Monday 10 December 2012

செம்பருத்திப் பூ. . .


நமது நாட்டின் தேசியப் பூ செம்பருத்திப் பூவாகும். இதன் பூர்வீகம் இந்தியாவா சீனாவா என சந்தேகங்கள் எழுந்தாலும், இது அதிகம் காணப்படுவது மலேசிய நாட்டில் என்றே வழக்கத்தில் இருந்து வருகிறது.

பல வர்ணங்களில் பல அடுக்குகளில் இவை மனதைக் கவர்கின்றன.

செம்பருத்திப் பூ அதிக மருத்துவ குணங்களைக் கொண்டது. வேறில் இருந்து பூ வரை நமது ஆரோக்கியத்துக்கு உகந்ததாக சித்தர்கள் இதைக்கூறுகின்றனர்.

தலையில் தோன்றும் பொடுகுக்கும் பேனுக்கும் இது ஒரு நல்ல நிவாரணியாம். இந்தப் பூவினை அரைத்து தலையில் தேய்த்து வர கூந்தலின் கருமை அதிக காலம் நிலைக்கிறது, தலைமுடி உதிர்வதும் வெகுவாக குறைகிறது என்கின்றனர் இதை பயன்படுத்திவரும் நம் மாதர்களில் பலர். வியாபார ரீதியாக பாட்டல்களில் அடைக்கப்பட்டும் வெளிவருகிறது.

அஜீரணக்கோளாறு, வாய்ப்புண் மற்றும் பெண்களின் பல மாதாந்திர  உபாதைகளுக்கு இந்தப்பூ மருந்தாகின்றதாம். சிறு நீரைப் பெருக்கும் இது, இதயத்துக்கும், இரக்தக்கொதிப்புக்கும், சர்க்கரை நோயிற்கும் நல்லது என மூலிகை வைத்திய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் நம்மில் பலர் இந்தப் பூவினை அழகுக்காக மட்டுமே வீட்டில் வைத்திருப்போம். வெகு சாதாரணமாக வளர்ந்து வரும் இச்செடியின் மருத்துவத் தன்மைகள் அதிகம் இருப்பதால் நாமும் இவற்றை உபயோகிக்கத் தொடங்கி நமது முதுமையைத் தள்ளிப்போடலாமே...

No comments:

Post a Comment