Sunday 6 May 2012

அழகும் சிறப்பும். . .

நன்றாய் எழுதுவது பென்சிலுக்குச் சிறப்பு.

நன்றாய் அழிப்பது ரப்பருக்குச் சிறப்பு.

ஆனால், எல்லா பென்சில்களும் நன்றாய் எழுதுவதில்லை. எல்லா ரப்பர்களும் நன்றாய் அழிப்பதில்லை.

அப்படி சிறப்பாக இருக்க ஒரு தனித்தன்மை வேண்டும்.

அப்படித் தனித் தன்மையுடன் வாழ்ந்தோரில் பாரதியாரும் ஒருவர்.

'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...' என்றார்.
அச்சமேயில்லை' என ஒரே வார்த்தையில் முடித்திருக்கலாம். அவர் அப்படி முடிக்கவில்லை, ஏன்? எதிலும் ஒரு அழகிருப்பதை அவர் கவனத்தில் வைத்திருந்தார்.

சொல்வது சற்று மிகையாய்  இருந்தாலும் சொல்லியதில் இருக்கும் அழகைப் பாருங்கள்.

தனிச் சிறப்புடனும் அழகுடனும் புற வாழ்வில் கூடி வாழ நமக்கு சொல்லப் பட்ட சொற்றொடர்கள் பல:-
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை...
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு...
தனிமரம் தோப்பாகாது...
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை....

போன்றவை ஒற்றுமையாக, எல்லோருடனும், விட்டுக் கொடுத்து வாழ்வதன் நலனை உணர்த்துகின்றன.

ஆன்மீக உணர்வையும் தெய்வ வழிபாட்டில் சுறுசுறுப்பையும் அப்படி ஒற்றுமையாக வாழ இயலாமல் போகும் போது  நாடுகிறோம்.
இதையே அகவாழ்வு என பெரியோர் சொன்னார்கள். பிரார்த்தனை, தியானம் என்று பல பெயர்களில் இருப்பது இந்த அகவாழ்வுதான்.

இதிலும் ஒரு விசேஷம், ஒரு அழகு இருக்கிறது.

பலரும் கூடிச்செய்யும் பூஜைக்கும், பிரார்த்தனைக்கும் கூடுதல் பலன் உண்டு.  கோயிலுக்குச் சென்று வழிபடுதலின் உண்மை நிலை இதுதான் என முன்னோர் சொல்லிச் சென்றது இது.

No comments:

Post a Comment