Friday 2 November 2012

சில புகைப்படங்கள்...

புத்ரா ஜெயா பொழுது போக்கிற்கு ஒரு நல்ல இடம். அங்குள்ள பொட்டனிக் கார்டன், நண்பர்களுடனும் உறவினர்களுடனும்  ஜாலியாக சுற்றிவர அருமையான இடம். சிறு குழந்தைகள் சின்ன சின்ன குன்றுகளைப்போல் உள்ள இடங்களில் ஓடி ஆட மிகவும் விரும்புவர்.
அங்கு மட்டுமல்ல, சாதாரனமாக காரில் உலா வரவும் புத்ரா ஜெயா ஒரு நல்ல இடம். மழைக்கு சில நிமிடஙளுக்கு முன் எடுத்த ஒரு படம் மேலே.


கிழக்கே நோக்கும் திட்டம் பல வழிகளிலும் மலேசியர்களுக்கு பலனளித்திருக்கிறது. வேலை வாய்ப்புக்கள் பல தோற்றுவிக்கப்பட்டதால், வேலை இல்லா திண்டாட்டம் குறைந்திருந்தது. தோட்டத்தில் இருந்து வெளியே வந்த நம் சமூக மக்களுக்கும் இது பேருதவியாக இருந்தது. வீட்டிலே அடைபட்டுக்கிடந்த நம் தமிழ்ப் பெண்கள் வெளி உலகை காண ஒரு சந்தர்ப்பத்தையும் இது பெற்றுத்தந்தது. ஜப்பானிய கொரிய நிறுவனங்களின் வருகைக்குப் பிறகே நமது பெண்கள் கை நிறைய சம்பாதிக்கத் தொடங்கினர். வீட்டின் ஏழ்மை அகன்றது. கம்ப்யூட்டர் வருகைக்கு முன் இருந்த நிலை அது.

அப்படி ஒரு கொரிய நாட்டு நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் சுறு சுறுப்பாக நடபெற்று வரும் ஒரு படத்தினை மேலே காண்கிறோம். ஈட்டெக் / எல்பியோன் எனும் பெயரில் இயங்கவிருக்கும் அது விரைவில் சில நூறு பேர்களுக்கு புதிதாக வேலை வாய்பினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment