Wednesday 5 December 2012

குட்டிக் கதை: பந்தா பேர்வளிகள். . .

ஒரு காடு.

அதில் ஒரு சிங்கம் ராஜாவாக உலா வந்துகொண்டிருந்தது.

ஒரு நாள், அப்பக்கம் அஜாக்கிறதையாக வந்து கொண்டிருந்த சிறுத்தையை தாக்கிக் கொன்று சிறிதளவு சாப்பிட்டு அங்கிருந்து நகர்ந்தது.

இதை இலை மறைவில் பார்த்துக் கொண்டிருந்த குள்ளநரி சிங்கம் சென்றவுடன் மீதமிருந்தவற்றை உண்டு, வயிர் நிறைந்தவுடன் பெரிதாக ஊளையிட்டது.

அந்நேரம் பார்த்து மரக் கிளையில் தாவித் தாவி வந்த ஒரு குரங்கு இதைக் கண்டது.  அதற்கு பெரிய ஆச்சரியம்.  பக்கத்தில் வேறு எந்த மிருகங்களும் இல்லை.ஹ்ம்... அப்படியானால்....

" நரியே, சிறுத்தையை நீயா கொன்றாய்..? " எனக் கேட்டது.

தந்திரத்தில் குள்ளநரிக்கு ஈடுண்டோ..? அப்படியே குரங்கு நினைத்துக் கொள்ளட்டும் என,
" ஏய் குரங்கே.. என்ன கேள்வி இது...? நீ பார்த்துக்கொண்டுதானே இருந்தாய் நான் சிறுத்தையை அடித்துக் கொன்றதை...வேண்டுமானால் மீதம் உள்ளதை சாப்பிட்டவிட்டுப்
 போ" என எகத்தாளமாக பதிலளித்தது.

குரங்குக்கு நரியைப் பார்த்ததும் திடீரென பயம் தொற்றிக்கொண்டு விட்டது. தனது புத்திசாளித்தனத்தால் தன்னைவிட பெரிய மிருகமான சிறுத்தையை ஏமாற்றிக் கொன்று  விட்டதாகவே நினைத்துக் கொண்டது.

மரத்துக்கு மரம் தாவிச் சென்று இவ்விசயத்தை மற்ற மிருகங்களிடமும் சொல்லிற்று.

சில மணி நேரதிற்கப்புறம் அவ்வளியே திரும்பி வந்த சிங்கத்தின் காதுக்கும் இச்செய்தி எட்டியது.

'இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கும் போலிருக்கிறதே' என அதற்கும் சந்தேகம்.
ஆனால் 'ஏன் வீண் வம்பு' என எதிரே வந்த குள்ளநரியைப் பார்த்து மரியாதை செய்வது போல தலையை ஆட்டிவிட்டு பாதை மாறி நடந்து சென்றது சிங்கம்.

( சில நேரங்களில் நமக்கும் இப்படி நேர்வதுண்டு. நம்மிடம் தொழில் கற்றவர்கள் தங்களது பந்தாவினால் தாங்கள் பிறக்கும்போதே அறிவுக் கொழுந்துகளாக பிறந்து விட்டது போல சலாம்வரிசை காட்டுவார்கள்.
'எல்லாம் நேரம்டா சாமி...' என்று நினைத்தபடி போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான். வேறு எதைச்செய்தாலும் கொசுவைக்கொல்ல பீரங்கி கொண்டுவந்த கதையாகிவிடும்... )

No comments:

Post a Comment