Saturday 30 June 2012

சாண்டில்யன் நாவல்கள். . .






எனக்குத் தெரிந்த சாண்டியல்யன் நாவல்களின் பட்டியல் இவை:
- கடல் புறா ( மூன்று பாகங்கள் )
- யவன ராணி
- ராஜ பேரிகை
- மன்னன் மகள்
- கன்னி மாடம்
- ராஜ முத்திரை
- அலை அரசி
- அவனி சுந்தரி
- சந்திரமதி
- சித்ரஞ்சனை
- இலைய ராணி
- இந்திர குமரி
- ஜல தீபம் (   மூன்று பாகங்கள்     )
- ஜல மோகினி
- ஜீவ பூமி
- கடல் ராணி
- கடல் வேந்தன்
- மலை அரசி
- மலை வாசல்
- மஞ்சள் ஆறு
- மதுமலர்
- மோகன சிலை
- மூங்கில் கோட்டை
- நாக தீபம்
- நீள் விழி
- நீல மங்கை
- பல்லவ திலகம்
- பாண்டியன் பவனி
- ராணியின் கனவு
- ராஜ திலகம்
- ராஜயோகம்
- உதய பானு
- விஜயமகாதேவி (   மூன்று பாகங்கள்  )
- விலை ராணி

இவற்றில் பலவற்றை குமுதத்தில் 1972 முதல் தொடர்கதைகளாக வெளிவரும்போதே படித்து விட்ட ஞாபகம்.  இரண்டு மூன்று முறை படித்த நாவல்களாக கடல் புறா,  ராஜ திலகம், ஜல தீபம்  போன்றவற்றைச் சொல்லலாம்.

சரித்திர கால சூழ் நிலைகளின் பின்னனியில் ஒன்றிரண்டு நிஜ கதாபாத்திரங்களோடு சுவை கூட்டும் வேறு சிலரையும் கற்பனையில் கொண்டுவந்து தான் படைக்கும் நாவல்களுக்கு அழகு சேர்ப்பது இவரது தனித்தன்மை.  கடல் புறா என்னும் நாவலில் கடாரத்தினைப் பற்றியும் எழுதி இருந்தார். கடாரம் என்பது இப்போதிருக்கும்  நமது  'கெடா' மாநிலம் ஆகும்.

சில நாவல்கள் தொடர்கதையாக  வந்ததினாலோ என்னவோ ஒரு அத்தியாயத்திலிருந்து இன்னொரு அத்தியாயத்திற்கு போகும் போது முன் நடந்த ஒரு சிறு குறிப்பு மீண்டும் வரும். வாராவாரம் படிக்கும் குமுதம் வாசகர்களுக்காக இப்படி நடந்த கதையின் குறிப்பு தரப்பட்டது என நினைக்கிறேன்.

இவரின் வீர வசனங்கள் மட்டுமல்ல, காதல் வசனங்களும் உயிர் பெற்று வரும் நம் கண்முன். 

இவரின் படைப்புக்கள் இலக்கியமா இல்லையா என எதிர்தரப்பு எழுத்தாளர்களில் ஓரிருவர் கேள்விகள் கேட்டனர் அன்று. சரித்திர நாவல்களை இலக்கியமில்லை என்று சொன்னால், பண்டைய நூல்களில் பலவற்றை இலக்கியமாக கொள்ள முடியாதே என பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, 'மகா மேதைகள்' என தங்களை நினைத்திருந்தோர் வாய் மூடி மௌனிகள் ஆயினர்.  சுமார் 45 ஆண்டுகள் ஆகியும் அவரது பெயர் இன்னும் பிரபலமான ஒன்றாகத் திகழ்வதிலிருந்து அவரின் படைப்புக்கள் மக்களின் மனதில் நிறந்தர இடம் பிடித்து விட்டதை சொல்லியா தெரிய வேண்டும்....??

காதலுக்கு ஒரு மஞ்சளழகியும் வீரத்திற்கு ஒரு அகுதாவும் இன்னும் என் கண்முன்னே  நிற்கிறார்கள்.



புத்ராஜெயா மலர்த்தோட்டம் 2011. . .

For the next one week, Putra Jaya will be a hive of activities in terms of visitors from all over Malaysia for Putrajaya's own  flower and garden show 2012, "Bougainvillea - Enduring Beauty"

Today, Im posting some of the photos of how it was last year ( 2011 ) for which "ROSES ARE FOREVER..." was the theme.

Mr. Sam's family was with us then.



























பஞ்சநிவாரணி ஸ்பெஷல்...




தவற்றில் இருந்தும் கற்றுக்கொள்ளலாம். . .


"மறைந்திருந்தும் பார்க்கவில்லை, இதில் ஒரு மர்மமும் இல்லை..."

'க்லோஸ் அப்' எடுப்பது எப்படி என்று சொல்லிக்கொடுத்தபோது  நண்பர் ஒருவர் எடுத்தது இது. 'டிரையல் அன்ட் எரர்" எனும் தவறு செய்து அதில் இருந்து கற்றுக்கொள்ளுவதென்பது மனிதர் வாழ்வில் நிகழும் இயற்கையான ஒன்று.

ஆபத்து இல்லாத மிகச் சாதாரன சூழலில் இப்படி செய்யும் தவறுகளினால் பெரிய பாதிப்பாக எதுவும் நடந்துவிடுவதில்லை. ஆனால், இது எல்லாக் காலத்துக்கும்  இது பொருந்தாது. தவறே செய்ய முடியாத, செய்யக்கூடாத சந்தர்ப்ப சூழ்நிலைகளும் நம் வழ்வில் வரும். அங்கே.... அந்த நேரம்.. இப்படி "டிரையல் அன்ட் எரர்" மூலம் பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்க முடியாது. அப்படிச் செயதால் சில நேரங்களில் பாதிப்பு மலை அளவு பெரிதாகிவிடும்.

இப்போது பலரும் பாராட்டும் 'இரட்டை புகைப்படங்களை" எடுக்க நான் செய்த தப்புகளும் தவறுகளும் சில நூறு வெள்ளிகளை விழுங்கிவிட்டன. பல நாள் முயற்சிக்குப் பின் ஒரு நாள் மூளையில் உதித்த யுக்தியே பின்னர் பலரும் விரும்பும் புகைப்படங்களை எடுக்கச் சொல்லித்தந்தது. அதுவும் அன்றைய காலத்தில் கணினிகள் இல்லை.

Tuesday 26 June 2012

பிடித்த நடிகர் திலகம் படங்கள். ..


நடிகர் திலகம் சிவாஜியின் அபாரமான நடிப்புக்கு உதாரணமாக பல படங்களைச் சொல்லலாம். அவற்றில் எனக்குப் பிடித்தவை பல. மேலே உள்ள காட்சி 'வானம்பாடி' எனும் திரையில் உள்ளது. எதிர்பாராவிதமாக சொல்லக்கூடாத ஒரு ரகசியத்தை அவர் தன்னையறியாமல் சொல்லிவிட்டு உண்மை தெரிந்தவுடன் அது பற்றி எண்ணித்துடிக்கும் ஒரு காட்சி இது. நல்ல இனிமையான பாடல்களைக்கொண்ட படம் "வானம்பாடி".

Monday 25 June 2012

அன்றும் இன்றும்...


Rajpow...combo pix...

அன்று என்னைத் தாலாட்டி தூங்கவைத்த பல பாடல்களுள் இதுவும் ஒன்று. இசையும் வார்த்தைகளும் கேட்போர் உள்ளத்தை கொள்ளையிட்டுச்சென்ற,  காலத்தால் அழிக்கமுடியாத பாடல் இது...

"தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு"

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச
உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவை என்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

யாரென்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டு தடுத்தாலும் நில்லாது
தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி
நாம் காணும் சுகமென்று ஒன்று


(தூங்காத கண்ணென்று ஒன்று...)

வெகுதூரம் நீ சென்று நின்றாலும்
உன் விழி மட்டும் தனியாக வந்தாலும்
வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று


(தூங்காத கண்ணென்று ஒன்று...)

அதே போன்ற இனிமையை தரும் பாடல்கள் இன்றும் ஒன்றிரண்டு வந்த வண்ணம் தான் இருக்கின்றன. அவற்றுள் என்னைக் கவர்ந்தது பின் வரும் பாடலாகும்...

"நிலவு தூங்கும் நேரம்
 நினைவு தூங்கிடாது
 இரவு தூங்கினாலும்
 உரவு தூங்கிடாது
 இது ஒரு தொடர்கதை
 தினம் தினம் வளர்பிறை
 நிலவு தூங்கும் நேரம்...."

நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நான் உன்னை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்
நான் இனி நீ… நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே


(நிலவு தூங்கும்…)

Sunday 24 June 2012

Pow. . .


After mastering the art of taking "doubles" and "3D", I tried something new and different.
However  from the photo above I  know that it didnt work out well...

Never Understood Before...


விளம்பரதாரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது...

Chess 3 - Hundred yrs of FIDE

coming soon...

Dengkil in photos. . .