Friday 22 November 2013

ஆனந்தின் சேவை தொடரட்டும்...

விஸ்வ நாதன் ஆனந்த் ஆறாம் முறையாக உலக செஸ் சாம்பியனானக ஆவதில் வெற்றிபெற முடியவில்லை.

 நேரடியாக நாம் பார்த்து ரசித்த அந்த விளையாட்டுப்போட்டிகள்  நிறைவடைந்து விட்டன.

பத்தாவது ஆட்ட சம நிலையினால் கார்ல்சன் 6.5 புள்ளிகள் பெற்று முதன் முறையாக தனது 23வது வயதில் உலக செஸ் சாம்பியனானார்.  கார்லசனைப் பாராட்டும் அதே நேரம், ஆனந்தின் தோல்வியைப் பற்றி நாம் பெரிது படுத்தத் தேவையில்லை.

ஐந்து முறை சாம்பியனாக வாகை சூடி இருப்பதே மற்றவர்களால் அவ்வளவு எளிதில் முறியடிக்க முடியாத சாதனையாகும்.  அதற்காக நாம் பெருமைப்படத்தான் வேண்டும்.

ஆனானப்பட்ட ரஷிய வீரர்களான கர்பாவ், கஸ்பராவ் போன்றோரே ஓரிரு முறை இந்த சாம்பியன்ஷிப்பை வென்றதோடு தோல்வியை தழுவி இருக்கும் போது, ஐந்து முறை சாம்பியனான ஆனந்த் எந்த வகையிலும் வருந்தத் தேவையில்லை.

இந்தியா மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் அனைவரும் வாற்றமுற்றோம் அவர் வெற்றியடையாதது கண்டு.  ஆன்மீகம்  சொல்வது போல இதுவும் கடந்துபோம்...

ஆயினும் ஆனந்த் அவ்வளவு எளிதில் அனைத்துலக போட்டிகளில் இருந்து விலகிவிடுவார் என எண்ணமுடியவில்லை. வெளி நாட்டினர் இதுபோல் மாறுபட்ட கருத்தினைக் கொண்டிருந்தாலும் இன்னும் பல போட்டிகளில் ஆனந்த் கலந்துகொண்டு, அவற்றில் வெற்றி பெற்று  இளையோருக்கு  ஓர் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்றே நம்மில் பலரும் எதிர்பார்க்கிறோம்.

தமிழக முதலமைச்சர் தொடக்க நிலை பள்ளிக்கூட அளவில் செஸ் ஆட்டத்தினை அறிமுகப்படுத்தி இருப்பதானது, அவரின் தூர நோக்குச் சிந்தனைக்கு புகழ் சேர்க்கும் ஒன்றாகும்.  எல்லா முதலமைச்சர்களுக்கும் இப்படித் தோன்றுவதில்லை.

அறிவியல்பூர்வமாக குழந்தைகளுக்கு "செஸ்" நல்ல சிந்தனை வளத்தினை அளித்திடும் என கற்றறிந்த அரிஞர்களும், விஞ்ஞானிகளும் சொல்லிடும்போது, அதை தேசிய அளவில் பள்ளிகளில் இடம்பெறச் செய்வதில் "அம்மா" முந்திக்கொண்டார் எனத்தான் பெருமைப்படவேண்டி இருக்கிறது.

அவரின் முயற்சிக்கு உந்துதலாக இருக்கும் விஸ்வநாதன் ஆனந்த் இன்னும் பல போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துவோம் வாருங்கள்

No comments:

Post a Comment