Friday 29 November 2013

அசத்தல் படங்கள்...மிரட்டும் செய்திகள்...

கேரளாவில் குடித்துவிட்டு குப்புறக்கிடந்த ஒருவரை மலைப்பாம்பு ஒன்று விழுங்கியதாம்....




வேலையின் போது முழுக்கவனமும் பாதுகாப்பும் அத்தியாவசியம் என ஏன் சொல்கிறோம்....


அடடா.... நாம் எங்கெல்லாம் இருந்திருக்கிறோம்...



கொலை கொள்ளை குறைய, தமிழ் நாட்டில்  ஒரு காவல் நிலையத்தில் யாகம் வளர்த்து பூஜை செய்தனர் கடந்த இரு வாரங்களுக்கு முன் ஒரு நாள்...



இடம் பொருள் ஏவல்...என ஏன் சொல்லி வைத்தார்கள்...  யோகா எனும் பெயரில் நமது கலை கலாச்சாரத்தை நடு சாலையில் அமர்ந்து கலங்கப் படுத்தும் மேல் நாட்டினர் எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. மலிவு விளம்பரத்துக்காக இருக்குமோ.



வாழ்க்கை ஒரு வட்டமாம்,
எங்கு தொடங்கியதோ அங்கு முடியுமாம்...



அனைத்துலக மார்பக புற்று நோய் விழிப்பு நிலை பிரச்சாரத்தில் மலேசியாவும் தனது பங்கினைச் செய்தது... தலைநகரின் இரட்டைக்கோபுரம் இளஞ்சிவப்பு நிறத்தில் மாலை 7லிருந்து நடு நிசி வரை பிரகாசித்தது, அக்டோபரில் ஒரு நாள்.



கோணல் முகங்கள் தோல்வியின் ஒப்புதலோ...



 நம்மை நாம் அறிவோம்...



வாடிக்கிடக்குது மீனும் சோறும்,
வந்து சாப்பிட ஆளைத்தான் காணோம்...


ஸ்ரீ பெருமாள் ஆலய கும்பாபிஷேக மலர்...























நன்றி உள்ளது நாய்...



இனிப்பு நீர் அல்லது நீரிழிவு நோய்...

டையபீட்டிஸ் என எல்லோருக்கும் நன்கு தெரிந்த பெயரில் உலா வரும் உயிர்கொல்லி நோயான நீரிழிவு மற்ற கால கட்டங்களில் இல்லா  அசுர வேகத்தில் பலரையும் தாக்கி வருகின்றது தற்போது.

"நல்ல வேளை அது எனக்கு இல்லை..."
என நாம் சொல்ல முடியாத சூழ் நிலையில் இருக்கிறோம்.

இன்றில்லாவிடினும், நாளையே நம்மை அது தாக்கலாம். அதன் அறிகுறிகள் இன்று நமக்குத் தெரியாது போனாலும், மிகவிரைவில் நம்மை மறைந்திருந்து தாக்கும் வல்லமை அந்த நீரிழிவு  நோயின்  அறிகுறிகளுக்கு உண்டு.

மிக முக்கியமான அறிகுறிகளாக நாம்  தெரிந்துகொள்ள வேண்டியவை மூன்று:
   -   போலியூரியா... அடிக்கடி சிறு நீர் கழிப்பது,
   -   போலிடிப்சியா... அடிக்கடி அதிகமாக தாகமெடுப்பது,
   -   போலிஃபாகியா...அடிக்கடி அதிகமாக பசியெடுப்பது....
இவை ஒன்று சேரும்போது நிச்சயமான நீரிழிவு அறிகுறிகளாக கணிக்கப்படுகிறது.

நமது வாழ்க்கை முறை சீராக இருந்தாலும், நமது முன்னோர் விட்டுச்செல்லும் சில சொத்துக்களில் நீரிழிவு நோயும் ஒன்று என இப்போது பலரும் ஏற்றுக்கொண்டு வருகின்றனர். அவர்களின் மரபணு வழி சிலர் பாதிக்கப்படுகிறார்கள்.

பொதுவாக மூன்று சாரார்களுக்கு இந்நோய் வர வாய்ப்புக்கள் அதிகம் உண்டு...
   -   பரம்பரையில் யாருக்காவது இருந்திருந்தால்
   -   உடல் பருமனாக இருப்போர்
   -   45 வயதுக்கும் மேற்பட்டோர்

எனவே, நீரிழிவு நோயினைப் பற்றிய விழிப்பு நிலை நமக்கு மிக மிக அவசியம். புதிதாக ஏதும் சொல்வதை விட ஏற்கனவே வெளியிடப்பட்ட நீரிழிவு நோயினைப் பற்றி நாம் கவனிக்க வேண்டியதனை இங்கே சில விளம்பர அட்டைகளில் காண்போம்.... வாருங்கள்.









வைத்தியனுக்குக் கொடுப்பதை வணிகனுக்குக் கொடு என்பார்கள். அதுபோல சத்துள்ள, சரியான உணவுப் பழக்கங்களின் மூலம் நம் தற்காப்பினை வலுப்படுத்துவோம்.  விலை சற்று அதிகம் போனாலும், தரமான உணவுகளில் கவனம் செலுத்துவோம்.

முறையான உடற்பயிற்சி தினமும் தேவை. அதிக வேகம்தான் உடற்பயிற்ச்சி என்றில்லை, ஒரே அளவிலான சீரான நடையே பெரும் பயிற்சியாகும். 

Friday 22 November 2013

ஆனந்தின் சேவை தொடரட்டும்...

விஸ்வ நாதன் ஆனந்த் ஆறாம் முறையாக உலக செஸ் சாம்பியனானக ஆவதில் வெற்றிபெற முடியவில்லை.

 நேரடியாக நாம் பார்த்து ரசித்த அந்த விளையாட்டுப்போட்டிகள்  நிறைவடைந்து விட்டன.

பத்தாவது ஆட்ட சம நிலையினால் கார்ல்சன் 6.5 புள்ளிகள் பெற்று முதன் முறையாக தனது 23வது வயதில் உலக செஸ் சாம்பியனானார்.  கார்லசனைப் பாராட்டும் அதே நேரம், ஆனந்தின் தோல்வியைப் பற்றி நாம் பெரிது படுத்தத் தேவையில்லை.

ஐந்து முறை சாம்பியனாக வாகை சூடி இருப்பதே மற்றவர்களால் அவ்வளவு எளிதில் முறியடிக்க முடியாத சாதனையாகும்.  அதற்காக நாம் பெருமைப்படத்தான் வேண்டும்.

ஆனானப்பட்ட ரஷிய வீரர்களான கர்பாவ், கஸ்பராவ் போன்றோரே ஓரிரு முறை இந்த சாம்பியன்ஷிப்பை வென்றதோடு தோல்வியை தழுவி இருக்கும் போது, ஐந்து முறை சாம்பியனான ஆனந்த் எந்த வகையிலும் வருந்தத் தேவையில்லை.

இந்தியா மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் அனைவரும் வாற்றமுற்றோம் அவர் வெற்றியடையாதது கண்டு.  ஆன்மீகம்  சொல்வது போல இதுவும் கடந்துபோம்...

ஆயினும் ஆனந்த் அவ்வளவு எளிதில் அனைத்துலக போட்டிகளில் இருந்து விலகிவிடுவார் என எண்ணமுடியவில்லை. வெளி நாட்டினர் இதுபோல் மாறுபட்ட கருத்தினைக் கொண்டிருந்தாலும் இன்னும் பல போட்டிகளில் ஆனந்த் கலந்துகொண்டு, அவற்றில் வெற்றி பெற்று  இளையோருக்கு  ஓர் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்றே நம்மில் பலரும் எதிர்பார்க்கிறோம்.

தமிழக முதலமைச்சர் தொடக்க நிலை பள்ளிக்கூட அளவில் செஸ் ஆட்டத்தினை அறிமுகப்படுத்தி இருப்பதானது, அவரின் தூர நோக்குச் சிந்தனைக்கு புகழ் சேர்க்கும் ஒன்றாகும்.  எல்லா முதலமைச்சர்களுக்கும் இப்படித் தோன்றுவதில்லை.

அறிவியல்பூர்வமாக குழந்தைகளுக்கு "செஸ்" நல்ல சிந்தனை வளத்தினை அளித்திடும் என கற்றறிந்த அரிஞர்களும், விஞ்ஞானிகளும் சொல்லிடும்போது, அதை தேசிய அளவில் பள்ளிகளில் இடம்பெறச் செய்வதில் "அம்மா" முந்திக்கொண்டார் எனத்தான் பெருமைப்படவேண்டி இருக்கிறது.

அவரின் முயற்சிக்கு உந்துதலாக இருக்கும் விஸ்வநாதன் ஆனந்த் இன்னும் பல போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துவோம் வாருங்கள்

Thursday 21 November 2013

சபதங்களும் சாபங்களும்...

இன்றைய வெகு விரைவான வாழ்க்கையில் சபதங்களும் சாபங்களும் புராண காலத்தில் இருந்ததை விட அதிகம் இருப்பதாகவே தோன்றுகிறது.

பொதுவில் பாதிக்கப்படுவோரின் ஆளுமையினை வெளிப்படுத்தும் வார்த்தைகளாகவே இவ்விரண்டும் இருக்கின்றன.

அதிகப்படியான கோபம், அதிகப்படியான பாதிப்பு அல்லது இவற்றினால் ஏற்படும் விரக்தியே ஒருவர் சபதமிடவும், சாபமிடவும் காரணமாகிறது.

ஆயினும் சாதாரணமாக ஏற்படும்  சண்டையில் வெளிவரும் சுடுசொற்களும், கடும் வார்த்தைகளும் சாபங்களாகாது.
" நீ நல்லா இருக்க மாட்டே...
நாசமா போவ..."
என்பது போன்ற வார்த்தைகளுக்கு அது போன்ற சூழ்நிலைகளில் சக்தி இல்லை" என்கிறார் " மனிதவியல் மாற்றங்கள்"எனும் புத்தக ஆசிரியர், எனது நண்பர் திரு இளவரசு அவர்கள். "ஒருவரின் ஆத்திரம் சாபமாகிவிடாது. அது சாபமாக, அவருக்கு இறையருள் வேண்டும்".

நண்பர் சொல்வதைக் கேட்க சற்று ஆச்சரியமாக இருந்தாலும், புராணங்களை நினைத்துப் பார்க்கையில், தவத்தில் வலிமை வாய்ந்த மகான்களும், மகரிஷிகளுமே சபிக்கவும், சாபமிடவுமாக இருந்திருக்கின்றனர் என்பது உண்மையாகப் பட்டது.  அதில் ஒரு நியாயம் இருப்பதாகவும் தோன்றியது. ஞானமில்லையேல் கோபம் எல்லை மீறும் அனைவரும் தங்கள் இஷ்டத்துக்கு சபிக்கத் தொடங்கிவிடுவார்களே....

ஆக, தவ வலிமை மிக்கவர்களிடம் ( அல்லது வயதில் மூத்தோரிடம் ) சற்று நாவடக்கத்துடன் நடந்து கொள்வது நன்மை பயக்கும், நம்மை பல வம்புகளிலிருந்து காத்திடும் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

சாபம் அழிக்கும் குணத்தினை இலக்காகக் கொண்டிருந்தால், சபதம் சாதிக்கும் தன்மை கொண்டதாக இருப்பதைக் காணலாம்.  அங்குமிங்குமாக ஓரிரு இடங்களில் " நெகட்டிவ்வான" தாக்கத்தை சபதம் செய்வோர் காட்டியிருக்கின்றனர், பாஞ்சாலி சபதம், கண்ணகி சபதம் போன்றவற்றை உதாரணங்களாகச்  சொல்லலாம். விபரீதங்கள் அதிகமிருந்தாலும், தீர்க்கதரிசனங்களாக இவை இன்றளவும் பேசப்படுகின்றன.

உணர்ச்சியின் மிகுதியால் " நான் இதைச் செய்வேன், அதைச் சாதிப்பேன் " என நல்ல காரியங்களுக்காக சபதமிடுவோர்தான் அதிகம்.

தங்களின் திட்டமிட்ட, தீர்மானமான முடிவொன்றினை ஊரார் முன் அறிவிப்பதே சபதமாகிறது.

சாபத்துக்கு தவ வலிமை எப்படி முக்கியமோ, அதுபோல சபதத்துக்கு மனவலிமை மிக மிக அவசியம்.  இல்லையேல், வெறும் வாய்மொழி வார்த்தையாக " சவடால் பேர்வழி" என ஒருவரை முத்திரை குத்தி அடையாளம் காண மட்டுமே பயன்படும்.


உலக செஸ் சாம்பியன் போட்டிகள்.... 10வது சுற்று

6 புள்ளிகல் பெற்று ஒரே ஒரு சம நிலை ஆட்டத்தினை எதிர்பார்த்திருந்த கார்ல்சனுக்கு அவர் தேடிய அந்த சமன் நிலை புள்ளி பத்தாவது ஆட்டத்தில் கிடைத்தது.

இதனால் 2013 சென்னை ஃபீடே உலக செஸ் சாம்பியன் போட்டியில் கார்ல்சன் 13வது சாம்பியனாக வெற்றியடைகிறார்.