Saturday 19 November 2011

எண்ணங்கள் ஆயிரம்...2

"தித்தித்தது". . . தமிழின் இனிமை இது.

"வெவ்வவ்வவ்வே" என்பது விளையாட்டாக பழிப்பு காட்டும் ஒரு சொல்.

இன்னொரு சொல்லும் உண்டு...." லாலல்லல்லா"

அர்த்தமின்றி வரும் சத்தத்தின் வெளிப்பாடு என்றெண்ணாதீர்கள். இந்த " லாலல்லல்லா" என்பது ஒரு சாதாரணச் சொல் அல்ல. இதயம் இனிக்கும்போது இன்பத்தின் அளவுகோளாக அமைவது இச்சொல்.

கடைசியாக நீங்கள் எப்போது இப்படி "ஹம்மிங்" பாடி எண்ணத்தில் மகிழ்ந்தீர்கள் என்று எண்ணிப்பாருங்கள். "அடிக்கடி" அல்லது "அவ்வப்போது" என்றால் மகிழ்ச்சி....வாழ்த்துக்கள். இல்லையேல், உங்கள் வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

சாதாரண தமிழில் நாம் பேசுவதும் படிப்பதும் சிரமமாகிக் கொண்டுவரும் இந்த நாட்களில், பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களைப் பற்றி அறிந்திருக்க ஞாயமில்லைதான். தமிழ் மீது அதிகம் பற்றுள்ளவர்களுக்கும் படிக்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்டிருப்போருக்கும் தெரிந்திருக்கும்.

வரதன் என்று ஒருவன்  இருந்தான்.
சைவ சமய நடன மாது ஒருத்தியை அவன்  விரும்பினான்.

ஒரு நாட்டிய நிகழ்ச்சியொன்றில் திருவெம்பாவைப் பாடலுக்கு அபிநயம் பிடித்து ஆடிக்கொண்டிருக்கையில்  அவளது தோழிமார்கள், "இப்படிப்பட்ட சைவ சமயப் பாடலுக்கு ஆடும் இவள் ஒரு வேற்று மதத்தினனைக் காதலிக்கிறாளே" என கேலியாகப் பேசுவது காதில் விழ வேதனைப்பட்டாள்.  தான் வேற்று மதத்தைச் சார்ந்தவனாக இருப்பதறிந்து பிணங்குகிறாள் என்பதைத் தெரிந்து கொண்ட வரதன் அக்கணமே சைவ சமயத்தில் சேர்ந்தான்.

ஒரு நாள் இரவு வரதன் கோவிலில் தங்கி உறங்கிக்கொண்டிருந்தான். அதே கோவிலில் நீண்ட காலமாகக் காளியின் அனுக்கிரஹம் வேண்டி வேறொருவனும் தவம் செய்துவிட்டு அன்றிரவு கோவிலிலேயே உறங்கிக்கொண்டிருந்ததான்.

காளி தேவி மனம் இறங்கி அவன் தவத்துக்குப் பலனளிக்க ஒரு சிறுமியாக உருவெடுத்து,  தன்னை வழிபட்டு தவம் செய்தவனை எழுப்பி அவனுக்கு அருள்பாலிக்க எத்தனிக்கையில்,
 "யாரடி எச்சிற்றம்பலத்தை என் வாயில் உமிழ்வது?"
ன்று அவன் கோபம் கொள்ளவே, அண்ணை காளி அருகில் படுத்திருந்த வரதனை எழுப்பி அவன் வாயில் அருள் தர முயற்சிக்கையில், அவன் அவள் தனது காதலியோ, எங்கே தான் வாய் திறவாவிடில் மறுபடியும் கோபித்துக்கொள்வாளோ என்றெண்ணி வாயைத் திறந்தான். காளி தேவியின் அருளினை உண்ட வரதன் கவிபாடும் புலமை பெற்றான். அன்றுமுதல் அவன் சொல்லும் அணைத்தும் கவிமழையாய்ப் பொழிந்ததால் வரதனை அனைவரும் காளமேகம் என்று மரியாதையுடன் அழைக்கலாயினர்.

“பிறப்புற்றேன் காளியிடம் பேரன்புற்றேன்,
பேச்செல்லாம் கவிமழையாய்ப் பெருகும் ஞானம்

வரப்பெற்றேன், செல்வத்தின் வளமும் பெற்றேன்,
மன்னருடன் சரிசமமாய் மகிழும் வண்ணம் சிறப்புற்றேன்...”

என்று கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளுக்கொப்ப, காளிதேவியின் அருளால் கவிபாடும் திறம்பெற்று மகா கவி காளிதாஸ் என்று பின்னாளில் அழைக்கப்பட்ட அந்த காளமேகப் புலவரின் ஒரு பாட்டினை அடுத்து காண்போம்.

சிலருக்கு தலைச் சுற்றலாம்...ஆயினும் மீண்டும் மீண்டும் படிக்க இது விளங்கிடும். ஓரு பழைய தமிழ்ப்பாட்டொன்றும் உண்டு இந்த கவிதயினை ஒட்டி.

"தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிது தொத்தித்த தூதே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி"

இதுதான் அந்த காளமேகப் புலவரின் பாட்டு.

தெறியாத வார்த்தைகளுக்கு விளக்கங்களும் இந்த பாட்டின் அடியே கொடுத்திருப்பார்கள். காளமேகப் புலவரின் விளக்கம் இதோ....





தாதி                         - தோழியின்
தூதோ              - மூலமாக அனுப்பும் தூது
தீது                            - நன்மை பயக்காது
தத்தை                    - நான் வளர்க்கும் கிளியோ
தூது                   - தூதுப்பணியில்
தூதை ஒதாது   - திறம்பட சொல்லத்தெறியாது
தூதி தூது          - தோழியின் தூதோ
ஓத்தித்த தூததே - நாளைக் கடத்திக் கொண்டே போகும்
தாதொத்த         - ஆகவே பூந்தாதினைப் போன்ற
துத்தி                    - தேமல்கள்
தத்தாதே            - என் மேல் படராது
தேதுதித்த         -தெய்வத்தை வழிபட்டுத்
தொத்து                 - தொடர்தலும்
தீது                           - தீதாகும்
தித்தித்தது      - தித்திப்பு நல்கும் என் காதலனின் பெயரை
ஓதித் திதி       - ஒதிக் கொண்டிருப்பதையே செய்வேனாக.
 “த” கரத்தில் அமைந்த இப்பாடல் தமிழின் இனிமையை எடுத்துக்காட்டுகிறது.
அட இன்னொரு முறை படிங்க,  உங்களுக்கும் பிடிக்கும் தேனமுதமாம் தமிழை...

No comments:

Post a Comment