Wednesday 2 November 2011

புத்ராஜெயாவில் மழை...




தமிழ் நாட்டுல பெய்யிற மழையை பார்த்ததும் இந்த படங்களின் பதிவுக்கு "புத்ரா ஜெயாவில் மழை"ன்னு தலைப்பு கொடுக்கலாம்னு நினைச்சேன்... ஆனா, என்றைக்கு  இங்கு மழை பெய்யல அப்படி ஒரு தலைப்பு வைக்க?  தினமும் மழை கொஞ்சமாவது வந்துதான் போகுது... மற்ற நாடுகளில் நடப்பதைப் போல தலைக்கு மேலே போகாமல் இருந்தால் சரி... 

நிஜத்தில் மழையும் ஒரு அழகுதான், அளவோடு இருந்தால்!!!


முன்பெல்லாம் மழைவந்தால் சட்டைப்பையில் உள்ளதை பத்திரப் படுத்த பக்கத்திலுள்ள ஏதாவதொரு இடத்தினுல் நுழைவேன். இப்போ நிலைமை கொஞ்சம் மாறிடுச்சி...சிறு தூற்றலானாலும் தலையைக்கையால் மூடியவண்ணம் ஓடவேண்டியதாகிவிட்டது... இருக்கின்ற சில முடிகள் சட்டைப்பையில் இருக்கும் எல்லாவற்றையும்விட முக்கியமானதாக போய்விட்டது...

ஹ்ம்ம் எல்லாவற்றுக்கும் ஒரு நேரமும் காலமும் உண்டு என்பது இதனால்தானோ?


"மனதிலிருப்பதைப் பேசுங்கள். அதைக் கேட்பதற்கு மழையைப் போல வேறு யாருமில்லை. நீங்கள் சொல்வதைக்கேட்க துளித்துளியாய் சரஞ்சரமாய் இறங்கிவரும் அதைப் புறக்கணிப்பானேன்? மௌனமும் பேச்சுத்தானென்று தெரிந்தோர் ரசிக்கின்றனர்."
- என்னைவிட பத்து மடங்கு மழையை ரசிக்கும் பல இனிய மனங்களின் கூற்று இது.... இணையத்தளத்தில் என்றோ படித்த ஞாபகம்.



அது சரி, நம்ம கவிஞர்கள் மழையைப் பற்றி எவ்வளவு பாடல்கள்தான் பாடி இருக்கிறார்கள்....?

சீரியஸாக ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு...?

ஜப்பான் ஏர்போர்ட் ரன்வேயில் விமானம்  இறங்குவதை விட வேகமாக வெள்ளம் சீறிப்பாய்ந்து இறங்கியதாம், இவ்வாண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட சுனாமியின் போது. 

ஒரு மழை பெய்யும் காரணமாக வெள்ளம் என்றால் நமக்கு நன்றாக தெரியும்... ஆனால் வானம் நன்றாக இருக்கும்போது பல ஏக்கர்  விமான நிலையம் திடீரென்று தண்ணீரில் முழ்குவது நமக்கு வியப்பை அளிக்கிறது.
யூடியூபில் இதுபோன்ற மனதைத்தொடும் பல காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். 

No comments:

Post a Comment