Tuesday 24 April 2012

நான்மணிக் கடிகையில் ஒன்று. . .

நிலத்துக்கு அணியென்ப நெல்லுங் கரும்பும்
குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கணியாம்
தான்செல் உலகத்து அறம்"


நெல்லும் கரும்பும் பயரிட்டு அருவடை செய்யும் போது நிலத்தின் விலையும் மதிப்பும் உயர்கிறதாம்.

தாமரை அழகாய் மலர்ந்திருக்கும் போது குளத்துக்கு பெருமை சேர்கிறதாம்.

வெட்கப்படும் நேரம் பெண்கள் அழகாய் தெரிவார்களாம்.

அதேபோல, மரணமுற்று அடுத்த உலகுக்குச் செல்லும் முன்பே அந்த உலகத்தை எண்ணிப்பார்த்து இப்போதே நல்ல காரியங்கள் செய்வது மனிதருக்கு சிறந்ததாம்.

(பதினென்கீழ் கணக்கு எனும் நூல்களில் ஒன்றான விளம்பி நாகனாரின் "நான்மணிக் கடிகையில்" ஒரு பாடல் இது.)

1 comment:

  1. நன்று. இன்னும் இதுபோல தரவும்.
    ( ராஜ், நீங்க சொன்னதுக்காக comments போட்டிருக்கேன்)

    ReplyDelete