Wednesday 20 June 2012

மானசரோவர்...

பார்த்தோர் பரசவப்படும் ஓர் இடம் என வந்து சொன்னவர்கள் பலர். அப்படிப் பிரமாதமாக பேசப்படும் அந்த இடம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டேன்.


மானசரோவர்...

இணையதளங்களில் தேடியபோது, நமது பிள்ளையாரும் முருகனும் அவதரித்தது அங்கிருக்கும்  'மாந்தாதா' மலையில் என அறிந்ததும் மனதில் ஒரு மகிழ்ச்சி.


300கிமீ பரப்பளவு X 300 அடி ஆழம் X 1500 அடி உயரம் என உலகத்திலேயே உயரமான தூய தண்ணீர் ஏரியாம் இந்த மானசரோவர்.

கைலாஷ் மலையின் எதிரே இருக்கும் இதை, வார்த்தையில் விவரிக்க முடியாத அற்புதம் என்கின்றனர்  நேரில் சென்று கண்டு எழுதியவர்கள்.

புராணத்தில் இவ்விடம் எப்படி பேசப்படுகிறது என்று வலைப்பக்கத்தில் தேடினேன்....

வசிஷ்ட்ட மகரிஷியும் இன்னும் சில முனிவர்களும் கைலாஷ மலையில் தவம் செய்ய புறப்படுகிறார்கள். அவர்களுக்கு குளித்து நீராடி தவத்தினை தொடங்க தூய தண்ணீர் தேவைப்படுகிறது. பிரம்மாவிடம் கேட்கிறார்கள். அப்படி பிரம்மாவின் பல நாள் கற்பனையில் தோன்றிய தெய்வீக ஏரிதான் "மானசரோவர்". பிரம்மாவின் மனதில் தோன்றியதால் இதற்கு 'மானசரோவர்' என்று பெயராம்.

இன்னொரு சுவாரஷ்யமான ஒன்றையும் படிக்க நேர்ந்தது.
இந்த தெய்வீகமான இடத்தைப் பற்றி முன்பு யாருக்கும் தெரிந்திருக்கவில்லையாம். 'மாந்தாதா'சக்கரவர்த்தி என்பவர்தான் இதை கண்டுபிடித்து உலகறியச்செய்திருக்கிறார். இந்த 'மந்தாதா' சக்கரவர்த்தி வேறு யாருமல்ல, ராமாயண நாயகன் ராமனின் கொள்ளுத்தாத்தாவாம்.

இப்படியாக இங்கு விநாயகக் கடவுள் தோன்றியதிலிருந்து தொடர்கிறது நமது புராணம். நமது தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் சரவணப் பொய்கை இதுதான் என சொல்கிறார்கள்.



வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வோர் பல சிறப்புகள் கொண்ட இந்த  தெய்வீக இடமான "மானசரோவருக்கு" சென்று வருவது  அவர்களுக்கு பல புண்ணியங்களைப் பெற்றுத்தரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.







No comments:

Post a Comment