Tuesday 27 December 2011

எண்ணங்கள் ஆயிரம்...6 சிலாங்கூர் டிரெட்ஜிங்





டெங்கிலில் உள்ள சிலாங்கூர் டிரெட்ஜிங் என்னும் இடத்தில் நான் 1978ல் இருந்து 1993 வரை பணியிலிருக்கும் போது நடந்த ஏராளமான நிகழ்வுகள் என் மனதை எப்போதும் நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.

அது ஒரு ஈய லம்பம். ஈயக்கப்பல் மூலம் மண்ணுக்கு அடியில் இருக்கும் ஈயத்தை தோண்டி எடுத்து வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது எங்கள் வேலை. 80ம் ஆண்டுகளின் உற்சக்கட்டத்தின் போது சிலாங்கூர் டிரெட்ஜிங் நிருவனத்திடன் இரண்டு ஈயக்கப்பல்கள் இருந்தன.



( உதாரணப் படங்களாக இங்கே கொடுத்திருப்பது "தீமா லங்காட்" நிறுவனத்திற்குச்சொந்தமான ஒரு ஈயக்கப்பல். தேவையற்று, மதிப்பிழந்து, சீண்டப்படாத ஒன்றாக சோகமே உறுவான நிலையில் காட்சி தரும் இந்தக் கப்பல் பல ஆயிரம் பேர் உயிர்வாழக் காரணமாக இருந்தது அன்று. )



சுமார் 150 இந்தியக்குடும்பங்களின் ஜீவாதாரமாக இருந்தது அன்றைய ஈயம் தோண்டி எடுக்கும் தொழில்.

ஈச்சமர அல்லது பால்மர எஸ்டேட்டுகளைப் போலவே ஈய லம்பத்தில் பணிபுரிவோர் தங்கும் இடமும் இருக்கும். சம்பளம் குறைவாக இருந்தாலும் தண்ணீரும் மின்சாரமும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

தங்களின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்தாலே போதும் என அன்றைய மக்கள் நினைத்திருந்த காலம். லாப நஷ்ட்டத்தைப் பார்க்காவிட்டாலும் அன்று அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம்.

ஆண்டுதோறும் கோயில் திருவிழாவும் உண்டு.

 நிறைய நண்பர்கள் எனக்கிருந்தனர். தமிழர், சீனர், மலாய்க்காரர்கள் என பேதமில்லாமல் நிஜமாகவே நல்ல நட்புறவோடு பழகிவந்த அந்த காலத்தை நினைக்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.




வேலை நேரத்தினிடையே கூட கூத்தும் கும்மாளமுமாக நாங்கள் ஆட்டமும் பாட்டுமாக செலவிட்ட அந்த நெஞ்சிலிருந்து அகலா நினைவுகளை எண்ணிப்பார்க்கும்போது முகத்தில் ஒரு புன்முறுவல்தான் மிஞ்சுகிறது.


 பின் பக்கத்தில் தெரியும் ஈய கப்பல்தான் எங்களின் ட்ரெஜ் 2. என்னுடன் இருப்பது சொங்.

பெரியசாமியுடன் டிரெஜ் 1 பகுதியில் எடுத்த படம் இது.


(மேலே: சிலாங்கூர் டிரெட்ஜிங்கிலில் நான் பணிக்கு சேர்ந்தபோது நண்பர்களானோம். நல்ல மனது படைத்தவர் ...ஏனோ அற்ப வயதில் காலமாகிவிட்டார். எலோருக்கும் உதவும் குணம் கொண்டதனால் மிகவும் பிரபலமானவர்.... விஜயன் என்றால் யார் என்று தெரியாதவரே அன்று இருந்திருக்க முடியாது. )



1978ல் வேலைக்கு புதிதாய் சேர்ந்த போது வார கடைசி நாட்களில் விஜயனின் மோட்டார் சைக்கிளில் என்னை வீட்டில் கொண்டுவந்து விட்டுச் செல்வார். பந்திங் நகரில் இருந்து 4 மைல் தொலைவில் கன்சோங் டாரட் என்னும் இடத்தில் தங்கி இருந்த நாட்கள் அவை.

அலுவலகத்தில் மற்ற இனத்தவர் அதிகம் வேலை செய்துகொண்டிருந்த 1978 - 1982 காலங்களில் விஜயனும் நானும் மட்டுமே தமிழர்கள். அதனாலேயே எங்களுக்குள் அப்படி ஒரு நெருக்கமான நட்பு. எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று கலந்து கொள்வோம். யோகதாஸ் திருமணத்தின் போது எடுத்த படம் இது. அந்தப்பக்கம் நிற்பவர்தான் கந்தையா...

பட படவென்று பொரிந்து தள்ளும் பழக்கம் நம்மவர்களிடையே மட்டுமல்ல, மற்ற இனத்தவரிடம் உண்டு. பாரம் தூக்கியை அந்த நாளில் ஓட்டிய சுலைமான் என்னருகில் நிற்கிறார். இவரிடம் நல்ல பெயர் எடுப்பது சுலபமல்ல...ஆனால், பழகிவிட்ட பின் ஆச்சரியப் படும்படி நடந்து கொண்ட ஒரு நண்பர். எனக்கு முதன் முதலில் பாரம் தூக்கியில் "கார்" ஓட்டக் கற்றுத்தந்தவர். பத்து வருடங்களுக்குப் பின், " எல்லோரும் கார் ஒட்டக்கற்றுக்கொண்டபின் பாரம் தூக்கியை ஓட்டுவது எப்படி என்று ஓட்ட வருவார்கள்... நீயோ என்னிடம் பாரம் தூக்கியைக் கற்றுக்கொண்டபின் கார் ஓட்டக்கற்றுக்கொண்டது இன்னும் என் நினைவில் இருக்கிறது" என்று என்னிடமே கிண்டல் அடிப்பார்.





1980களின் தொடக்கதில் என்னுடைய தோற்றம்.

 பெயர்: ஹியு செ ஹொங். அப்பா டெங்கில் பட்டனத்தில் சீன மருந்துக்கடை முதலாளி. சீன நாட்டு வைதியத்தின் மூலம் எல்லாம் சரியாகும் என்று தந்தையின் தொழிலை பிரகடனப்படுதுவார். பல நேரங்களில் ஒரு சீன சின் சே கைவசம் இருந்தது உபயோகமானதாகவே இருந்தது. 13.5.1980ல் எடுத்த படம் இது.

 1978ல் நான் முதன் முதலில் வேலைக்கு சென்றபோது என்னுடன் அலுவலகத்தில் இருந்தோரில் முக்கியமான இருவர். ஹியு சே ஹொங் & இஸ்மையில் காமிட். புகைப்படம் எடுத்த தேதி: 26.1.1979

வேலை செய்யும் எல்லா இடங்களிலும் சில காமிடியன் கள் இருப்பார்கள். எங்களுக்கு வாய்த்த காமிடியன் கள் இவர்கள். மஸ்ரிட் மஸ்சோட் & அஹ்மாட் டான் ஸீஸீ. ஸீரியஸாக வேலை பார்த்துக்கொண்டிருப்பது, இஸ்மையில் காமிட்.

1 comment:

  1. old is gold...these old pictures should be kept for the future generation..
    Amazing pictures

    ReplyDelete