Wednesday 24 April 2013

பாராட்டு...

மற்றவர்களின் நற்செயல்களைப் பாராட்ட ஒருவருக்கு நல்ல மனம் வேண்டும்.

செய்யப்படுகின்ற சாதனைகள், 
அதைச் செய்ய எடுத்துகொள்ளும் முயற்சிகள்,
எதிர்படும் தடைகளை மீறிச் செல்லும் குணம்,
பொருளாதார வசதியின்மையிலும் மனச் சோர்வில்லாமல் பார்த்துக்கொள்ளுதல் ... 
இப்படி பலவற்றைக் கடந்து மற்றவர் செய்யும் நல்லனவற்றை பாராட்டுவதென்பது ஒரு சிலரால் மட்டுமே முடியும்.

உண்மையில் சாதனைகளை மட்டுமல்ல, சாதாரண செயல்களைக்கூட நமக்கு திருப்தியான படி இருப்பின் பாராட்டுவதில் தவறில்லை. இதனைப்போன்ற பாரட்டுதல்களையே நறுமணமுள்ள செயல்கள் என்கிறோம்.

ஒருவரை பாராட்டும் அதே நேரம், நம்முள்ளிருந்து வெளிப்படும் இந்த உணர்வு நம்மையும் உயர்த்துகின்றது.  நாம் சொல்லாமலே மற்றவர்களுக்கும் நம் நல்லெண்ணம் தெரிய வருகிறது.

பாராட்டு என்பது மரம், செடி, கொடிகளுக்கு  இடப்படுகின்ற உரம் போன்றது. 

மற்றவர் நம்மைப் பாராட்டும்போது நமக்கு எவ்வளவு மனமகிழ்ச்சியேற்படுகிறதோ, அதேபோல நாம் பிறரை பாராட்டும் போது அவர்களும் நமக்கு புன்னகையை பரிசளிக்கிறார்கள். நமக்கிடையிலான நட்பு மேன்மேலும் வளர்கிறது. 

இன்னும் பல நல்ல ஆக்கபூர்வமான செயல்களை ஒருவரிடம் இருந்து எதிர்பார்க்க, அவரின் நற்செயல்கள் என நாம் அறியும் அனைத்தையும் பாராட்டப் பழகுவோம்.

No comments:

Post a Comment