Saturday 29 September 2012

காலமும், நேரமும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று...


நேரம் எவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதனை இப்படி என்னையே நான் படம் எடுத்து பார்ப்பதன் மூலம் தான் தெளிவாக  தெரிந்து கொள்கிறேன் .... எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்...? நான்  மட்டுமா...?  நாம் அனைவருமே ...! 

காலம் கண்ணானது, நேரம் பொன்னானது ... காலத்தின் மதிப்பை பொன்னுக்கு உவமையாக உயர்த்திச் சொல்லி இருக்கிறார்கள். அந்த கால, நேரத்தை பார்த்து நாம் ஆற்றுகின்ற சரியாக ஒவ்வொரு செயலும் நம் இரு கண்களைப் போன்ற முக்கியத்துவம் வாய்ந்ததென நாம் உணர வேண்டும்.

வயதாகும் போது நன்மைகளும் தீமைகளும் சரி சமமாகவே ஏற்படுகின்றன. இயற்கையின் செயல்களில் புதியவை வருவதும் பழையவை போவதும் நிற்காமல் நடந்து கொண்டிருக்கின்ற ஒரு செயல். இது நம் கையில் இல்லை. இருக்கும் காலத்தில் என்ன நன்மைகளைச் செய்தோம் என்பதே நாம் நமக்குள் கேட்டுக்கொள்ள  வேண்டிய கேள்வி.

இறங்கத் தெரியாத, ஏறுகின்ற சக்தியை மட்டுமே கொண்டதுதான் நம் வயது. 'அட வயதுதானே, போனால் போகிறது..' என அலட்சியமாக விட்டுவிடலாகாது. ஒவ்வொரு வயதிலும் நாம் என்ன செய்தோம் என எண்ணிப்பார்க்கும் காலம் ஒன்று வரும். அப்போது நாம் போய்விட்ட பலவற்றை நினைத்து நினைத்து வேதனை அடைவோம். மற்றவரைப் பார்த்து நாம் முன்னேறப் பழகிக்கொள்ள வேண்டும். அவர்கள் இப்போது படும் துயரை நாம் அவர்களின் வயதின் போது படக்கூடாது.

நம் வாழ்வில் போனால் வராதது கடந்துவிட்ட காலம். எனவே,  அதன் அருமையை உணர்ந்து சரியான நேரத்தில் சரியானதைச் செய்வதே சிறப்பு. 'இளமையிற் கல்' என்றார்கள். படித்து முடித்த பின் ஞாயமான வழிகளில் பொருள் ஈட்டுவதில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் வேலைகளின் மூலமோ, சேவைகளின் மூலமோ அல்லது தொழில் வழியோ முதுமைக்குத் தேவையான பொருளாதர பலத்தை  இளமையிலே தேடி வைத்துக் கொள்ளவேண்டும். 

No comments:

Post a Comment