Tuesday 31 July 2012

மலரும் நினைவுகள் - சிலாங்கூர் டிரெட்ஜிங்


1979ல் டிரெட்ஜ் ஒன்றின் முன் எடுத்துக்கொண்ட படம். . .

Friday 27 July 2012

தனியார் 'டியூஷன்' மையங்கள். . .


குமார் கார்த்திகேயன் என்னுடைய நெடுநாளைய நண்பர். அவரும் அவருடைய மனைவி மோனாவும் அன்மையில் அவர்களின் புதுவரவோடு எங்களின் வீட்டிற்கு விஜயம் செய்தனர். அப்போது எடுத்த படம் இது.

மூன்று தனியார் டியூஷன் மையங்களை நிர்வகிக்கும் இவர்கள், தங்களிடம் வரும் மாணவர்களுக்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பாடத் திட்டத்தின் வழி  நவீன முறையில் அதிக 'ஏ' எடுக்க கற்றுத்தருவதாக  கூறினர்.   இதனால் தேர்ச்சியின் விகிதம் உயர்வதாகவும், அதைக் கண்டு பெற்றோர் மகிழ்ச்சியடைவதாகவும், அவர்களின் மூலம் தங்களுக்கு நல்ல விளம்பரம் கிடைப்பதாகவும்  தெரிவித்தனர்.

பரவலாக சொல்லப் படுவதை போல், பள்ளிகளைவிட தனியார் டியூஷன் மையங்களில் கல்வித்தரம் உயர்ந்திருக்கிறதா..?  பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள்கூட  இதுபோன்ற டியூஷன் மையங்களுக்கு போகும் ரகசியம் இதுதானா ?  அல்லது காதில் விழும் கிசு கிசு போல் வரவிருக்கும் தேர்வுத்தாள்கள் பற்றிய கணிப்புக்களையோ, தலைப்புக்களையோப் பெற  இத்தகைய மையங்களில் கூட்டம் கூடுகிறதா...?

இதில் உள்ள உண்மை நிலவரம் நமக்கு சரிவரத் தெரியாது. ஆயினும் நமக்கு நன்கு தெரிந்த ஒன்று, மேலே படத்தில் இருக்கும் இருவரும் தங்களின் கடின உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் உயர்ந்தவர்கள்.

இவர்களின் சேவை மனப்பான்மை இவர்களோடு பழகும் பலருக்கும் தெரிந்தது. பத்து நிமிடம் இவர்களோடு பேசிக்கொண்டிருந்தால் அதில் மாணவர்களுக்கு உபயோகமான பலவற்றை இவர்கள் பேச்சியிலிருந்து தெரிந்து கொள்ளலாம். வெறும் வாய்வார்த்தைகளில் மட்டுமல்ல, இவர்களின் செயலிலும் நேர்மை இருக்கும். இதுவே ஒன்றிலிருந்து மூன்று டியூஷன் மையங்களை இவர்கள் பெற்றிருப்பதன் ரகசியமுமாகும்.

 ஒரு குடும்பத்தின் எதிர்காலம் உயர்கல்வி கற்றவர்கள் மூலமே மேன்மை அடைகிறது என்பதனை பலரும் உணர்ந்திருக்கின்றனர் தற்போது.

இங்கு வசூலிக்கப்படும் கட்டனம் அதிகமாயிருந்தாலும் அதைப் பற்றி யாரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அதிக அளவில் பிள்ளைகள் டியூஷன் மையங்களுக்குப் போவது இதையே காட்டுகிறது.

"இதயத்தில் இடம்பெற்றவை..."

மார்கழி மாத வைகறை.  பனித்துளி விழுந்து மலர்கள் மென்மையான கணத்தோடு தலை வணங்கி அங்கும் இங்கும் சாய்கின்ற காட்சி. விடிந்தும் விடியாதது போன்ற இளம் காலை.  வண்டினம் துயில் நீங்கி மலர்களிடம் வருவதற்குள், பெண்கள் முந்திக்கொண்டு அவற்றைப் பறித்து இறைவனுக்கு மாலையாக்கத்  தொடங்கி விடுகின்றனர்.

அவர்களுள் ஒருத்தி மலர்களைப் போன்றே மனதில் தோன்றும் வண்ண நினைவுகளில் மூழ்கி தன்னையும் மறந்து பாடுகிறாள்....

"மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே"

1965ல் வெளிவந்த இதயக் கமலம் திரையில் கே வி மகாதேவன் அவர்களின் இசையில் கண்ணதாசனின்  எழுத்தாற்றலில் இந்தப் பாடல். குரல்: P சுசீலா.

--0--0--0--0--0--0--

மரிக்கொழுந்துச் செடியை பார்த்திருப்போம்.  நுனித் தளிரிலிருந்து அடி வேர் வரை, எங்கு கிள்ளி முகரும் போதும்  வீசுகின்ற மணம் போல், இந்த பாடலில் எந்த வரியில் எந்த வார்த்தையில் பார்த்தாலும் அதில் ஒரு இனிமை தெரிகிறது.  பண்பும் ஒழுக்கமும் நிறைந்த இருவரின் காதல் உரையாடல் இப்பாடல்....

மலரும் கொடியும் பெண்ணென்பார்...
மதியும் நதியும் பெண்ணென்பார்...

மலரும் கொடியும் நடப்பதில்லை...
அவை மணம் தர என்றும் மறப்பதில்லை...

மலரும் கொடியும் பெண்ணென்பார்...
மதியும் நதியும் பெண்ணென்பார்...


--0--0--0--0--0--0--

எந்தப் பெரிய பதவியில் இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் சோதனை என்று வந்திடும் போது எல்லோரும் துவண்டு விடுகிறார்கள். தனிமைப்படுத்தப்படும் அது போன்ற நேரங்களில் தங்களுடன் இருப்பது கடந்து போன காலங்களின் அனுபவங்களே. அருகே இருந்தும் மனம் விட்டுப் பேச முடியா சூழ்நிலையில் இருவர் படும் துயரத்தை கவிஞர் கண்ணதாசன் சிவாஜி பிலிம்ஸ் ஒன்றுக்காக பாடலாக எழுதியிருந்தார். சோகத்தில் சுகமுண்டு என்போரின் சாட்சி இப்பாடல்.

"தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னை கண்டு

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

வெகுதூரம் நீ சென்று நின்றாலும்
உன் விழி மட்டும் தனியாக வந்தாலும்
வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)"

--0--0--0--0--0--0--

தொடர் வரிகளில் தேனைப்போல் இனிமையை தரத்தெரிந்திருந்தவர் கண்ணதாசன் அவர்கள். சினிமாப் பாடலாய் இருந்தாலும் அதில் மொத்தப் படத்தின் சிக்கலான  கதைக்கருவை சிரமமில்லாமல் சொல்லிச் சென்றவர் அவர். 

இருவர் உள்ளம் திரையில் பின்வரும் பாடலில் அவரின் திறமை தெளிவாகத்தெரிந்தது.

"மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே

அடிமை செய்தானே

உருகிவிட்ட மெழுகினிலே ஒளி ஏது
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது
பழுது பட்ட கோவிலிலே தெய்வம் ஏது
பனி படர்ந்த பாதையிலே பயணம் ஏது
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா


இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா
விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா
வீட்டு குயிலை கூண்டில் வைத்தால் பாட்டு பாடுமா

பாட்டு பாடுமா
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா"

Wednesday 25 July 2012

மறைந்து வரும் நற்பண்புகள். . .

காலங்காலமாக உலகே வியக்கும் வண்ணம் நாம் போற்றி பாதுகாத்து வரும் நற்பண்புகளுக்கு இப்போது சோதனை ஏற்பட்டிருப்பதை நம்மில் பலரும் உணர்ந்திருப்போம்.

தமிழர்களுக்கே உடைய நல்லவை பல இப்போது மெல்ல மெல்ல மறையத் தொடங்கிவிட்டன.  பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர் 'குளோபலைசேஷன்' எனும் உலகளாவியப் பார்வை பற்றி சொல்லியிருக்கின்றனர்.

"யாதும் ஊரே யாவரும் கேளீர்"
என்று கணியன் பூங்குன்றனார் சொன்னது அக்காலத்துக்கு மட்டுமல்ல இக்காலத்துக்கும் பொருந்துகின்ற ஒன்றுதான். இவர் பொருளாதாரத்தை மட்டுமல்லாது உலகத்தில் உள்ள அனைவரும் நமக்கு சகோதர்களே என முக்காலத்தையும் கணித்துக் கூறியவர் ஆவார்.

விருந்தோம்பலில் நம்மை முந்திச்செல்ல வேறு யாரும் இலர். வீட்டுக்கு வந்தோரை, அவர்கள் நமக்கு பிடிக்காதவராய் இருந்தாலும் "வாங்க... வாங்க... " என வாய் நிறைய அழைக்கும் பண்பு நம்முடைய சிறப்பு.

வந்திருப்போருக்கு உணவிட்டு, இன்முகத்தோடு பணிவிடை செய்தனுப்புவது வேறு எங்கும் காணாத ஒன்று.

ஏழை எளியோருக்கு தொண்டு செய்யும் குணம், உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் இரக்கம் காட்டுதல் போன்ற பல நற்பண்புகளை நாம் கடைபிடிக்கிறோம்.

இதுமட்டுமல்ல, தாய் தந்தையிடம் பாசமும், குருவிடம் மதிப்பும், இறவனிடம் பக்தியும் கொண்டு நன்னெறியில் குடும்பத்தை அனைத்துச்செல்லும் நல்ல கலாச்சாரத்தின் பிறப்பிடம் என நம் சமூகத்தை மேலை நாட்டோர் சொல்வார்கள்.

பெரியோர் வரும்போது எழுந்து நின்று வணக்கம் சொல்லி அவர்கள் அமர இடம் கொடுப்பது, அவர்கள் மனது நோகாமல் தேவைப்படும் உதவிகளைச் செய்து கொடுப்பது, 'அங்கிள், ஆண்ட்டி' என பொத்தாம் பொதுவாக அழைக்காமல், சித்தப்பா, சின்னம்மா, மாமா, அத்தை என்பது போன்ற  உறவு முறைகளில் அழைத்து அவர்களின் அன்புக்கு பாத்திரமாவது என நாம் பொதுவாக செய்து வரும் சிறப்பு அம்சங்கள் பல.

இவற்றுக்கும் மேலாக, கணிவாக பேசி நயமாக காரியங்கள் செய்யும் சாதுர்யம் நமக்கு வழி வழியாய் வரும் ஒன்று.

"இனிய உளவாக இன்னாது கூறல்
கனி இருப்பக் காய் கவர்ந்தற்று"
என்பதற்கொப்ப, நல்லதையே பேசி வருகிறோம்.

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் மற்றும் விசேஷ தினங்களில் விரதம் இருந்து கோயிலுக்குச் சென்று இறைவனை கும்பிடுவது, பூமியை தாயாக நினைத்து இயற்கை நமக்களித்ததை நன்றியுணர்வோடு இறைவனுக்கு சமர்பிப்பது போன்ற பெருமை மிக்க செயல்கள் நம்முடைய நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சியிலும் இன்னும் நாம் நிலை நிறுத்துகின்ற ஒப்பற்றச் செயல்களாகும்.

தமிழர்களான நாம் நம் மொழியைப் போற்றிப் புகழ்வதும், பாதுகாத்து பத்திரப்படுத்துவதும், இயல் இசை நாடகம் என சிறப்புச் சேர்த்து மகிழ்வதும் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இங்கே மலேசிய நாட்டிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஆயினும் மனதில் ஒரு நெருடல்...
சின்னதாக, ஓர் இனம் புறியாத கலக்கம்...
ஏன்...எதனால்....?

நமது பங்களிப்பு இதில் எவ்வளவு இருக்கிறதோ, அதற்கு நேர்மாறான, எதிர்மறைச் செயல்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழ்மொழியில் ஆர்வமின்மை, பெரியோரை அலட்சியப்படுத்தி எடுத்தெறிந்து பேசுதல்,  கையில் பொருள் இருந்தும் ஏழைகளுக்கும் எதிர்பார்ப்போருக்கும் உதவ முன் வராமல் இருப்பது,  குடும்ப கௌரவதுக்கு மாசு பட நடப்பது, குடியும் கூத்துமாக தகாத உறவுகளில் ஈடுபட்டு, நாட்டுக்கும் வீட்டுக்கும் எதிரான செயல்களில் இறங்குவது என இன்றைய சமுதாயத்தில் சிலர் செய்யத் தொடங்கியிருப்பதை எண்ணுகையில் பெரும் அதிர்ச்சி ஏற்படுகிறது.

இவை மட்டுமா, நாளிதழ்களில் தினந்தோறும் 'வெட்டுக் குத்து' கலாச்சார செய்திகள் பெருமளவு இடத்தை பிடித்து வருகின்றன.

'நற்பண்புகளுக்கு முன்னோடியாக வாழ்ந்த நாம், அதை இழந்து அதள பாதாளத்தில் வீழ்ந்து விடுவோமோ...' என்னும் பயம் நம்முள் துளிர் விடத்தான் செய்கிறது.

Friday 20 July 2012

அப்பா! நான் வேண்டுதல் கேட்டு . . .

மந்திர தந்திரங்களிலும் மாயா ஜாலங்களிலும்  நம்பிக்கை வைப்பதனால் நிம்மதியான வாழ்க்கையை நாம் இழக்கிறோம் ...

 நடந்துவிட்ட தவற்றுக்கு சரியான காரணத்தினை கண்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக அத்தவற்றை நிவர்த்திக்கும் வழிமுறைகளை  பட்டியலிடப் பழகவேண்டும். இதற்கு மாறாக மந்திரங்களினால் பலனை எதிர்ப்பார்த்தால் கிடைக்கப்போவது நிம்மதியற்ற நிலைதான்.

மந்திரம் என்பது மற்றவர் நம்மை தந்திரமாக ஏமாற்றிடும் வித்தை. காலம் கடந்து இதை நாம் உணர்வது நமக்கு நல்லதல்ல.

சாமி ஆடுவது, ஆத்தா வந்திறங்குவது போன்றவை கோயிலுக்குப் போய் முறையாக இறைவனை வழிபடத்தெறியாதோருக்கே நிகழ்பவை. காளிக்கோயிலையும் முனீஸ்வரர் கோயிலையும், மதுரை வீரன் கோயிலையும் சென்று பூஜிப்பதோடு நம் நாட்டில் இருக்கும் முருகன் கோயில்களுக்கும், மாரியம்மன் கோயில்களுக்கும், பெருமாள் மற்றும் பிள்ளையார் கோயில்களுக்கும் சென்று சாஸ்டாங்கமாக பூஜிப்பதும் அவற்றின் பின்புலத்தை ஆராய்ந்தறிவதும் நம்மை சீர்படுத்தும்.

இறையுணர்வை வளப்படுத்த சரியான விதத்தில் ஆகம விதிகளின் படி கட்டப்பட்டு பூஜைகள் இடம்பெறும் கோயில்களுக்குச் செல்லவேண்டும். எழும் சந்தேகங்களை கோயில் குருக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். குருமார்களுக்கு எல்லாம் தெரியாவிட்டாலும் ஒரு சராசரி மனிதரைவிட சற்று கூடுதலாக தெரிந்து வைத்திருப்பர். எனவே அவர்களிடம் கேட்டறிவது தப்பில்லை.

சிறு தெய்வ வழிபாடாக தனி நபர் சுய நலன்களுக்காக கட்டப்படும்  கோயில்கள் உண்மை இறையாண்மையை பறைசாற்றாது.  மாறாக அங்கு காலம் கடந்த, நம் சமூகத்துக்கு ஒவ்வாத மத நம்பிக்கைகளே தூபமிடப்பட்டு சாபங்களாக மாறி நம்மை வந்தடையும். கவனம் தேவை. 

ஆடு, கோழி என உயிர்பலி இடப்படுவதும் இது போன்ற சிறு கோயில்களில் தான்.

"அப்பா! நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்!
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்"  என்பது வள்ளலார் வாக்கு. 

உயிர் போகும் இடங்களில் எமன் இருப்பானா அல்லது இறைவனா என்பதை நாம் புரிந்து கொள்ளல் அவசியம்.

இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான். .

"இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான் - அதை 
இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்
பறந்து பறந்து பணம் தேடி
பாவ குளத்தில் நீராடி
இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்"


அமரர் ஊர்தியில், சவப்பெட்டியில் கிடத்தப்படும்வரை பலர் இந்த உண்மையை உணருவதே இல்லை. 

பேரும் புகழும் வந்து வளமாக வாழ்வோர்கூட, ஒரு நாள் வரும் அழைப்புக்கு மதிப்புக்கொடுத்து போயே ஆகவேண்டிய சூழ்நிலை. 

எமன் எதிரே வந்தழைக்கும் போது போய் வருகிறேன் என யாரிடமாவது சொல்ல முடியுமா நம்மால்?   அல்லது "சற்று பொறு என்னுடைய குடும்பதினரிடம் சொல்லிவருகிறேன்" என எமனிடம் தான் பெர்மிஷன் வாங்க முடியுமா?

இருந்தும், இடைபட்ட காலத்தில் எப்படியெல்லாம் இறுமாப்புடன் தாந்தோன்றித்தனமாக செயல் படுகிறார்கள் சிலர்... பிறர் சொல்வதுபோல நல்ல மனதுள்ளவர்கள் வாழ்வது சிறமமானதுதானோ....?

கண் முன்னே தீயவர்களின் அநியாயங்களுக்கு துணை போகும் சிலரின் ஏகோபித்த வாழ்வினைப் பார்ப்பதனால் பாவங்கள் பற்றிய பயம் அற்றுப் போய்விடுகிறதோ...?

எப்படிப்பார்க்கினும் உண்மை ஒன்றே... நாம் விடும் மூச்சுக்காற்றிலிருந்துதான் எவ்வளவு நாள் நாம் உயிர்வாழ்வோம் என்கிறது நம் மதம். அது நிற்கும்போது நாம் எப்படி வாழ்ந்தோம் என்பது தெரிந்து விடும்....

Feng Shui, the ‘Vasthu sastera’ . . .

I have never been at ease to talk about ‘vasthu sastera’ in the past.Its the tamil equivalent for the Chinese fengshui.  I have read many tamil books about it, but still feel reluctant to write anything on ‘vasthu sastera’ for  I believe strongly that  it’s outdated now, not belittling it but being proud knowing well it had accomplished the purpose of why it was there in the first place.For me, it was our ancient way of putting science and maths in use to carry out our everyday life. 

‘Vasthu sastera’ has thaught us how to make use of water, air and sunlight etc the best possible way. And that is all about ‘vasthu sastera’ for me, as I believe we have already replaced all and everything the olden day ‘vasthu sastera’ was supposed to have done. Therefore, for an average person it  offers very little or none at all at this modern day.
For the Tamils in those days, ‘vasthu sastera’ helped in calculating distances and quantity.  It also provided directions without seeing a compass and by just looking at the sun. It determined where the kitchen was going to be based on the path of the air for back then kerosene and wood were used to cook food.  They depended on sunlight and had to find ways to let the sun in to make the house brighter.  We have electricity now.

I laugh at them when they say 'Vasthu sastera will give you more money or business opportunities.'   I would have believed them if they had said ‘goddess mahalaxmi’ would bless me with prosperity.

And the contradictory reasoning goes on.

Besides all these ‘whys & why donts’  there is an alarming boom of self proclaimed ‘vasthu sastera’ experts  now. Though they don’t practice it for themselves, they are ever ready to preach others. They have formula books, charts and diagrams to show what falls where.  These con artists  are a confused lot. They become ‘vasthu sastera’ experts after reading some books  and advertise themselves as qualified experts.

But are they really?  Why then people flock to them to get their services, for which the charges are considered high ? I have just one reason for this... No one wants to be at the wrong side of ‘vasthu sastera’ when buying a house. Their ignorance in what is best for the new house drives them to ‘sweet talking ‘ vasthu gurus, not really checking their background whether  they are genuine or not.  The sorry thing about these new house buyers is that they never realize that vasthu sastera was not even there when they achieved a remarkable point in their life buying a house. Yet, after being successful this far comes the doubts and deviate them from their original "right" formula and start believing things that they should not be.

The funny side is ‘vasthu sastera gurus’ have agents as well to get their customers and pay them handsomely. Hence, the real purpose of this unique thing by our ancestors is defeated. It now becomes a money making business with lots of lies. Indirect threats like ‘bed on this side will make you lose sleep forever’ or ‘if your kitchen is facing this direction, you will struggle to earn for your meals’  or ‘ your water source should be from this side or else you would have ‘gandam’ in water’ or something like these to scare the people. You know what will happen next… and the ‘vasthu sastera experts’ become rich and famous and add on their assets. ( ‘gandam’ = life threatening situations in water, like boating, swimming, flood or any other activities you have to do with water ).
There are so many versions of ‘vasthu sastera’ in the market now. The Tamil, Chinese and English ways are some of them. However those who mix all these and propagate as something new gets higher marks, I was told. The only way we could overcome these fraudsters is by reading about it thoroughly and understanding what it is all about and if we should really want it.

Wednesday 18 July 2012

வெற்றிக்குப் பல்லாயிரம் பெற்றோர். . .


வெற்றிக்குப் பல்லாயிரம் பெற்றோர்,
தோல்வியோ என்றும் அனாதை...

இப்படி ஒரு சொற்றொடர் உண்டு.  1970ம் ஆண்டுகளின் மத்தியில் மலேசியா ஏற்று நடத்திய அனைத்துலக ஹாக்கி போட்டியில் தோல்வி கண்ட இந்தியக் குழு தாயகம் திரும்பி விமான நிலையத்தில் இறங்கியபோது அழுகிய தக்காளியும், முட்டையும் அவர்கள் மேல் வீசப்பட்டதாம்.

அடுத்த நாள் தமிழகத்தில் வெளிவந்த தினசரிகளின் தலைப்புச் செய்தி இது.
படித்த ஞாபகம்.

வெற்றியை மட்டுமே கொண்டாடி பழகிப்போன மக்களுக்கு தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதி என தெரியாமல் போய்விட்டது. 

இதுதான் மனித மனம். எல்லோரும் ஏதாவதொரு எதிர்ப்பார்ப்புடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதிலும் வெற்றி பெற்றுவிட்டால் நமக்கு கிடைக்கும் மரியாதையே தனி.

விளையாட்டில் மட்டுமல்ல, தொழில், நண்பர்கள், உறவினர்கள் இப்படி எல்லா வட்டத்திலும் வெற்றியாளர்களே போற்றப்படுகிறார்கள். இதிலிருந்து நிச்சயமாக தெரியும் ஒன்று, உலகம் வெற்றியாளர்களையே விரும்புகிறது...

பல சோதனைகளையும் தியாகங்களையும் தாண்டிய பின்பே சாதனைகள் வரும் என்பது பொய்யல்ல. எந்த ஒன்றிலும் நம்முடைய கடப்பாடும், காரியத் திறனும் கூடும்போது வெற்றி நம்மை நெருங்கி வருகிறது.

மருத்துவ காப்புறுதி அட்டையை பற்றி பேச அங்கும் இங்கும் போகும் போது சில சாதனையாளர்களை சந்திக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைப்பதுண்டு. அந்நேரங்களில் அவர்களிடம் அவர்களின் வெற்றிக்கான முக்கிய காரணங்களைப்பற்றி கேட்கும்போது போது தெரிந்து கொண்டவை இவை.

அவற்றில், எல்லோரையும் போல நாமும் இருக்காமல் சற்று மாறுதலாக சிந்தித்து செயல்படவேண்டுமென்பதும், நாம் செய்கின்ற எதுவும் நம்முடைய இலக்கை நோக்கியே இருக்கவேண்டுமென்பதும், சாதனையாளர்களின்  வாழ்க்கை அனுபவங்களை கூர்ந்து நோக்கி அவற்றில் இருந்து தங்களுக்கு பயன் தரும் நற்பண்புகளை கிரகித்துக்கொள்வதும் முக்க்யமானவைகளாகும்.

ஊக்கம் கொடுத்துக் கூட்டிச்செல்வோர் அருகில் இருந்தால் சற்று ஆறுதல் என்பது உண்மைதான். ஆயினும், நாம் அடையப்போகும் இலக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்திலும், முன்னுறிமையிலும்தான் இருக்கிறது.

இதை உணர்ந்துவிட்டால் வெற்றி நம்மோடுதான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பலரின் தொடர் வெற்றிகளுக்கு அவர்கள் அதன் சூட்சுமத்தை தெரிந்துகொண்டதே காரணம்.


Mas Landing. . .





புத்ராஜெயாவின் அழகிய கட்டிடங்கள்...






Sunday 15 July 2012

தன்னம்பிக்கை. . .

எல்லா பொருள்களுக்கும் தயாரிக்கப்பட்ட நாளும் உபயோகப்படுத்தக்கூடிய கடைசி நாளும் இருக்கும்.  காலாவதியாகும் நாளுக்குள் அந்தந்த பொருட்களை உபயோகப்படுத்திவிட வேண்டும். இல்லையேல் அப்பொருள் பயனற்றதாகி விடும்.

மனிதர்களுக்கும் அப்படியே, முதலும் முடிவும் உண்டு.

ஆனால் ஒன்று, பிறந்த நாள் தெரிந்திருக்கும் நமக்கு போகும் நாள் தெரியாது.... ஒருவகையில் இதுவும் நன்மைக்கே.

'இன்றே  நம் வாழ்வின் கடைசி நாள் " என்பது போல, நாட்களைத் தள்ளிப் போடாமல் நல்லவற்றை உடனே செய்து முடிக்கலாம் என தன்முனைப்புத்தூண்டல் பயிற்சியாளர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
தன்னம்பிக்கையை வளர்க்க சொல்லப்படுவது  இது.

"மலையையும் தூக்கலாம், மனமிருந்தால். மனமில்லையேல், ஒரு புல்லைத் தாண்டும் திறனும் இருக்காது" என பெரியோர் அடிக்கடி நமக்குச் சொல்லித்வருவது நமக்கு தன்னம்பிக்கை வருவதற்கே.

நம்மிடம் உள்ள ஆற்றலை அடையாளம் கண்டு செயல் வடிவம் தருவதே  தன்முனைப்புத் தூண்டல்  நிபுனர்களின்  குறிக்கோள். இவர்களின் பட்டறையில்  உத்வேகமும், உந்துதலும் தன்னம்பிக்கைக்கு எவ்வளவு  அவசியம்  என்பதனை சொல்லித்தருகிறார்கள்.

 எந்த ஒரு நல்ல விசயத்தையும் ஒரு சிறு தூறல் போல துவங்கி பின் பெரும் மழைபோல தொடரும் வழக்கத்தை தர வல்லது நம்முள் புதைந்திருக்கும் இந்த தன்னம்பிக்கை எனும் தீபம். இதனால் சலைக்காமல் போராடும் குணமும் இயல்பாகவே வந்திடும்.

சின்ன சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் மனம் உடைந்து போவோர் நிறையவே இருக்கிறார்கள். குடும்பத்தகறாறு, நோய்கள் வந்துவிட்டதே எனும் மன உளைச்சல், கடன் தொல்லை.. இதுபோன்ற பல காரணங்களுக்காக  விரக்தி அடைகிறார்கள்.

இவற்றை சரியான முறையில் எதிர்கொண்டு நடக்கத் தூண்டுவதே 'தன்னம்பிக்கை'. எல்லாப் பிரச்சினைக்களுக்கும் ஒரு தீர்வு நிச்சயம் உண்டு என எண்ணத்தூண்டும் உணர்வு இது.

நம்பிக்கையுடையோர்  மனம்  தளர்வதில்லை. கீழே விழுந்து விட்டோமே என கண் கலங்கி கிடப்பதில்லை.  மீண்டும் எழத்தொடங்கி விடுகின்றனர்.  இதுவே நம்பிக்கை உள்ளோருக்கும் இல்லாதோருக்கும் இருக்கும் வித்தியாசம்.

மனிதனாக பிறப்பெடுத்த நாம் அனைவரும் ஒருவகையில் வெற்றியாளர்களே. இது அறிவியல்பூர்வமாக கண்டறியப்பட்ட உண்மை.

நேற்று ஜெயித்தோம்...இன்று ஜெயித்துக்கொண்டிருக்கிறோம்... நாளையும் ஜெயிப்போம். இதுதான் தன்னம்பிக்கை உள்ளோரின் தாரக மந்திரம்.

என்னால் முடியும்...
உங்களால் முடியும்...

நம்மால் முடியும்!!!

மோரிப் கடற்கரையில் . . .












ஒரு மாலை நேரத்தில் சுபத்திராவும், கஸ்தூரியும் கடலோர அலைகளில் கால்களை நனைத்தவாறு நடந்து வருபோது எடுத்த படங்கள் மேலே...

Putrajaya Sentral. . .



Electric Rail Link (ERL) ... from KL Sentral to KLIA in 28 minutes.

Friday 13 July 2012

குறையும் நிறையும். . .

சிலர் சரியாக தங்களுடைய கடமைகளைச் செய்கிறார்களோ இல்லையோ, அடுத்தவர்களின் குறைகளை தினமும்  சுட்டிக்காட்ட தவறுவதில்லை.  நேரடியாக இல்லாவிட்டாலும், மற்றவர்களின் தவறுகளை 'ஸூம்' பண்ணி பெரிது படுத்தி அடுத்தவர்களிடம் தங்களின் கண்டுபிடிப்புகளை சொல்லி யாரையாவது மட்டம் தட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

வெறுப்பின் அடையாளம் இது.

எப்படி வருகிறது இந்த வெறுப்பு; இதன் முக்கிய காரணங்கள் என்னவென்று பார்த்தோமானால் அவை மிகச் சாதாரணமாகவே படும்.

நம்மால் செய்ய இயலாததை பிறர் செய்யும் போது தோன்றும் ஆதங்கமே இப்படி வெறுப்பாக மாறுவதாக அனுபவப்பட்டோர் கூறுகின்றனர்.

 நிஜத்தில் நாம் இப்படி இல்லை. நம்மைச்சுற்றியுள்ள சந்தர்ப்ப சூழ்நிலைகள், வலுக்கட்டாயமாக் திணிக்கப்படும் எண்ண அதிர்வுகளே நம்மை இப்படி சலிப்படையச் செய்கின்றன. அதுவும் இன்னொருவர் செய்து பெயர் வாங்கும் போது, அவர்மேல் வெறுப்பு உண்டாகி அவரின் செயலில் உள்ள குறைகளை அலசத்தொடங்கிவிடுகிறோம்.

'இமேஜ் ஓவர்லோட்' எனச் சொல்வார்களே, அது போல கண்டதையும் வரைந்து தள்ளும் வித்தையில், ஆட்களையும் மிருகங்களையும் பார்த்துப் பழகியோருக்கு, வெறும் கோடுகளினால் உறுவான  ஒன்று ஓவியமாகத் தெரிவதில்லை. அது அவர்களுக்கு கிறுக்குத்தனமாக தோன்றுவதில் வியப்புமில்லை.

ஆனால், அதுவே பின்னர் 'மோடர்ன் ஆர்ட்' ஆக கலை உலகில் புகழ்பெறும்போது அதை உணர்ந்து பாராட்ட வேண்டுமேயின்றி அதை வெறுக்கக்கூடாது.

இதற்கு நம்மை நாம் சற்று மேலே உயர்த்திக்கொள்வது முக்கியம்.  இது சாத்தியமானால், நாம் நம்மை நெறிபடுத்தத் தொடங்கிவிட்டோம் என்று பொருள். அடுத்தவர் குறைகளை மட்டுமே பார்த்திருந்த நமக்கு அவர்களின் நிறைகளும் இனி தெரியத்தொடங்கும்.

Wednesday 11 July 2012

ஓவியங்களும் ஓவியர்களும்...

கோயில்களில் உள்ள சிற்பங்களின் மேல் வர்ணம் தீட்டும் வேலை செய்பவர்கள் இப்போது தங்களை ஓவியர்கள் எனக் கூறிக்கொள்கிறார்கள். அது ஒன்றும் அப்படி பெரிய தவறாக இல்லாது போனாலும், "ஓவியர்கள்" எனும் பட்டியலின் கீழ் அவர்கள் வரலாமா என்பதில் ஒரு சின்ன நெருடல்.

வலைத்தளங்களில், மாத, வார, நாளிதழ்களில் வெளிவரும் பல தரமான ஓவியங்களை பார்த்துப் பழக்கப்பட்டவன் நான். போட்டிக்கு அனுப்பப்படாவிட்டாலும், அவற்றுள் வெளிவரும் பல சித்திரங்கள் வெற்றிப் படைப்புகளாகவே எனக்குப் படும். அதேபோன்று, கோயிற் சிலைகளும் சிற்பங்களும் போட்டிகளுக்கு அப்பாற்பட்டவை.

நிஜத்தில், நல்ல பல ஓவியர்களின் படைப்புகள் வெளி உலகுக்கு தெரியாமலேயே இன்னும் இருக்கின்றன. 'பப்ளிசிட்டி' செய்து தன் திறமையை பறைசாற்ற பொருளாதார வசதி இல்லாமலிருக்கலாம். அல்லது, பிறர் கட்டுப்பாட்டில் இருப்பதனால், அவர்களின் படைப்புக்களை விளம்பரப் படுத்த முடியாமல் போகலாம். ஆனால், சில நேரங்களில் நம் கண்ணில் படும் அவர்களின் சித்திரங்கள் குடத்திலிட்ட விளக்கினைப் போல் பலருக்கும் தெரியாமல் போவது கண்டு வருந்தச் செய்கிறது.

பள்ளிக்கூட நாட்களில் நாம் படங்களை வரைந்திருந்தாலும், நம்மில் பலர் இப்போதும் காகிதம் கிடைக்கும் போதெல்லாம்  விளையாட்டாக வரைந்து கொண்டிருப்போம். ஆனால், சீரியஸான முயற்சியில் ஒரு நாள் கூட நாம் எதையாவது வரைந்து பத்திரப் படுத்தி வைதிருக்க மட்டோம். ஓவியம் என வரும் போது பொதுவில் நாம் அணைவரும் நல்ல ரசிகர்களாகவே இன்னும் இருக்கிறோம்.

தற்போது இந்த சித்திரக் கலையில் மாறுதல்கள் வந்துவிட்டன. பல்கலைகழங்களில் இதைப் படிப்போர் இதனூடே 'எனிமேஷன்' எனும் தொடர் கல்வியையும் கற்று கை நிறைய பணம் பார்க்கிறார்கள்.

ஓவியங்களை ரசிக்க நுண்ணறிவு தேவை இல்லை என்பது என் வாதம். அது நீதிபதிகளுக்கு இருக்கவேண்டிய ஒன்று. கலைக்கூடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சித்திரங்களைவிட அருமையான பல நாம் சாதாரணமாக நேரத்தைப் போக்க படிக்கும் இதழ்களில் வந்து கொண்டிருப்பது சற்று கவனித்துப் பார்த்தால் புரியும்.

அப்படி இருக்க, அசல் ஓவியங்களை படைப்பவர்களை விட அதனை மாற்றியமைப்போரும், அதன் மேல் வர்ணம் பூசுவோரும் சம அந்தஸ்த்து கேட்கும் காலமாக இப்போதிருப்பது என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.






வெப் உலகத்தில் கிடைத்த 'நீர் வர்ணத்தில்' வரையப்பட்ட ஓவியங்கள். என்னைக் கவர்ந்த இவை உங்களையும் கவரும் என்று இங்கே பதிவில் தந்திருக்கிறேன். தமிழ் நாட்டைச் சேர்ந்த திரு சிவபாலன் அவர்களின் சித்திரங்கள்.

Tuesday 10 July 2012

வந்து போய்விட்ட மலர்க் கண்காட்சி 2012...

வருகிறது வருகிறது, புத்ராஜெயா மலர் கண்காட்சி இதோ வருகிறது... என சொல்லி முடிப்பதற்குள் அது வந்து சென்று விட்டது.

ஆயிரக்கணக்கில் மக்கள் வந்திருந்தாலும், நம்மவர்கள் சற்று குறைவாகவே வந்திருந்தது தான் மனவருத்தமாக இருந்தது.

மலர் என்றால் முன்னனியில் இருப்பவர்கள் நாம். தினமும் பூஜைக்காக மலர் வாங்குவதில் அதிகம் செலவழிப்பவர்கள் நாம் என்றே நினைக்கிறேன். இருந்தும் இனாமாக அரசாங்கம் ஏற்று நடத்தும் இது போன்ற பிரமாண்டமான கண்காட்சிகளை நாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து சென்று ரசிப்பதில்லை.

குடும்ப மகிழ்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் இது போன்ற மனதை கவரும் இடங்களுக்கு போய்வருவது சிறப்பு சேர்த்திருக்கும். பலர் ஏனோ இதை அலட்சியம் செய்துவிடுகின்றனர்.

ஒன்று தெரியுமா...?

ஆழ்மனதுக்கு கூட விடுமுறையும் அமைதியும் வேண்டும். அப்போதுதான் அது எல்லா நேரங்களிலும் சரிசமமான மனப்போக்குடன் உங்களை கொண்டு செல்லும்; சரியான முறையில் உங்களின் திட்டமிடலையும், சிந்தனை போக்கையும் வழி நடத்தும். பலர் இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டனர்...

ஜூன் 30 தொடங்கி ஜூலை 8 வரை நடந்தேறிய 2012க்கான புத்ராஜெயா மலர் விழாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருக்கின்றனர். வெளி நாட்டிலிருந்தும் பல சுற்றுலா பிரயாணிகள் இதைக்கண்டு களித்திருக்கின்றனர்.

பலவித பூக்களின் அமர்க்களமான பூந்தோட்ட வடிவமைப்புகளுடன், ஒவ்வொரு இரவும் அலங்கரிக்கப்பட்ட மலர்ப் படகுகளின் அனிவகுப்பும், வான வேடிக்கைகளும் இடம்பெற்று மக்களின் மனதைக் கவர்ந்தது.

வழக்கமான பூக்களான மல்லிகை, சம்மந்தி, ரோஜா, ஹெலிகோனியா, ஒர்க்கிட் போன்றவற்றோடு, இவ்வாண்டின்  ஸ்பெஷலான 'காதிதப்பூவும்'  பிரமாதப்படுத்தப் பட்டிருந்தது....

இந்தமுறை, கடைசி மூன்று நாட்களில் சில உறவினர்களும் நண்பர்களும் எங்களோடு சேர்ந்து இந்த மலர்த் திருவிழாவை வலம் வந்து ரசித்தது பல நாள் நினைவில் நிற்கப்போகும் மகிழ்ச்சியான அம்சமாகும்.

மீண்டும் 'ஃபிளோரியா 2013டை' எதிர்பார்த்து காத்திருப்போம். அடுத்த ஆண்டு, "ஒர்க்கிட்" பிராதான மலராக அறிவிக்கப்பட்டிருக்கிறது...

உனக்கும் எனக்கும் வெகு தூரமில்லை. . .

 உனக்கும் எனக்கும் வெகு தூரமில்லை
 நான் நினைக்காத நேரமில்லை - உன்னை
 நினைக்காத நேரமில்லை


 இனிக்க இனிக்க நீ பேசவில்லை
 என்றாலும் என் நெஞ்சம் மறக்கவில்லை


 உனக்கும் எனக்கும் வெகு தூரமில்லை
 நான் நினைக்காத நேரமில்லை - உன்னை
 நினைக்காத நேரமில்லை


 செல்வ பரம்பரையில் பிறந்தாலும் - அதன்
 சிங்காரப் பிடியில் வளர்ந்ததில்லை
 உள்ளாச உலகத்தில் இருந்தாலும் - நான்
 உழைப்பவர் துயரத்தை மறந்ததில்லை

 மறந்ததில்லை. . .

 உனக்கும் எனக்கும் வெகு தூரமில்லை
 நான் நினைக்காத நேரமில்லை - உன்னை
 நினைக்காத நேரமில்லை


 இரவுக்கு நிலவால் அழகு வரும் -  என்
 இதயம் உன் நினைவால் அமைதி பெறும்
 உயிருக்கு உடலால் பெறுமை வரும் - நம்
 உறவும் ஒரு நாள் புதுமை பெறும்


இடைவேளை இசையாக ஒரு நல்ல பாடலை இங்கே தந்துள்ளேன்...

எதையும் தாங்கும் இதயம் என்னும் படத்தில், சூலமங்கலம் ராஜலட்சுமியின் தேன் குரலில் இடம்பெற்ற பாடல்.  இசை - டி.ஆர். பாப்பா.
இதைப்போல இசை மேதைகளால் அமைக்கப்பட்ட பாடல்கள் ஏராளம் ...

புத்ராஜெயா மலர்க்கண்காட்சியில் எடுத்த புகைப்படங்களை பதிவிடும் நேரம் அவற்றை  ரசித்தவண்ணம் இது போன்ற மென்மையான இசையையும் மனதில் முனுமுனுப்பது எனக்குப் பிடித்த ஒன்று.

Floria 2012 Night of Magic

Floral floats seen at Floria 2012, Putrajaya.