Friday 20 April 2012

முன்னேறுவது எப்படி என மேடைகளில் முழங்குவோர்....

ஆங்காங்கே பல பேச்சாளர்கள் குறைந்தது 10 ரிங்கிட் நுழைவுக் கட்டணத்தில் வாராவாரம் நூற்றுக் கணக்கான மக்களை சந்தித்து வாழ்வின் கோட்பாடுகளையும், வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி எனவும் மேடைகளில் முழங்கிய வண்ணம் இருக்கிறார்கள்.

கடந்த 35 அல்லது 40 வருடங்களாக இதை கண்டு வருகிறேன். என் உறவினர்களில் சிலரும் இது போன்ற கூட்டங்களுக்கு, அதிக தொகை கொடுத்து முன் வரிசையில் இடம் பெற்று காது குளிர கேட்டு வருகின்றனர்.

ஆனால் பாருங்கள், புதுப் புது தலைப்புகள் தாம் எழுகின்றனவே தவிர, ஒவ்வொரு முறை விளம்பர அறிக்கை நம் கைகளில் வந்து சேரும் போது, அதில் " அதிகமானோர் தோல்வியை தழுவுகின்றனர்" என அடிக்கோடிட்டு காட்டுகின்றனர்.

இத்தனை வருடங்கள், இத்தனை ஆயிரம் மக்கள் இது போன்ற வெற்றியை சுட்டிக்காட்டும் கூட்டங்களில் பங்கு கொள்ளும் போது, இதனால் பயனடைந்தோர், வெற்றியாளர் பட்டியல் நம் கண் முன்னே தெரிந்திட வேண்டாமா?

என்னமோ போங்க. நடக்கிறது எதுவுமே நல்லதா தெரியல. மக்களின் பலவீனத்தையும், ஏமாளித்தனத்தையும்  வைத்து பணம் பண்ண பார்ப்போரே அதிகமாகி வருகின்றனர், வெற்றியாளர்கள் அல்ல.
















1 comment: