Wednesday 12 December 2012

மற்றவர்கள் நம்மில் இருந்து வேறுபடுவது எதனால்?

உலகில் வெற்றி பெற்றவர்கள் எப்படி மற்றவர்களை விட வேறுபடுகிறார்கள்...? அவர்கள் பார்வையில் படும் அனைத்தும் நம் பார்வையிலும் படுகிறது. ஆனால்  நம்மைவிட பலவிதங்களில் அவர்கள் சிறப்பு பெருகின்றனரே...அதெப்படி?

அவர்கள் நாம் பார்க்காத கோணத்தில் பார்ப்பதே அந்த வித்தியாசத்திற்கு காரணம். விடா முயற்ச்சியும் கடும் உழைப்பும் அவர்கள் வெற்றிக்கு வழி வகுத்திருப்பதையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இயந்திரம் போன்ற வாழ்க்கையை நாம் வாழ்கிறோம். 'துயில் நீங்கி எழுந்தவுடன் இது, மதியம்  இது, மாலையில் இது பின்பு இரவில் இது ' என,  குறிப்பிட்ட செயல்களையே நாம் தொடர்ந்து  செய்கிறோம். நாம் வழக்கமாக செய்யும் அதே செயல்களை தினம் தினம் செய்துகொண்டு வெற்றி வந்து விடும் என எதிர்பார்க்க முடியுமா?

'தெளிவாவன சிந்தனையில் எழும் மாற்றங்களை தினசரி வாழ்க்கையில் கடைபிடிக்கும் போதே நம் வாழ்வில் முன்னேற்றம் நுழைகிறது' என்பதனை தெரிந்து வைத்து அதன் படி செயல் பட்டதனால் அவர்கள் நம்மை விட சிறந்தவர்களாக திகழ்கிறார்கள்.

அனால், நம்மில் பலர் வேறு கோணங்களில் மாற்றி யோசிக்கும் நிலைக்கு  நம்மை   தயார் செய்துகொள்வதில்லை. எப்போதையும் போலவே, ஒரு தினசரி மனிதனாக இருப்பதே பாதுகாப்பானது என எண்ணுகிறோம்.

இந்தச் சிந்தனையில் இருந்து வேறுபடுவதால் ஒரு சிலர் மற்றவர்களை காட்டிலும் உயரத்தில் ஜொலிக்கின்றனர். மீதமுள்ளோர் வாழ் நாள் முழுவதும் அதே நிலையில் அப்படியே இருக்கிறோம்.

No comments:

Post a Comment