Saturday 14 April 2012

ஜுக்ரா மலை. . .

திருச்சியிலிருந்து வந்திருந்த அண்ணன் சந்திரசேகரன் அவர்களை பந்திங் வட்டாரத்தில் புகழ்பெற்ற ஜுக்ரா மலையை சுற்றிப்பார்க்க அழைத்துச் சென்றிருந்தோம் நானும் என்னுடைய அந்நாளைய பக்கத்துவீட்டு நண்பர்களான மோகனும், தயாளனும்.

இரட்டைவேட படங்கள் சில அங்கே எடுப்பது என்றும் முடிவு செய்தோம்.


போகும்பாதை நீண்டு கொண்டு போவதை பார்த்து பிரமித்த அண்ணனை,

 "கவலைப்படாதீர்கள், அங்கிருக்கும் மலை உச்சியிலிருந்து கீழே பார்த்தால் காட்சிகள் அழகாய் தெரியும்"

என சற்று மிகைப்படுத்திச்  சொல்லியே கூட்டிச் சென்றோம்.


எங்களுக்கு பின்னால் தெரிவது பழங்கால சீனர்களின் இடுகாடாகும். அவர்களின் இடுகாடு எப்போதும் உயரமான மலை மேல்  இருப்பதை கவனித்தீர்களா...?


இரட்டைவேட புகைப்படங்கள் எடுப்பதற்கு முயற்சியும், பயிற்சியும் தேவை.

அதுமட்டுமல்ல, ஒரு வித்தியாசமான காட்சியமைப்பு வேண்டும். இல்லையேல் எடுக்கப்படும் படம் வெட்டி ஒட்டப்பதைப் போல சாதாரணமாகிவிடும்.

சில நேரங்களில் சுற்றி இருப்போர் ஒரு நாடக படப்பிடிப்பை பார்ப்பதைப் போல  கூடிவிடுவர்.

தமிழக மெரினா பீச்சில் இதுபோன்று "டபுல் எக்க்ஷன்" புகைப்படங்கள் எடுக்கும்போது  பலரும் கவனிக்க தொடங்கிவிட்டனர். 

ஒருவேளை, நான் கைகளை நீட்டி உத்தரவுகளை பிறப்பிக்கும் "பந்தா"வினால் இருக்குமோ என்னவோ. ஆனால் இரட்டை வேட படங்கள் எடுப்பதற்கு  நான் கூச்சப்படுவதில்லை. காரணம், இது போன்ற புகைப்படங்களை எடுக்கும் நேரம் கூட்டத்தினருக்கும் தெரியும் மாறுபட்ட கோணங்களில் படங்கள் எடுக்கப்படுவது

என்னுடைய படங்கள் இயற்கையாகவே ஒருவரே இருவராக இருப்பது போன்றே இருக்கும்.



காட்சியமைப்பு ஒன்றினை   திருச்சி அண்ணனுக்கு விளக்குகிறேன்.



"அட ஆமாம் தம்பி, ரொம்ப நல்லா இருக்கே" என தனது கேமராவில் படமெடுக்கிறார் அண்ணன்.



மலை உச்சியில் படங்களை எடுத்து முடித்தபின் அடிவாரத்தில் இருக்கும் ஆற்றோரத்து அழகை ரசிக்க வந்திருக்கிறோம்.

இந்த ஆற்றின் வழி பல நீண்ட இயந்திரப் படகுகளில்  மோரிப் கடலில் நின்றிருக்கும் கப்பல்களிலிருந்து பொருட்களை கிள்ளான் துறைமுகத்துக்கு கொண்டு செல்வர்.




இதுவரை எடுத்த காட்சிகளை தனது புகைப்படக் கருவியில் பார்த்து ரசிக்கிறார் திருச்சி அண்ணன்.

  
நாங்கள் வந்திருக்கும் இன்று எந்த ஒரு பெரிய படகுகளும் போகக் காணோம். இப்படிச் சில மட்டுமே போய் வந்தன. ஒருவேளை "ஸ்ட்ரைக்"காக இருக்குமோ...? 

No comments:

Post a Comment