Wednesday 20 June 2012

புத்ராஜெயா 'கொன்வென்ஷன் சென்டர். . .'

புத்ராஜெயாவில் பார்க்க வேண்டிய இடங்கள் பல. அதில் ஒரு அழகான இடம், 'கொன்வென்ஷன் சென்டரைச்' சுற்றியுள்ள இடமாகும்.

காலையிலும், மாலையிலும் பலர் இங்கே மெதுவோட்டத்தில் ஈடுபடுகிறார்கள். வயதானவர்கள் சிறு நடையாக நடந்து தங்கள் நேரத்தை செலவிடுவதுடன் கண்ணுக்கு அழகாகத்தெரியும் காட்சிகளை பார்த்து ரசிக்கிறார்கள்.

கீழே உள்ள படங்கள் அந்த அழகில் ஒன்றிரண்டைக் காட்டுவதைப் பார்க்கலாம்...

பல கிலோமீட்டர்களுக்கப்பால் இருந்து பார்த்தாலும் இந்த கொன்வென்ஷன் சென்டர் நம் கண்களிலிருந்து மறையாது.


எதிர்ப்புறம் இருக்கும் பாலத்தின் மேல் நின்று பார்க்கும் போது தூரத்தே இருக்கும் கட்டடங்களின் தோற்றம்.

ஆகாயம் தெளிவாக இருக்கும் நாளில் பல கி.மீ ஆப்பால் உள்ளதையும் நாம் பார்க்க இயலும்.

இங்கே பூ மரங்களும் நிழல் மரங்களும் நிறையவே உண்டு.

 நாம் ஓய்வெடுக்கவும் தனிப்பட்ட சில இடங்கள் இங்கே உண்டு.

புத்ராஜெயாவின் மையப் பகுதியிலிருந்து கொன்வென்ஷன் அரங்கிற்கு செல்லும் சாலையில் இருக்கும் பாலம் இது. வெளி நாட்டுப் பயணிகள் இங்கு வந்து சுற்றி உள்ள அழகை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

பல ஆயிரம் பேர் கொள்ளக்கூடிய அழகிய மசூதி பின்புறம். அதற்கு முன்னே, மிக விரைவில் வர இருக்கும் ரயில் பாதையின் பாலம்.


செயற்கை முறையில் தோண்டப்பட்ட ஏரி இது. இயந்திர படகுகள் அவ்வப்போது இங்கும் அங்குமாக போய்வருவது அழகுக்கு அழகு சேர்க்கும் ஒன்றாகும்.

செயற்கை ஏரியின் எதிர் பக்கத்தில் இருந்து எடுக்கப் பட்ட படம்.

சில தமிழ் சினிமாக்களில் நாம் பார்த்து ரசித்த புத்ராஜெயா பாலம். அதன் முன்னே இருக்கும் சம தரையில் பல படங்களின் பால்களும் எடுக்கப்பட்டுள்ளன.

காலை மாலை என இல்லாமல் எந்த நேரத்திலும் போய் ஓய்வெடுக்கும் இடம் இது. வெயிலின் போது மர நிழல் நமக்கு ஆதரவு தருகிறது. 

மதிய நேரங்களில் சிலர் உணவுப் பொட்டலங்களுடன் இங்கே வந்து உணவருந்திவிட்டும் செல்கின்றனர். 

அழகிய வேலைப்படுகளுடன் அமைந்த பாலத்தின் பாலத்தின் இடப்பகுதி. 

பாலத்தின்   வலப்பகுதி. 

அழகுக்காக கட்டப்பட்ட இன்னொரு பாலம்.


No comments:

Post a Comment