Tuesday 19 June 2012

படித்ததில் பிடித்தது...

பழைய ஆனந்த விகடனைப் புரட்டிக்கொண்டிருந்தேன். நல்ல ஒரு சுவைத்தகவல் கண்ணில் பட்டது... இங்கே உங்களுக்காக அப்படியே இன்றைய பதிவில் இதோ...

கேள்வி:
மகாபாரதத்தில் ராமாயண அனுமான், பீமனைச் சந்தித்துப் பேசுவதாக வருகிறது. அப்படி என்றால், ராமாயணம்தான் முதலில் தோன்றிய இதிகாச காவியமா?


பதில் :
வரலாற்று ஆதாரங்கள் வேறு, புராண நம்பிக்கைகைகள் வேறு!  முதலாவதன்படி ராமர் வாழ்ந்த காலம் ( வேத காலத்துக்குள் பொருந்துகிறது. கி.மு 1400 அல்லது 1450. அதாவது பாபிலோனிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் பிற்பாடு என்கிறார்கள் வரலாற்று தொல்பொருள் ஆய்வாளர்கள்.  மகாபாரதப் போர் நிகழ்ந்தது கி.மு 900ல் என்று கூறப்படுகிறது. ( ஆகவே, அனுமார் மகாபாரத காலத்தில் வாழ்ந்திருந்தால், அவருக்கு வயது 500க்கு மேல் இருந்திருக்கும்.)

ராமாயணம், மகாபாரதம் இரண்டுமே சிந்து நதிக்கு மேற்கே நடந்திருக்க வேண்டும். திருடிராஷ்டிரர் காந்தார நாட்டு இளவரசியை ( காந்தாரி ) திருமணம் செய்து கொண்டார். இன்றைக்கும் ஆப்கானிஸ்தானில் காந்தஹார் ஒரு முக்கிய நகரம்.    ஆனால், நாம் மறக்கக் கூடாத ஒன்று....ஆப்கானிஸ்தானம்  முழுவதும் பாரசீக எல்லை வரை அந்தக் காலத்தில் இந்தியாவாகத்தான் இருந்தது.


No comments:

Post a Comment