Tuesday 5 November 2013

காரணம் அவை நமது வளர்ப்புப் பிராணிகள்...

மக்களுக்கு வர வர விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், புரிந்துணர்வும் குறைந்து வருகிறது. தற்சமையம் பரவலாக நடக்கும் பல சம்பவங்கள் இதனையே நமக்கு நினைவூட்டுகின்றன.

அவற்றில் மிக முக்கியமானதாக இருப்பது, மிருகங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள்.

பக்கத்து வீட்டுக் கோழி நம் வீட்டுக்கு வந்தால் அதனை உருட்டுக்கட்டையால் அடித்து  விறட்டுகிறோம்.

அடுத்தவரின் பூனையோ, நாயோ நம் வீட்டு எல்லைக்குள் புகுந்துவிட்டால், அவ்வளவுதான். அதன் கால்களை இலாக்காகக்கொண்டு நாம் விட்டெறியும் பொருட்கள் அவைகளின் உயிருக்கே உலை வைக்கின்றன, சில வேளைகளில்.

ஐந்தறிவு மிருகங்களான அவை நமது வளர்ப்பு மிருகங்கள் என நாம் மறந்துவிடுகிறோம். சாதுவான அவற்றின் செயல்கள் சில நேரங்களில் நமக்கு கோபத்தை தரலாம். அது இயற்கையே. ஆனால் அதற்கு, ஒரு சிலரின் சட்ட புத்தகத்தில் அவற்றின் கை, கால்களை எடுப்பதாகவோ, உயிருடன் சித்திரவதை செய்வதாகவோ, உயிரையே எடுப்பதாகவோ அமைந்துவிடுவது அன்றைய சாதுக்களின் கூற்றுக்கு நேர்மாறாக இருக்கின்றது.

அப்பர் அன்று இறைவனிடம் வேண்டினார்,
 " அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதால் வேண்டும்... ஆருயிற்கெல்லாம் நான் அன்பு செலுத்துதல் வேண்டும்..."
என்று.

அன்பு செலுத்தாவிடினும், அடாவடியாக நடந்து கொள்வதை நாம் நிறுத்தி வைத்தாலே அவற்றுக்கு நாம் செய்யும் பெரிய புண்ணியமாகும்.

இப்படித்தான் அன்மையில் ஒரு நாள், தமிழ் நாட்டில் ஒரு ஊரில், இரு கட்சிக்காரர்களுக்கிடையிலான தகராற்றின் போது, ஒரு கட்சியின் சாயம் பூசியிருந்த ஒரு மாட்டை வெட்டியே கொன்றுவிட்டனர்.

மனிதர்களின் காழ்ப்புணர்ச்சிக்கு அந்த வாயில்லா மாடு என்ன செய்தது... அறிவில்லா இச்செயலை புரிந்தவர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள்...? அவர்கள் சார்ந்துள்ள கட்சி இன்னும் எவ்வளவு கொடூரமானதாக இருக்கும்...?

உங்கள் தகுதிக்கேற்றாற்போல் உள்ளவர்களோடு அடித்துகொள்ளுங்கள். பிராணிகளை, அதிலும் நமது வளர்ப்புப் பிராணிகளை சித்திரவதை செய்தோ, கொன்றோ உங்கள் மடத்தனத்துக்கு உதாரணமாக்கிவிடாதீர்கள்.

No comments:

Post a Comment