Sunday 4 November 2012

இனாமாக இணையத்தில் டியூஷன். . .

புதுப்புது கணித முறைகளை மாணவர்கள் இப்போது கற்று வருகின்றனர். பள்ளியில் போதிக்கப்படும் கல்வி அமைச்சின் பாடத்திட்டத்தோடு கூடுதலாக இதுபோன்ற கணிதத்தில் உள்ள புதுமைகளை பலரும் ஆதரிக்கின்றனர். இதனால் நேரம் மிச்சமாகின்றது, சுவாரஸ்யமாகவும் இருக்கின்றது.  இது வரவேற்கத்தக்கதே. பழையன கழிதலும் புதியன புகுதலும், அவை நன்மைகலை கொண்டுவருவனவாயின் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

அனால், இன்றைக்கும் பழமையை விடாப்பிடியாக கட்டிக்கொண்டிருப்போர் நம்மிடையே இருக்கிறார்கள். ஏழாம் அறிவில் சொல்லப்பட்டது போல் அவற்றை தூக்கி எறிந்துவிடாமல், பத்திரப்படுத்தி தேவையின் போது தூசி தட்டுவதில் தவறில்லை. ஆனால், மாற்றங்களை நோக்கி உலகே போய்க்கொண்டிருக்கும் போது நாமும் அங்கு என்ன நடக்கின்றது என கவனிப்பது நமக்கு நன்மை பயக்கும் என்றே படுகிறது.

பள்ளிப்பாடங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் எற்றாற்போன்ற ஒரு வலைத்தளம் என் கண்ணில் பட்டது.

கணிதம், பொருளாதாரம், அறிவியல், சரித்திரம், கம்ப்யூட்டர் சைன்ஸ்
என பல தலைப்புக்களில் படச்சுருள்களில் விளக்கங்களைத் தந்துள்ளனர்.

இந்த இணையத்தளத்தை சரியாக பயண்படுத்திக் கொண்டால், மாதாந்திர டியூஷன் பணத்தை சேமிக்கலாம் என்றே தோன்றுகிறது.


www.khanacademy.org

எனும் இணையத்தள முகவரிக்கு சென்று உங்களின் தேவைக்கு உகந்ததாக உள்ளதா என பரிசோதித்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment