Sunday 27 May 2012

சிறந்த மருத்துவர் இவரே....


கிளினிக்குக்கு  வருபவர்கள் எல்லோருக்கும் ஒரே கவலை.

டாக்டர் அருள் இடம் மாற்றலாகிப் போவதை யாரும் மனப்பூர்வமாக எற்றுக்கொள்ளத் தயாராய் இல்லை. வெளிப்படையாகவே தங்களின் ஆதங்கத்தை காட்டுவதைக் கண்டேன்.

" இத்தனை வருஷம் என் உடல் நிலையைப் பற்றி நான் எண்ணிப்பார்த்ததே இல்லை. அதை எல்லாம் டாக்டரே பார்த்துக் கொள்வார். வரச்சொல்வார், வருவோம். மற்றது அவர் சொல்றது மாதிரிதான்.  இப்போ டாக்டர் வேறு இடத்துக்கு மாறிப்போவதை நினத்தால், மனதுக்கு கொஞ்சம் கஷ்ட்டமாத்தான் இருக்கு..." என பலரும் கூறுவதைக் கேட்கும் போது எனக்கும் ஒரு மாதிரித்தான் இருந்தது.

கடந்த பத்து வருடங்களாக வாரத்தில் நான்கைந்து நாட்கள் காலை உணவை 'கோப்பிதியாம்" கடையில் அவருடன் ஒன்றாக சாப்பிட்டு பழகி விட்டது. இனி எப்போதாவதுதான் அந்த சந்தர்ப்பம் கிடைக்கும். இதை நினைக்கையில் எனக்கும் வருத்தம் தான். இருக்காதா என்ன...  அவரை காலையில் சந்திப்பதற்கு முன் அன்றைய முக்கிய செய்திகளை இனையத்தில் தெரிந்து கொண்டுதான்  அவரோடு உணவருந்த வருவேன்.  நடப்பு விஷயங்கள் 'குட் மோர்னிங் மலேசியா' போல அலசி ஆரயப்படும் ஒவ்வொரு நாள் காலையிலும்.

இனி அந்த ஒரு மணி நேரத்திற்கு வேறு ஏதாவது செய்ய வேண்டியதுதான்.

 நோயாளிகளும் கவலை படுகிறார்கள், அவர்களை கிளினிக்குக்கு கூட்டிவரும் அவர்களது பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் கவலைப் படுகிறார்கள்.

வேறு எங்கே இப்படி ஒரு இனிமையான சிரித்துக்கொண்டே இருக்கும் ஒரு டாக்டர் கிடைக்கப்போகிறார்...?

சிரிப்பே சிறந்த மருந்து என்பதை அனுபவத்தில் சொல்லிக்கொடுத்த டாக்டாராயிற்றே இந்த டாக்டர் அருள். அவரை சந்திக்க அறையினுள் நுழையும் நோயாளிகள் வெளிவே வரும்போது ஒருவித புன்னகையோடல்லவா வருவார்கள். இனி இதுபோல அவர்களை அக்கறையுடன் யார் கவனித்துக்கொள்ளப் போகிறார்கள்?
இதுவே பலரின் பிரதான கவலையாய் இருக்கிறது இப்போது.

இன்று காலையில் அவரை வைத்து 'டபுள்ஸ்" எடுத்த பின் வந்திருந்த நோயாளிகளுடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவர்களின் பேச்சிலிருந்து டாக்டரை அவர்கள் ரொம்பவும்  'மிஸ்" பண்ணப்போகிறார்கள் எனப்பட்டது.

சீன, மலாய்க்கார மற்றும் இந்தியர்கள் என்கின்ற வேறுபாடு காட் டாதவர். நோயாளிகள் அனைவரும் ஒன்றுதான் இவருக்கு. அவர்களின் துண்பம் தீர்ப்பதே இவரது தலையாய கடமை.

இவரது நோயாளிகள் ஒவ்வொருவர் உடல் நிலையிலும் தனிப்பட்ட கவனம் காட்டுவார். மருத்துவ பரிசோதனைக்குப் பின் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு  உடல் நலம் விசாரிப்பார்.

அவசரமாக வரும் சீரியஸான நோயாளிகளை உடனுக்குடன் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து அவர்களின் நோய்க்கான காரணங்களை கடிதம் வழி மருத்துவ மனை டாக்டர்களுக்கு தெரிவித்து உடனடி நிவாரணத்திற்கு வழி செய்வார். அவ்வப்போது அவர்கள் மேற்கொண்டு செய்ய வேண்டிய சிகிச்சை பற்றியும் அவர்களுக்கு விளக்குவார்.

'ஐ.ஜே.என்' எனப்படும் 'தேசிய இருதய மருத்துவ மனைக்கு' இவர் அனுப்பி வைக்கும் நோயாளிகள் நன்கு கவனித்துக் கொள்ளப்படுவர். காரணம் இவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது இவரோடு படித்த அல்லது இவரோடு ஆரம்ப காலங்களில் வேலை பார்த்த டாக்டர்கள் அங்கு நிறைய பேர் உண்டு.  அதனால், 'அருள் சொன்னா, அதுக்கு அப்பீல் கிடையாது'.( இப்படித்தான் சிலவருடங்கள் அவரோடு இருந்த பின் எனக்குப் பட்டது.)

 நோயாளிகள் என்றால் நோயாளிகள் என்றே பார்க்கும் குணம் கொண்டவர் டாக்டர் அருள். இதானால் இவருக்கு நண்பர்கள் வெகு சிலரே.

 நோயாளிகளோடு நட்பை வளர்த்துக்கொண்டால் அவர்களுக்கான சிகிச்சையில் தடங்கல்களும் இடையூறுகளும்  ஏற்பட்டு விடும் என்பார். நண்பராக ஒரு நோயாளியை பார்க்கத் தொடங்கும் போது அங்கு சிகிச்சை முழுமைபெறாது என்பார்.

இவரைப் பார்க்க வரும் இவருடைய உறவினர்களுக்கும் இதே நிலைதான். நோயாளி என்றால் வேறு சிறப்பு சிகிச்சையெல்லாம் இவரிடம் கிடையாது.

எனவே, இவருக்கு நண்பர்கள் மிகவும் சிலரே. அதிலும் பந்திங் வட்டாரத்தில் வேறு யாரும் இவருடைய நண்பர்களாக கிடையாது....அப்படி ஒரு தியாக மனப்பன்மை இவரிடம்.

No comments:

Post a Comment