Wednesday 2 May 2012

ராம்குமார், மெடிக்கல் ரெப். . .

காலமான எனதருமை நண்பர் செல்வம் அறிமுகப்படுத்திய ஒருவர் திரு ராம்குமார்.

வயதில் இளையவர், ஆயினும் தாடையில் ஒரு குறுந்தாடியுடன் மிக அனுபவசாலியாக தோற்றம் தருபவர். இவர் ஒரு மெடிக்கல் ரெப், அதாவது மருந்து விற்பனைப் பிரதிநிதி. கிள்ளான் வட்டாரத்தில் புகழ் பெற்றவர்.

" செல்வம் அண்ணே போயிட்டது இன்னமும் மனசுக்கு கவலையா இருக்கண்ணே...வயது ஒன்னும் அப்படி அதிகம் இல்லையே? " என வருந்தினார்.

"பிறப்பதே போவதுக்குத்தானே...அவர் இப்போ போயிட்டார், நாம பின்னலே ஒரு நாள் போகத்தான் போறோம்" என பெரியதொன்றைச் சொல்லிவிட்டது போல் கண்ணிமைத்தேன்.

"அதுதான் நீங்க புதுப் புது மருந்துகளா கண்டு பிடிச்சி அறிமுகப் படுத்துறீங்களே. அதுசரி, நோயாளிகள் காத்திருக்கும் போது டாக்டரைப் பார்க்கறீங்களே, உங்களுக்கு இது சங்கடமாக இல்லையா?" என்று தொடர்ந்தேன்.

"என்ன அண்ணே செய்யறது.. இதுதான் என்னோட தொழில். டாக்டருங்க வேலை செய்யும் போதுதான் அவர்களை சந்திக்க சுலபமாக இருக்கு.
காத்திருக்கும் நோயாளிகள் எரிச்சலடைகிறார்கள்தான். அது எனக்கும் தெரியும். ஆனா, எங்கள் சேவையினால் பலன் அடையப்போவதும் அவர்கள்தானே" என்றார்.

உண்மைதான்.  அறிவியல் கணினியில் மட்டுமல்ல, மனிதனை தற்போது இருப்பதை விட இன்னும் அதிக காலம் உயிரோடு வைத்திருக்க பெரிய உதவி செய்து கொண்டிருக்கிறது.

மனிதனுக்கு ஏன் நோய்கள் வருகின்றன, அவன் ஏன் முதுமை அடைகிறான் என தெரிந்துவிட்டால் மனிதனின் ஆயுட்காலத்தை நீடித்துவிடலாம் என மேல் நாட்டு மருத்துவ உலகம் முனைப்புடன் வேலை செய்து கொண்டிருக்கிறது.

அன்மையில் பத்திரிக்கைகளில் வந்த தகவல் இது.

No comments:

Post a Comment