Friday 4 January 2013

இயற்கை...



 நீர், நிலம், நெருப்பு, வானம், காற்று என இயற்கையோடு ஒன்றி வாழ்ந்திருந்த மனிதன் நெடுங்காலம் வாழ்ந்திருக்கிறான். சரித்திர சான்றுகள் நிறைய உண்டு இதற்கு.

ஆனால், இன்றைய நிலை வேறு.  அதே போல வாழ நாம் ஏதாவதொரு ஆசிரமத்திற்கு சென்றால் தான் முடியும். அப்படிப்பட்ட சூழ் நிலை அங்கேதான் கிடைக்கின்றது. அதுமட்டுமல்ல, அதுபோன்ற இடங்களில் இப்போது ஞானிகளும், இறைவனை  நோக்கி தவம் செய்யும் பக்தர்களும் மட்டுமே வாழ்கிறார்கள்.

 நமது மூதாதையர் கற்பித்த அந்த இயற்கை வாழ்வு முறையை நாம் எப்படி தொடர முடியாமல் போய்விட்டது ?  நவீனம் எனும் பெயரில் நாம் நமக்கிழைத்துக்கொண்ட செய்வினைகளா...?

இயற்கையை நேசித்த மனிதனுக்கு அது ஆபத்தை தடுக்கும் நண்பனாகவும், அதை அழிக்க நினைத்த நேரங்களில் இயற்கையே ஒரு பெரும் அசுரனாகவும் மாறி பல சேதங்களை ஏற்படுத்தி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

மனிதனின் வாழ்வியலும் அப்படியே. வாழ்வின் இயற்கை விதிகளுக்கு உட்பட்டு வாழும் போது நல்லதே நடக்கிறது. அதில் இருந்து பிரண்டு முரணான செய்கையில் ஈடுபடும்போது அவமானமும் ஆபத்தும் நம்மை சூழ்ந்து கொள்கிறது. பிறர் பழிக்கு ஆளாகிறோம், அவர்களின் நகைப்புக்கு பொருளாகிறோம். பல நேரங்களில், பல இடங்களில் நாம் பார்க்கும் உண்மை நிலை இது.


இதை உணராது நடக்கும் போது இயற்கை தனது பணியை இயல்பாகவே செய்கிறது.


No comments:

Post a Comment