Monday 16 April 2012

அகலிகையின் சாபம் . . .

இலக்கியத்தினுள் நுழைய தனிப்பெரும் திறன் வேண்டும்.
எளிதாய் தோன்றும் வார்த்தையின் விளக்கம் தெரிந்திட இதிகாச ஞானம் வேண்டும்.

உதாரணத்திற்கு கீழே இலக்கிய பக்கம் ஒன்று:


தேவி இவள் ராமா - கெளதமன்
ஆவி இவள் ராமா (தேவி)


ஆவலினாற் பண்டு
மேவல்மனங் கொண்டு

அந்தரம் நாடிய

இந்திரன் கூடிய (தேவி)

 
மாபத்தியால் கங்கை ஆடத்தடை பெற்ற
மாமுனிகண்டு வெருண்டுபயஞ் சுற்ற

கோபத்தினால் இடு சாப மொழி மெத்த

கூறையிலே கரும் பாறை வடி வுற்ற(தேவி)

 
வெம்பிய மாமுனி கண்ணில் எதிர்ப் பட்ட
வேளையிற் ண்டு பொறாமல் முனி திட்ட

அம்பொன் முடிதொட்டடியளவும் முட்ட

ஆயிரங்கண் அந்த வாசவனுக் கிட்ட (தேவி)

 
ஞானத்தினால் உன்னை ஓதினபேர்க்கெந்த
நன்மையுண் டாமோ அறியேன் இப்போ திந்த

கானத்திலே உந்தன் பாதத்து?ள்கள்சிந்த

கல்உரு மாறி அகலியை யாய் வந்த (தேவி
)
  

No comments:

Post a Comment