Thursday 17 May 2012

பலவீனங்கள் பலமாகட்டும்...

நம்முடைய பலவீனங்களை மட்டும் நாம் பலமாக்கிக் கொண்டோமானால், வாழ்வில் நாம் அடைய நினைக்கும் அனைத்தையும் அடைந்து விடலாம்.

இயலாமையை எண்ணி வருந்துவது நன்மை பயக்காது. அவற்றை சரிகட்டி நாம் எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையே நம் வாழ்வில் முக்கியமானது.

உதாரணமாக புதிதாக வெளி வரும் ஒரு பட்டதாரி, ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரிந்திருந்தால் கிடைக்கூடிய வேலை வாய்ப்புக்கள் மிக அதிகம். இதற்கு அவர் பல்கலைக் கழக படிப்பினை மட்டும் நம்பிக்கொண்டிருக்காது சுய முயற்சியில் ஆங்கிலத்தின் நுணுக்கங்களைக் கற்றுத் தேரவேண்டும்.

நம் மலேசிய நாட்டில் வேலை தேடி பலரோடு போட்டியிடும் போது நமக்கென சில தனித்துவங்கள் இருப்பது நம்மை வெற்றி வாய்ப்பிற்கு இட்டுச் செல்லும் என்பது சொல்லித் தெரிய வேண்டுமா என்ன...?

அதனால் தான் சில கருத்துக்களை மீண்டும் மீண்டும் இங்கு சொல்கிறேன். நமது சமூகத்திய மாணவர்கள் தமிழ், மலாய் மொழியோடு, ஆங்கிலத்தில் புலமைப் பெற்றிருப்பதும் மிக அவசியம்..

இப்படி நமது பலவீனங்களை அடையாளம் தெரிந்து களைந்து விட்டால், தொடரும் நம் சாதனைகள் பலராலும் பேசப்படும்.

No comments:

Post a Comment