Sunday 17 March 2013

வீட்டை பராமரிப்பதென்பது. . .

 எல்லா நேரங்களிலும் வீட்டின் சுத்தமும் சுகாதாரமும் சீராக வைத்திருப்பதென்பது குடும்பப் பெண்களுக்கு ஒரு பெரும் சுமையான ஒன்று. கணவரோடு, வீட்டில் உள்ள பெரியோரையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளும் அதே நேரம், வீட்டின் அகமும் புறமும் எப்போதும் அழகாக இருக்க பல முயற்சிகளை அவர்கள் எடுக்கவேண்டியதிருக்கிறது.
வீடு அழகாகவும் இருக்க வேண்டும்,  ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். இதற்கு முதல் நிலை வடிகட்டுதலாக அவர்களுக்கு  உதவி செய்பவை தொங்கும் திரைச்சீலைகள். 

இதற்கு பெண்கள் எடுத்துக்கொள்ளும் ஆரவாரம் சொல்லில் அடங்காது. சுவற்றின்  வரவேற்பறை சோஃபா நாற்காலி மற்றும் அங்குள்ள சுவற்றின் நிறத்திற்கேற்ற வர்ணம் , துணியின் தரம், அதை தைக்க தேர்ந்தெடுக்கும் வடிவமைப்பு என பல அம்சங்களில் கவனிப்பைச் செழுத்தி நமது இல்ல அழகுக்கு அழகு சேர்க்கிறார்கள். பொதுவாக விலைக்கேற்ற படியே இதன் அழகும் தரமும் அமைவதால், அனேக பெண்கள் நடு நிலையில் நிற்பதையே விரும்புகிறார்கள்.

வெளியில் இருந்து வரும் தூசியினை தடுத்து தங்களோடு ஈர்த்துக் கொள்பவை இந்த திரைச்சீலைகள்.  சாலை ஓரங்களில் வசிப்போர் இதை குறைந்தது  வாரத்திற்கு இரு முறையாவது துவைத்து சுத்தம் செய்து விடுவதை வழக்கத்தில் கொண்டிருப்பர்.  கிராமப்புறங்களில் இருப்போர் சிலவாரங்களுக்குப் பின்னும், சிலர் மாதத்திற்கொரு முறை என்றும் சுத்தம் செய்வதுண்டு. 



அடுத்தது வீட்டின் உள்ளேயும், வெளியேயும் நாம் பூசுகின்ற வர்ணங்கள்.

நமக்கு நன்றாக பிடித்திருந்தால்  மட்டும் போதாது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்ற  வர்ணங்களே சிறந்த தேர்வாகும்.  நம்மைச் சுண்டி இழுக்கும் வர்ணங்களின் நடுவே, மனதை அசௌகரியப் படுத்தும் வர்ணங்களும் உண்டு என்பதை உணர்ந்து அவற்றை தவிர்த்து விடவேண்டும்.

ஆக, புதுமையை புகுத்துகிறேன் என யாரும் உபயோகிக்காத ஒன்றை கையில் எடுப்பதை விட பலருக்கும் பிடிக்கும் வர்ணமே சிறந்தது.

அலுவலக வேலையைவிட வீட்டினை பராமரிப்பதென்பது இன்னும் சிரமான ஒன்று என்கிறார் திருமதி. ராஜேஸ்வரி தியாகராஜன்.  இவர் அன்மையில்தான் தனது இல்லத்தினை மறுசீர் அமைத்து, வீட்டின் உள்ளே வர்ணத்தினையும் மாற்றி அழகு படுத்தி இருக்கிறார்.



தற்போதைய நவீன காலத்தில், அனேகமாக எல்லோர் வீடுகளிலும் தொழில் நுற்பத்தின் வளர்ச்சி தெரிகிறது.  லேட்டஸ்ட் மாடல் தொலைகாட்சி, இணைய இணைப்புடன், வீசிடி, டிவிடி என அதன் சுற்றத்தாருடன் நமது வரவேற்பறையை ஆக்ரமித்துக்கொண்டிருப்பது நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் அவற்றின் மேல் படியும் தூசியைத் தட்டி சுத்தப்படுத்துவது  தாய்க்குலத்தின் அன்றாட வேலையாகிறது.


கணினி இன்றி இணையம் இப்போது நம் இல்லங்களின் வரவேற்பறைக்கு வந்து விட்டது பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான் என்றாலும், சிறு பிள்ளைகள் இருக்கும் குடும்பங்களில் உள்ளோர் அதன் நன்மை தீமைகளை அளந்து அதன் பயன்பாடு இருப்பதை உறுதி செய்து கொள்வதே நலம் தரும் செயலாகும்.

மேலே படங்களில் : திருமதி. ராஜேஸ்வரி தியாகராஜன்

No comments:

Post a Comment