Monday 2 September 2013

எளிமை அகல வரம் தா...

நமது செலவுகளையும் அன்று நடந்த அனைத்து நிகழ்வுகளையும் அசைபோடும் தகுந்த தருணம் இரவாகும். தனிமையில், ஒரு சில நிமிடங்கள் இந்தச் சிந்தனைக்கென ஒதுக்கி வைத்து, அன்றைய செலவுகளையும், அன்றைய செயல்களையும் மீண்டும் ஒருமுறை எண்ணிப்பார்ப்பதில் ஒரு நன்மை உண்டு.

அடுத்த நாளில் ஆங்காங்கே  சரி செய்து கொள்ள இது பலராலும் பரிசோதிக்கப்பட்ட யுக்தியாகும்.

" எளிமை அகல வரம் தா...." என இறைவனிடம் விண்ணப்பிக்கும் அதே நேரம், நமது வேண்டாத செலவினங்களையும், செயல்பாடுகளையும் அன்றன்றே நிவர்த்தி செய்துகொள்வது வாழ்வில் வளமுடன் வாழும் பலரின் பழக்க வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.

ஏழைகள் மதிக்கப்பட்ட காலம் ஒன்று இருந்திருக்கிறதா என பின்னோக்கிப்  பார்த்தேன். சரித்திரத்தில் எங்குமே அப்படி ஒன்று இல்லாதிருப்பதை உணர முடிந்தது. 

ஏழ்மை என்பது கௌரவம் அல்ல, அது இயலாமை.    ஞாயமான எல்லைக்குட்பட்டு இருக்கும் போது அங்கு ஒரு ஆதங்கம் நிலவுகிறது. முன்னேற முயற்சிக்காது ஏழ்மையாய் இருக்கும் சூழ்நிலையில் வெறுப்பே முந்தி நிற்கிறது. இவ்விரண்டுக்கும் வேறுபாடுகள் பலவுண்டு.

கல்வி ஏழ்மையயும் அதனால் வரும் எளிமையையும் போக்குகிறது. உண்மையான உலகத்தை அடையாளம் காணவும் உதவுகிறது.
 

No comments:

Post a Comment