Thursday 29 November 2012

மாறாதது மாற்றங்கள் மட்டுமே...

காலத்துக்கேற்ற மாற்றங்கள் எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. குற்றவியலில் இருந்து சமூகவியல் வரை முன்பிருந்த குறிப்பிட்ட பிரிவினருக்காக இருந்து இப்போது பலருக்கும் பொருந்துவது போல சட்டங்கள் மாற்றம் கண்டு வருகின்றன.

நம் சமூகத்திலும், மதத்திலும்கூட அப்படியே. உடன்கட்டை ஏறுவது இப்போதில்லை. இரண்டு பேரைத் திருமணம் செய்வது கொள்வது இப்போது குற்றம். கணவனை இழந்து கஷ்டப்படும் பெண்கள் மறுமணம் பற்றி முன்பு நினைக்கக்கூட முடியாது. ஆனால், இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது.

ஒட்டு மொத்தமான பலரின் கருத்தே மாற்றத்திற்கு வித்திடுகிறது. அனைவரும் ஒன்றுகூடி காலத்துக்கு ஒவ்வாத மூடப் பழக்கங்களை வேண்டாம் என தவிர்க்கும் போது அதுவே நாளடைவில் சட்டமாகிறது, அல்லது இருக்கும் சட்டங்களில் மற்றத்தைச் செய்கிறது.

கருத்துச் சுதந்திரம் பெருகப் பெருக இன்னும் பல மாற்றங்களை நாம் எதிர் பார்க்கலாம். இந்த 'ஃபைன் டியூனிங்" என்றும் மாறாத ஒன்றாக மாற்றங்களைத் தந்துகொண்டே இருக்கும்.

ஆனால் ஒன்று, எல்லோருக்கும் பொதுவாக மதச் சட்டங்கள் வேண்டும் என யாரும் உறுதியாக கேட்க முடியாது. தங்களின் நம்பிக்கைகள் வேறு படும் போது, இது சாத்தியமில்லை. அடிப்படையில் அவரவர் சூழ்நிலைக்கேற்ப செய்து கொள்ளும் மாற்றங்களை மற்றவர் ஏற்றுக்கொண்டு அவற்றை மதித்து வாழ்வதே சிறப்பாகும்.


அதி நவீன வளர்ச்சி அடைந்துவிட்டவற்றுள் சினிமாவும் ஒன்று. மேலுள்ள படம் முக்கோணங்களில் எடுக்கப்பட்ட ஒன்று. இதைப் பார்க்க 3D கண்ணாடி தேவை.

No comments:

Post a Comment