Friday 7 December 2012

சினேகன் ஸ்பெஷல். . .

குறு குறுவென குழந்தைகள் கொஞ்சி விளையாடுவது பார்க்க மனதுக்கு இதமான ஒரு காட்சி.

எதிர்வீட்டு ஒன்றரை வயது ஹீரோ "தாத்தா ....................." என அங்கிருந்தபடியே அதட்டலுடன் கூப்பிடுவது சுற்றியிருப்போரின் முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்தாலும், அடுத்த கணம் வீட்டினில் எங்கிருந்தாலும் உடனே வெளியே ஓடி வந்து. " உள்ளேன் ஐயா.." என அந்த பிஞ்சு குரலுக்கு 'எட்டென்டன்ஸ்'  போடுவது இப்போதெல்லாம்  எனக்கு ஒரு பெரிய கடமையாகிவிட்டது.

" குழல் இனிது யாழ் இனிது என்பர்
தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்"
என்றார் வள்ளுவர்.  ஆஹா..எவ்வளவு உண்மை. இந்த இளந்தளிர் பேசும் தமிழ், இலக்கியத்தின் முக்கிய ஒரு அங்கம் என்பேன்.

தீபாவளிப் பலகாரங்களை ருசிக்கும்போது...

பெற்றோருக்கு தங்களின் மழலைகளே ஒரு மகிழ்ச்சியான பொழுது போக்கு... அதிலும், விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் கலையை கற்றவர் 'சினேகன்'. மேலுள்ள படத்தைப் பார்த்தாலே அது உண்மையெனத் தெரிந்துவிடும்.

'ஆ....................", ம்மா...............", "ப்பா............." ஆட்டீ..............." என்று நீண்ட இலக்கணத்தில் பேசும் இவர் "தாத்தா.............." என்பதை   சற்று அழுத்தமுடனேயே  அழைக்கிறார் , எதிர் வீட்டில், சற்று தொலைவில்  நான் இருப்பதனால்.   

2 comments:

  1. uncle poses are so superb....nc..and sinegane patri sollirukinge so nice ucle....

    ReplyDelete
  2. மழலைகள் ஒரு பல்பொருள் அகராதி, அதாவது 'என்சைக்லோபீடியா' மாதிரி.... படிக்கத் தொடங்கி படித்து முடிப்பதற்குள் அவர்கள் பெரியவர்கள் ஆகிவிடுகிறார்கள். பல சந்தர்ப்பங்களில் இதை ரசித்து அனுபவித்தவன் நான். இப்போது மீண்டும் ஒரு முறை அந்த இனிமையில் நனைகிறேன், அவ்வளவே....

    ReplyDelete