Friday 2 December 2011

அன்புள்ள நண்பர்களே. . .

இன்றைக்கு பரபரப்பாகப் பேசப்படுவது  "மெடிக்கல் கார்ட்”.

குறிப்பிட்ட வருவாய் பிரிவில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மக்களையும் கவரும் விதமாக அது உருவாக்கப்பட்டுள்ளது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நிஜம்தான் என்றாலும், நோய் வந்தபின் அதை குணப்படுத்தாமல் விடமுயுமா? நோயின் போதும் விபத்தின் போதும் நமக்கு தேவைப்படும் மருத்துவ செலவிற்கான பெரிய தொகையை கொடுக்கப்போவது யார் ..?,

மாறிவரும் புதிய உணவுப் பழக்க வழக்கங்களான "பாஸ்ட் புட்' கலாச்சாரம்,

குடும்பத்தில் கணவன் - மனைவி இருவரும் பொருள் ஈட்ட வேண்டிய அவசியம்,

சாக்கடைகளை, குப்பைத் தொட்டிகளாய் மக்கள் மாற்றியதாலும், ஆரோக்கியமற்ற, சத்து குறைவான மற்றும் கலப்பட உணவுப் பொருட்களால் பெருகி வரும் புதுப்புது நோய்கள், அவ்வப்போது தோன்றும் தொற்று நோய்களால், புயலுக்கு பெயர் வைப்பது போல, புதிய புதிய பெயரால் உலாவரும் உள்நாட்டு, வெளிநாட்டு நோய்கள்,

இவற்றோடு கடந்த சில ஆண்டுகளாக அதிகமாகி வரும், சர்க்கரை,  மற்றும் இதய நோய்கள், ஜீரண உறுப்பு உணவுப் பாதை நோய்கள் என, நோய்களின் பரந்து விரிந்த சாம்ராஜ்யம் மறுபுறம்,

இதன் காரணமாக உருவாகி வரும், "பல்துறை சிறப்பு மருத்துவமனைகள்' ( மெடிக்கல் சென்டர்) காது, மூக்கிலிருந்து, உடலின் ஒவ்வொரு அங்கங்களுக்கும் தனி மருத்துவர் என்ற நிலை-

இப்படி பல சிரமமான விஷயங்களை யோசிக்க முடியாத, மன அழுத்தத்தை அதிகமாக்கும், "விரைவு வாழ்க்கை' முறையில் வாழ்ந்து வருகிறோம் நாம்.

இது போன்ற அபாயகரமான, நமக்கு பொருளாதர ரீதியில் நஷ்ட்டம் ஏற்படக்கூடிய சூழ் நிலையில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள இரண்டு வழிகளே உண்டு.

ஓன்று, நல்ல உணவுப்பழக்கத்துடன், சீரான உடற்பயிற்ச்சி கலந்த கட்டுப்பாடான, இயற்கையோடு ஒன்றிப் போகக்கூடிய நன்னெறி வாழ்க்கை முறை.

இரண்டு, உயர்ந்துகொண்டு போகும் மருத்துவச் செலவுகளை கண்டு மிரண்டு போகாத துணிவு. இதற்கு நமக்குத் தேவை : எல்லா சலுகைகளையும் உள்ளடக்கிய ஒரு நல்ல மெடிக்கல் கார்ட்.  இந்த சிறந்த சேவையை ING மெடிக்கல் கார்ட் உங்களுக்கு வழங்குகிறது.

பல்துறை சிறப்பு மருத்துவப் பிரிவுகள் கொண்ட மிகப்பெரிய  மருத்துவமனைகளில், பணக்காரர்களுக்கு கொடுக்கப்படும் உயர்தர சிகிச்சைகள்  சாதாரண ஏழைக்கும் கிடைக்கும் படி கொண்டுவரப்பட்டதுதான் இந்த  மெடிக்கல் கார்ட். இது தற்போது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அதோடு, காப்பீடு பாலிசிக்கு செலவிடப்படும் பிரிமியத்தை ஒரேயடியாக இல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை, இருமுறையென பிரித்தும் கட்டலாம். இதனால் பாலிசிதாரருக்கு இது ஒரு பெரும் சுமைபோல தெரியாது.

ING மெடிக்கல் கார்ட் உங்கள் தேவையின் போது உதவிக்கு வரும்  உற்ற துணை.

No comments:

Post a Comment