Monday 4 February 2013

நடைபயிற்சிக்கு நல்ல இடம் ஜுக்ரா மலை. . .

( ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் மலைக்குச் சென்று அடிவாரத்தை வந்தடைந்த களைப்பில் நான் )
ஒரு நாள் மாலை, விறு விறு நடையாக  ஜுக்ரா மலை ஏறி திரும்பியவுடன் எடுத்த படம் இது. ஆரோக்கியமானவர்களுக்கு தகுந்த நடைபயிற்சி  மையமாக தெரியும் இம்மலை, பெண்களுக்கும், ஆரோக்கியம் தளர்ந்த சிலருக்கும் முக்கி முணகி சென்று திரும்பும் அம்சமாகிவிடுகிறது.
தொந்தி குறைய எளிய உடற்பயிற்சியாக அமைவது இது போன்ற மலைகளில் ஏறி இறங்குவதும் ஒன்றாகும். 

ஆரம்பத்தில் இங்கு நடை பயிற்சிக்கு வரும் போது கை கால்களில் வலி வரத்தான் செய்தது. ஆனால், சில நாட்களில் அந்த வலி மறைந்துவிட்டது. இப்போது மெது நடை விரைவு நடையாக மாறிவிட்டதால் பயிற்சி முடிந்த சில நிமிடங்களுக்கு வழக்கமான களைப்பை உணருகிறேன், அவ்வளவுதான். அதிலும் காலையிலும் மாலையிலும் இங்கே பயிற்சிக்கு வருவோரை பார்த்தால், நமது உடல் வலி பெரிதாக தோன்றுவதில்லை. மாறாக அடிக்கடி வர ஆர்வம் ஏற்படுகிறது.




No comments:

Post a Comment