Wednesday 7 December 2011

எண்ணங்கள் ஆயிரம்...சாமி

 நல்ல மனம் வாழ்க... நாடு போற்ற வாழ்க. . .


இவருதாங்க சாமி.
வெறும் சாமியில்லேங்க, பெரியசாமி.

ஒரு அணைத்துலக பள்ளிக்கூடத்திலே பெரிய பொறுப்பிலே இருக்காரு. ஆனா ரொம்ப சிம்பிளா நடந்துக்குவார். நல்ல வசதியிருந்தும் எவ்வித பந்தாவும் இல்லாதவர்.

பலாப்பல கதை தெரியுமில்லே... அது மாதிரிதான் இவரு. வெளியே சொரசொரப்பா இருந்தாலும் உள்ளே சொக்கத்தங்கம். வீக்னஸ் ரெண்டு மூனு இருக்கு. அதுக்கென்ன...யாருக்குத்தான் இல்லே இப்போ.?

அந்த கால நகைச்சுவை நடிகர் தங்கவேலு ஐயா தனக்கு கஷ்ட்டம் கொடுக்கிறவங்களையும் பார்த்து ஒன்னு சொல்லுவாராம்,
 " அட நீ நல்லா இரு"ன்னு. தனது நடிப்பிலேயும் அதே மாதிரிதான் நடித்தாராம். அதைப்போலத்தான் இந்த சாமியும்...

இவரோடு பழகுறவங்க என்ன கெடுதல் இவருக்கு செய்தாலும், "அட வாழ்கிற வாழ்க்கை கொஞ்ச நாள்தான்... அவங்க நல்லா இருந்துட்டு போகட்டும்"ன்னு சொல்லுவாரு. ஆன்மீகத்திலே நாட்டம் அதிகமாக ஆக இப்படி பேசப் பழகிட்டார்.

முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னரைப்பற்றி படிச்சிருப்போம். இவருக்கும் அதே மாதிரி எண்ணம்தான். இவரோட பண்ணையிலே இருக்கிற கோழி, வான்கோழி, வாத்து மற்றும் ஆடுகளும் இவரோட ஒன்றரை லட்ச ரிங்கிட் மதிப்புள்ள காரிலே ஏறி நின்னு கும்மாளம் போடுங்க.

நீங்களே பாருங்க...கையிலே கிடைக்கிறதை எடுத்து போட்டுத்தள்ளாம, "அம்மா, கண்ணு, என் செல்லம், கீழே இறங்கிடும்மா"ன்னு கெஞ்சியபடி நிக்கிறார். நம்மால முடியுமா இது....?


யாரோ என்றோ எனக்குச் சொன்னது நினைவிற்கு வருகிறது.
"உலக பொருள் மீது நாட்டம் எதுவரை....?
நோயும் பாயும் துணையாகும்வரை!!! "

ஆரோக்கியத்தின் எல்லையில் இருக்கும்போது ஆர்ப்பாட்டமில்லாமல் இப்படி அமைதியாக நடப்பது மிகச்சிலருக்கே அமையும்.

அவரின் குடும்பத்தினர் படங்கள் சில இங்கே...





No comments:

Post a Comment