Monday 25 June 2012

அன்றும் இன்றும்...


Rajpow...combo pix...

அன்று என்னைத் தாலாட்டி தூங்கவைத்த பல பாடல்களுள் இதுவும் ஒன்று. இசையும் வார்த்தைகளும் கேட்போர் உள்ளத்தை கொள்ளையிட்டுச்சென்ற,  காலத்தால் அழிக்கமுடியாத பாடல் இது...

"தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு"

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச
உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவை என்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

யாரென்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டு தடுத்தாலும் நில்லாது
தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி
நாம் காணும் சுகமென்று ஒன்று


(தூங்காத கண்ணென்று ஒன்று...)

வெகுதூரம் நீ சென்று நின்றாலும்
உன் விழி மட்டும் தனியாக வந்தாலும்
வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று


(தூங்காத கண்ணென்று ஒன்று...)

அதே போன்ற இனிமையை தரும் பாடல்கள் இன்றும் ஒன்றிரண்டு வந்த வண்ணம் தான் இருக்கின்றன. அவற்றுள் என்னைக் கவர்ந்தது பின் வரும் பாடலாகும்...

"நிலவு தூங்கும் நேரம்
 நினைவு தூங்கிடாது
 இரவு தூங்கினாலும்
 உரவு தூங்கிடாது
 இது ஒரு தொடர்கதை
 தினம் தினம் வளர்பிறை
 நிலவு தூங்கும் நேரம்...."

நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நான் உன்னை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்
நான் இனி நீ… நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே


(நிலவு தூங்கும்…)

No comments:

Post a Comment