Thursday 27 September 2012

கையில் கிடைத்தவை ... 5

தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து விட்டது. மேலை நாட்டினருக்கும் நமக்கும் சுமார் பத்து வருட வேறுபாடுகள் இருந்த காலம் ஒன்றும் இருந்தது. அவர்கள் அறிமுகப்படுத்திய புதுமைகள் எதுவும் நம்மை வந்தடைய அவ்வளவு நாட்கள் ஆயின அன்று.

இன்று அப்படியல்ல. தொழிதுறையிலும் வேறு எல்லா நவீனங்களிலும் அங்கு தொடங்கும் அதே நேரம் நமக்குத் தெரிந்து விடுகிறது இப்போது.

தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் நாமும் இப்போது சரிசமமாக எல்லா நாடுகளையும் போல் வளம் வருகிறோம்.



இளம் பிள்ளைகள் மிக விரைவிலேயே சொல்லித் தருபவைகளை கற்றுக்கொள்கிறார்கள். பள்ளிப்பாடங்களிலும் சரி ஏனைய கைவேலைப்பாடுகளிலும் சரி, குழந்தைகள் படு சுட்டியாக  தங்கள் திறனை காட்டத் தவறுவதில்லை. நாம் சரியானவைகளை அவர்களுக்கு கற்றுக்கொள்ள தருகிறோமா என்பதே இப்போதைய கேள்வி...

உலகமயமாதல் குழந்தைகளின் வளர்ச்சிக்கு வெகுவாக உதவும் அதே நேரம், எதிர்கலாச்சாரம், பண்பாட்டு சிதைவுகள், நமக்கு ஒவ்வாத இறக்குமதி பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி அன்போடு அரவணைத்துச் சென்றால் குழந்தைகள் நமது பெருமையை அடுத்த தலைமுறைக்கு கம்பீரத்தோடு எடுத்துச்செல்வார்கள் என்பது உண்மை.

அதற்கு பெற்றோரின் பங்களிப்பு மிகவும் அவசியம்.  குழந்தைகளின் முன்னால் குடும்ப கௌரவம் பாதிக்காதவாறு நடந்து கொள்வதும், அவர்கள் அமைதியான சூழ் நிலையில் கல்வி கற்க வீட்டில் போதுமான வசதிகளை செய்து கொடுப்பதும் அடங்கும்.

பிள்ளைகளிடம் 'படி .... படி..." எனக் கட்டளை இட்டுவிட்டு, தாங்கள் தொலைக்காட்சித் தொடர்களை பார்த்துக்கொண்டிருப்பது அறிவுக்கு உகந்ததல்ல.

No comments:

Post a Comment