Wednesday 30 November 2011

வரவேண்டிய நேரத்தில் சரியா வரனுமில்லே...

காலை - 5.30
"பெண்ணைக் காணோம்,  பெண்ணைக் காணோம்..."

ஒரே பரபரப்பு அந்த அரங்கத்தில்.
 
எல்லோரும் காத்திருந்தனர். பிரம்ம முகூர்தத்தில் அதிகாலைக்  கல்யாணம் அது.

"என்ன பெண்ணைக் காணவில்லையா?" அவர்களோடு சேர்ந்து நானும்  பதற்றப்பட்டேன்.

" அப்படி இல்லைங்க...பெண் இன்னும் வரவில்லையாம் அரங்குக்கு. திருமணம் 4.30லிருந்து 6.00 வரை"

மனைவி விளக்கிட என் கை கடிகாரத்தை பார்த்தேன். காலை 5.30. இன்னும் அரை மணி நேரத்தில் நல்ல நேரம் முடிந்துவிடுமாம். எல்லோருடைய கவனமும் அதுதான் என்று புரிந்தது.

பெண்ணின் தகப்பனார் எனது இனிய நண்பர். அவரை நோக்கிச் சென்றேன்.

"என்னாச்சு...? நேரம் போய்கிட்டே இருக்கே...?"
   மெல்ல பேச்சுக்கொடுத்தேன்.

"கவலைப் படும்படி ஒன்னும் இல்லே ராஜ். சிகை அலங்காரத்துக்கு போன பெண் இப்போதான் வந்துகிட்டு இருக்கு. இதோ வந்திடும்..."
  என்று புன்னகைத்தார்.

"என்ன பிள்ளைங்க இவங்க...? சிகை அலங்காரத்துக்கும் முக அலங்காரத்துக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை இவர்கள் தங்களது வாழ்வின் மிக மங்களகரமான முகூர்த்த நேரத்துக்கு தரவில்லயே? இப்போதே இயற்கைக்கு மாறாக நடந்து கொள்கிறார்களே, போகப் போக எப்படியோ? அக்னி வார்த்து, அருந்ததி பார்த்து, அம்மி மிதித்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் வந்திருந்து வாழ்த்தி தொடரப்போகும் ஒரு பூர்வஜென்ம பந்தம், துவங்கும் போதே தத்தளிக்குதே... "

எங்களுக்கு முன் அமர்ந்திருந்த இரு பெரியவர்கள் பேசிக்கொண்டது காதில் விழுந்தது.

என் மனைவியின் பக்கம் திரும்பி, " நேரத்தை மதிக்கும் பழக்கம் எவ்வளவு முக்கியம், பார்த்தியா?" என்று என்னுடைய இயல்பான நமட்டுச்சிரிப்பில் கிசுகிசுத்தேன்.   

"வயதான பெரியோர்களை மதித்தாவது சற்று விரைவில் வந்திருக்கனும்...இல்லே?" என்றார்.
 

( இழந்துவிட்ட நேரம் திரும்ப வருவதில்லை.... சரியான நேரத்தில் சரியானதைச் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுவோம். மிக முக்கியமாக பொது இடங்களிலும் பொது நிகழ்வுகளிலும் மற்றவர் நேரத்தை வீனடிப்பதை தவிர்ப்போம்.)


காலை - 9.30
 



"வரவேண்டிய நேரத்தில் வரவில்லையே, தம்பி?"  என்றேன்.
   
"வரும் நேரத்தில் பல அழைப்புகள் கைபேசியில். பேசி முடித்துப்  புறப்பட நேரம் ஆச்சு,  அண்ணே"  என்றார்.

அழைப்புக்கிடையில் எனக்கொரு  தகவல் தந்திருந்தால் உன்னை எதிர்பார்த்து வீனே நேரம் போயிருக்காதே...காக்க வைப்பது பாவமன்றோ?"  என்றேன்.
 
"சாரி" என்று சொல்லி காரணங்கள் பல சொன்னார்.
 
நீதிக்கு பரிகாரம் சட்டத்தில், பாவத்துக்கு பரிகாரம் தர்மத்தில்"  என்றேன்.
 
கண்களை இருக்க மூடி, "இனி மாட்டேன்..."  என்றார்.
 

( "தூங்காதே தம்பி தூங்காதே," என எம் ஜி ஆர் அன்று சொன்னதன் உண்மைப் பொருள் தூக்கத்தைப் பற்றி அல்ல. " நேரத்தை தொலைத்துவிட்டு முன்னேற்றத்தை இழந்திடாதே," என்பதுதான்.... )

1 comment:

  1. இரண்டு கேள்விகள் : 1, அந்த மணப்பெண் எத்தனை மணிக்குத்தான் வந்தார்...?
    2, தூங்காதே தம்பி தூங்காதே MGR பாடியதா???

    ReplyDelete