Tuesday 23 August 2011

எம் ஜி ஆர். . .


தமிழ் திரைப்படங்களில் இரட்டை வேட நடிப்பில் புகழ் பெற்றவர்களில் எம் ஜி ஆர் முதலிடத்தில் இருக்கிறார் இன்றும். 

16 படங்களில் எம் ஜி ஆர் இரட்டை வேடமேற்று நடித்திருந்தார்..அவர் நடித்து வெளிவந்த படங்களில் "கலை அரசி" என்னும் படம் 1963ல் விஞ்ஞானத்தை மையமாக வைத்து, வேறு உலகத்தில் நம்மைப் போல் மனிதர்கள் உண்டா எனும் கேள்வியை முன் வைத்து எடுக்கப்பட்ட  முதல் படம்.

'கொயி மில் காயா' என்னும் ஹிந்திப் படம் திரைப்பட வரலாற்றில் விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட முதல் படம் என்று இந்திய வரைபடத்தின் மேல் பகுதியை சேர்ந்தோர் புகழ்ந்து கொள்கின்றனர். அவர்கள்  1963ல் தமிழ்திரைப்பட சாதனையாக வெளிவந்த "கலை அரசி"யை பார்க்கவில்லை போலும் என்றே படுகிறது. ஒருவேளை, இந்தியில் அப்படம் முதல் படமாக இருக்கலாம். 

( நாம அதுமாதிரி எப்போவோ எடுத்திட்டோம்ல... )

நாடோடி மன்னன், 

எங்க வீட்டுப் பிள்ளை, 
குடியிருந்த கோயில், 
மாட்டுக்கார வேலன், 
நீரும் நெருப்பும், 
உலகம் சுற்றும் வாலிபன், 
நேற்று இன்று நாளை, 
சிரித்து வாழ வேண்டும், 
நினைத்ததை முடிப்பவன், 
நாளை நமதே, 
ஊருக்கு உழைப்பவன் 
போன்ற எம் ஜி ஆரின் இரட்டை வேட படங்கள் என்னைப் போன்ற அவரின் ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தன. பலரின் விருப்பப் படங்களாக இன்னமும் இருக்கின்றன.

இந்த  இணையதள பதிவிற்கும் எம் ஜி ஆர் படங்கள் ஒரு காரணமாகும்.



No comments:

Post a Comment