Wednesday 28 November 2012

தங்கத்தில் ஏமாற்றுகிறார்கள்...

பொதுவான சில விசயங்கள் பெண்களுக்குத் தெரியும். அதுவும் நகை வாங்கும் பெண்களுக்கு கடையில் நடக்கும் ஏமாற்று வேலைகள் நிச்சயம் தெரியும்.

சேதாரம், செய்கூலி எனச் சொல்லி ஒரு குறிப்பிட்ட தொகையை தங்க்ளுக்கு நஷ்டமில்லாமல் பார்த்துக்கொள்ளும் இவர்கள் நகைகளின் எடையில் எப்படி எப்படியோ ஏமாற்றுகிறார்கள்.

எனது நண்பரின் மனைவி ஒரு கடையில் நகை வாங்கினார். மகளுக்கு அவர் வாங்கிய நகியின் 'ஃபேஷன்' பிடிக்காததால் அதே கடைக்குச் சென்று வேறொன்றை மாற்றிக்கொள்ள நினைத்தார்.

என்ன ஆச்சரியம்... ஒரு வாரத்தில் நகையின் எடை சற்று குறைந்திருந்தது.

தன் கையில் வைத்திருந்த நகைக்கான விலைச் சீட்டை காட்டி மாறுபடும் நகையின் எடையை எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். கடைக்காரர்கள் கைவிரித்து விட்டனர்.

ஒரு நகைக்கே இவ்வளவென்றால், தான் வாங்கிய மற்ற நகைகளின் நிலையை எண்ணி ஆதங்கப் படுகிறார் இப்போது.
இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, அருகாமையில் இருந்த இன்னொரு நபர் அதிர்சி தரும் தகவல் ஒன்றைச் சொன்னார்.
அடமானமாக வைக்கப்படும் நகைகளில் இருந்து எப்படி சிறுகச் சிறுக சுரண்டிக் கொள்கிறார்கள் என்று.

"என் நண்பரின் அவசரத்துக்கு என்னிடம் இருந்த ஒரு மோதிரத்தை அவருக்காக அடமானம் வைத்தேன்.   சில நாட்கள் சென்றபின் அதற்கான கட்டனத்தை செலுத்தி திரும்ப பெற்றுக்கொண்டேன். இந்த விசயத்தை என் நண்பர் ஒருவர் சொல்லும்போதுதான் நானே என் கண்ணால் பார்த்தேன். நான் அடமானம் வைத்து திரும்பப் பெற்ற அந்த நகையில் இரு முறை அடமானம் வைக்கப்பட்டதின் அடையாளமாக இரண்டு இடங்களில்  ஒரு சிறு அளவு சுரண்டப்பட்டு இருந்தது...."

அவருடன் சென்று அந்த மோதிரத்தை படம் பிடித்த பின்னர்தான் அவர் சொல்வது உண்மை என என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. நான் பார்த்ததை நீங்களும் பார்க்க இங்கே அந்தப் படத்தைத் தந்துள்ளேன்.







No comments:

Post a Comment