்களும், திருமணமான பின் தங்கள் மனவிமார்களுடன் சென்று கலந்துகொள்வது இருவருக்கும் இடையே இருக்கும் பரஸ்பர அன்பினை பன்மடங்கு வளரச் செய்யும்.

( பல இன மக்கள் வாழும் நம் நாட்டில் நம் சமூகத்தினரிடையே ஏற்படும் அதிக அளவிலான திருமண முறிவுகளை தவிர்க்கும் வழிகள் பற்றி வினவினேன். 'பொஸிட்டிவ்வாக' அவர் கூறிய குறைகள் இவை. )